Read in : English

Share the Article

கடந்த ஆண்டில், அதாவது 2020இல் கோவிட்19 என்கிற கொரோனா பெருந்தொற்று கொடிகட்டிப் பறந்தபோது நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு, அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தார்கள். அலுவலகங்கள் மூடப்பட்டு வீட்டிலிருந்து வேலை ஐ.டி. காரர்களுக்கு. பலருக்கு வேலை போச்சு. சாமானிய மக்களில் பலரின் வாழ்வாதாரம் பறிபோனது. புலம் பெயர்ந்து வந்து இங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்கள் எப்பாடு பட்டாவது சொந்த ஊர் திரும்புவதற்குத் தலைப்பட்டார்கள்.

கொரோனா வந்தால் என்ன செய்வது என்று எண்ணி கபசுரக் குடிநீரைக் குடித்தார்கள். தொற்று வந்தவர்கள். மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர்கள் இறந்து கொரோனா நோயாளிகளில் இருந்த பகுதிகளில் தனிமப்படுத்தப்பட்டன. பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. டாஸ்மாக் கடைகள் சிறிது காலம் மூடப்பட்டு பின்னர்தான் திறக்கப்பட்டது. எந்த நோய்த் தொற்றுக்கும் பயமில்லை என்று அங்கு கூட்டம் வரிசை கட்டியது. பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளிலும் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஐ.டி. பணியிலிருந்தவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். திரையரங்குகள் மூடப்பட்டன. வீடுகளில் முடங்கிக் கிடந்தவர்களுக்காக ஓடிடி இணைய தளத்தில் புதிய படங்கள் வெளியாகின. கொரோனா நோய் வராமல் தடுக்கும் வகையில் முன்எச்சரிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிந்தார்கள். அடிக்கடி கைகளைக் கழுவுங்கள் என்றும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டது. அதைக் கேட்டவர்கள் பலர். கேட்காமல் கூட்டமாக சந்தைகளிலும் கடைகளிலும் கூட்டமாகக் கூடியவர்கள் பலர்..

கொரோனாவுக்குத் தடுப்பூசி தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வந்த சூழ்நிலையில், ஒரு தடுப்பூசி வந்தால் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடாதா என்று கருதினார்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசியும் வந்தது. முதல் டோஸ் போட்டார்கள். இரண்டாம் டோஸும் போட்டார்கள். இதற்கிடையில் கொரனாவின் இரண்டாவது அலை வந்து அனைவரையும் பயமுறுத்தியது. கொரோனா தொற்று பரவல் அதிவேகமாகப் பரவத் தொடங்கிய நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடந்து புதிய அரசும் வந்து விட்டது.

கொரோனா தொற்று பரவல் அதிவேகமாகப் பரவத் தொடங்கிய நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடந்து புதிய அரசும் வந்து விட்டது.

கொரோனா தொற்றினால் நோயாளிகளால் மருத்துவமனைகள் மீண்டும் நிரம்பி வழியத் தொடங்கின. தற்காலிகமாக பல்வேறு இடங்களில் புதிய படுக்கையுடன் கூடிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இருந்தும், மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் மருத்துவ ஊர்திகளிலேயே நோயாளிகள் சிகிச்சை பெறும் நிலையும் ஏற்பட்டது. நோயாளிகளுக்கு போதிய ஆக்ஸிஜன் வழங்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறின. வட மாநிலங்களில் இதனால் பலர் உயிரிழந்தனர். பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு ரயில் மூலமும் விமானமும் ஆக்ஸி•ஜன் கொண்டுவரப்பட்டது. அப்புறம் அந்த அளவுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படவில்லை.

திடீரென்று உயிர் காக்கும் மருந்து என்று சொல்லப்படாத, அதேசமயம் கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய  ரெம்டிசிவர் மருந்து வாங்குவதற்காக தமிழக அரசு மருத்துவமனை வாசல்களில் பெருங்கூட்டம் காத்திருந்தது. அப்புறம் திடீரென்று இந்த மருந்து வாங்க ஆட்களையே காணோம்.

அப்புறம் கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. நம்மைப் பிடித்த ஒரு பீடை விலகத் தொடங்கியது என்று மக்கள் நினைத்தார்கள். நாட்டில் 100 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு சாதனை புரிந்தந்துள்ளதாக மத்திய அரசு பெருமிதப்பட்டது. நோயும் கட்டுக்குள் வந்துவிட்டதாகக் கருதி, மக்களும் புதிய இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். Ðபள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் கூட சமீபத்தில் திறக்கப்பட்டன. திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டன.

இதற்கிடையில், கொரோனாவின் பங்காளி ஓமைக்ரான் என்ற உருமாற்றமடைந்த புதிய வகை வைரஸ் தென்னாப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அது இந்தியாவிலும் பரவி அனைவரையும் மீண்டும் பயமுறுத்த் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் இந்த புதிய தொற்றுக்கு ஆளானவர்கள் கண்டறியப்பட்டார்கள். கொரோனாவுக்குப் போய்வா என்று விடை கொடுத்தாலும் நாம் அழைக்காமலே ஓமைக்ரான் வந்துவிட்டது. மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட வேண்டுமா என்ற யோசனைகளும் விவாதத்துக்கு வந்துவிட்டன. முடியல என்று மக்கள் கதறுகிறார்கள்.

சென்ற ஆண்டு பட்ட பழைய கஷ்டங்கள் இந்த ஆண்டு பழகிப் போய்விடும். இந்த ஆண்டு கஷ்டமாகத் தெரிவது புதிய கஷ்டங்கள்தான். சென்றிடுவேன் வழி அனுப்பு என்கிறது 2021. இதோ வந்து வருகிறேன் என்று வருவதற்குக் காத்திருக்கிறது 2022. இந்த ஆண்டின் இறுதியில் வந்துள்ள இந்த அச்சுறுத்தலிருந்து அடுத்த ஆண்டின் தொடக்கத்திலாவது விடுதலை கிடைக்குமா என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

துன்பம் வரும்போது சிரிங்க. இந்த ஆண்டு கடைசியில் உங்களுக்காகச் சிரிக்க சில மீம்ஸ்கள்…


Share the Article

Read in : English