English தமிழ்

Share the Article

இந்தியாவில் 40 லட்சம் மக்கள் தொகையிலிருந்து 25 ஆயிரம் மக்கள் தொகை வரையுள்ள இந்திய நகர நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பிரச்சினையைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டில் ஒரு நாளில் உருவாகும் நகராட்சித் திடக்கழிவு 1,40,980 டன்கள் என்று மக்களவையின் அதிகாரப்பூர்வத் தகவல் தெரிவிக்கிறது.

நகர்ப்புறங்களில் தூய்மை பாரத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் சவாலான போட்டிகளுக்கு ஐந்து வயதாகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, கழிவுப் பொருள் அகற்றுவதை, குடிமக்கள் மையத் திட்டமாக அறிவித்து, பிரதமரே குப்பைகளைக் கூட்டுவதைப் போலவும், கடற்கரையில் குப்பைகளைப் பொறுக்கி சேகரிப்பதையும் காட்டி அத்திட்டத்தைப் பிரமாதப்படுத்தியது. மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களைப் பயன்படுத்துவதற்கான, உற்பத்தி நுகர்வு பொருளாதார மாதிரியை நோக்கி (சர்குலர் எகானமி) இந்திய நகரங்கள் நகர ஆரம்பித்தன.

அதாவது ஒவ்வொரு ஆண்டும் சேகரிக்கப்படும் குப்பையின் அளவு அதிகரிப்பைக் குறைப்பதற்கும், குப்பைகளை சேகரிக்கும் இடங்களிலேயே பிரித்து எடுப்பதற்கும், குப்பையை மறுசுழற்சி செய்து புதிய பொருள்களை தயாரிப்பதற்கும் மலைபோல கலப்பு உரங்களை உற்பத்தி செய்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தன.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை, சிறந்த பிரகாசமான நகரங்கள் குறித்த ஸ்வத்சித் சர்வேக்ஷன் 2021 என்ற அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 4,320 நகர்ப்புற உள்ளாட்சிகளில், 1,352 நகர்ப்புற உள்ளாட்சிகள் மட்டுமே வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிப்பதாகக் கூறுகின்றன.

அதிலும், குப்பையிலிருந்து மறுசுழற்சி செய்து பொருள்களை உற்பத்தி செய்யவும் குப்பைகள் தனித்தனியே பிரிக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த திடக்கழிவு மேலாண்மை செய்வதற்கும் வசதியுள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளின் எண்ணிக்கை 472 ஆகக் குறைந்துவிடுகிறது.

ஆனால், கழிவுகளை அகற்றும் சேவை நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சுயமாகக் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் குறித்து அறிக்கைகளில் முரண்பாடுகளும் உள்ளன. சேகரிக்கும் இடத்திலேயே முழுக் கழிவுகளைப் பிரித்து அகற்றும் நகர்ப்புற ஊராட்சிகளின் எண்ணிக்கையைவிட, உலர் கழிவுகளில் நூறு சதவீதத்தையும் புராசஸ் செய்வதாகக் கூறும் 945 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது.

மறுசுழற்சி மூலம் பொருட்களைத் தயாரிப்பதற்கான கழிவுகளை தொழில் துறை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் ஏராளமான பிளாஸ்டிக் பொருள்கள் அவற்றுக்குப் பயன் இல்லாதவை. எனவே, பல சரக்குக் கடைகளிலும் மிட்டாய் கடைகளிலும் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டிலேயே மிகவும் நகர்மயமான மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்நாட்டுக்கு ஸ்வத்சித் சர்வேக்ஷன் பட்டியலில் கீழான இடம் கொடுத்திருப்பது வித்தியாசமாகப்படுகிறது.

நாட்டிலேயே மிகவும் நகர்மயமான மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்நாட்டுக்கு ஸ்வத்சித் சர்வேக்ஷன் பட்டியலில் கீழான இடம் கொடுத்திருப்பது வித்தியாசமாகப்படுகிறது.

பல வடமாநிலங்களுடன் ஒப்பிடும்போது பொருளாதார, சமூக நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ள தமிழ்நாடு முதல் பத்து இடங்களுக்குப் பின்னால் இருக்கிறது. 100க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலம் மீண்டும் முன்னணியில் உள்ளது.

அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரமும், மத்தியப்பிரதேசமும் அந்தப் பட்டியலில் உள்ளன. அதாவது, சில மாற்றங்களைத் தவிர்த்து, பட்டியல் கடந்த ஆண்டைப் போலவே உள்ளன. அதாவது, குஜராத், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் முன்னேறி இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளதைத்தவிர.

கழிவு மேலாண்மையில் தமிழ்நாடு பின்தங்கியது போல தோன்றுவது ஏன்? புதுமை ஆக்கம் மற்றும் சிறந்த நடைமுறைகளில் சிறந்த மாநிலத் தலைநகராக பல விருதுகளைப் பெற்ற சென்னை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதே விருதுகளை 2020லும் கூடப் பெற்றிருந்தது. சென்னையும் கோவையும் மதுரையும் 48 பெரிய நகரங்களின் பட்டியலில் கடைசியில் உள்ளன.

அதேசமயம் வேதாரண்யம், வைத்தீஸ்வரன்கோவில், புஞ்சைப்புளியம்பட்டி ஆகிய சிறிய நகரங்கள் தெற்கு மண்டலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இந்த சர்வே அறிக்கையைத் தயாரிக்கக் கடைப்பிடிக்கப்பட்ட முறை குறித்தும் கடந்த காலங்களிலும் கேள்விகள் எழுந்தன. திடக்கழிவுகளைப் புராசஸ் செய்வது குறித்து கவனம் செலுத்தாமல் கழிவு மேலாண்மை மட்டுமே தூய்மையாகப் பார்க்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டு சர்வேயில், சேவை நிலையில் முன்னேற்றம் என்ற பிரிவின் கீழ் அதற்கான மதிப்பு அளவை 25 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அதாவது மொத்தம் 6 ஆயிரம் மதிப்பெணக்ளில் இதற்கு மட்டும் 2400 மதிப்பெண்கள்.

இந்த சர்வே அறிக்கையைத் தயாரிக்கக் கடைப்பிடிக்கப்பட்ட முறை குறித்தும் கடந்த காலங்களிலும் கேள்விகள் எழுந்தன. திடக்கழிவுகளைப் புராசஸ் செய்வது குறித்து கவனம் செலுத்தாமல் கழிவு மேலாண்மை மட்டுமே தூய்மையாகப் பார்க்கப்படுகிறது

சேவை நிலையில் முன்னேற்றம் என்ற இந்தப் பிரிவில் நேரடியாக கவனிப்பதற்கு என, அதாவது குடிமக்களின் குரலுக்கு இந்த 30 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இன்னொரு 30 சதவீதம், அந்த ஊர்கள் பெற்றுள்ள தரச்சான்றிதழ்களுக்கானது.

எனவே, நகரங்கள் ஒரே மாதிரியாக மதிப்பீடு செய்வது தற்போதுவரை தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஒரே மாதிரியான நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு சுயாட்சியான தணிக்கைக்குழு சான்றிதழ் அளிக்கும் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். சர்வேக்ஷன் அறிக்கை பொது வெளியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், பொருட்களை மறுசுழற்சி செய்தல், கழிவுகளைப் புராசஸ் செய்வதற்கான முறைகள், கழிவுகளை கையாளுதலில் வளர்ச்சி அளவு போன்றவை குறித்த மூலப் புள்ளி விவரங்கள், உண்மையிலேயே என்ன சாதிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிக்காட்டும் வகையில் இருக்க வேண்டும். மீண்டும், ஸ்மாட் சிட்டி திட்டம் வேறு நிதி ஆதார வாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை இழந்து விட்டது.

அந்த அறிக்கைப்படி, தமிழ்நாட்டில் 664 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. அதாவது உத்தரப் பிரதேசத்தின் 652 எண்ணிக்கையைவிட இது அதிகம். வலுவான பொருளாதாரச் செயல்பாடுகள், நுகர்வு போன்றவை மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் தெரிகிறது. சென்னைப் பெருநகரத்தில் கழிவுகளை சேகரித்து பயன்படுத்தும் முறை இதற்கு அடையாளம்.

ஆனால் கொள்கை வளர்ச்சியைப் பின்வாங்கச் செய்துள்ளது. எனினும் கழிவு மேலாண்மை ஒப்பந்தங்கள் மூலம் சிஇஎஸ் ஒனெக்ஸ், நீல் மெட்டல் ஃபெனால்கா, காம்கி என்விரோ, சுமித் அர்பசர் போன்ற நிறுவனங்கள் டிரக்குகள் மூலம் கழிவுகளை அகற்றுகின்றன. மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களைப் பயன்படுத்துவதற்கான, உற்பத்தி நுகர்வுப் பொருளாதார மாதிரியை நோக்கி (சர்குலர் எகானமி) செல்கிறதா என்பதை உண்மையிலேயே தெரிந்து கொள்ள முடியவில்லை.

கடந்த ஆண்டு சுமித் அர்பசர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியபோதிலும்கூட, அந்த அமைப்பு சென்னையில் தோற்றுப்போனது.

2016ஆம் ஆண்டு நகராட்சி உலர் கழிவு மேலாண்மை விதிமுறையின்படி, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் எலெக்ட்ரானிக் கழிவுகளை அகற்றுவது குறித்த விஷயங்கள் அதில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலியலாளர்கள் கவலை தெரிவிப்பது போல, கழிவு மேலாண்மை குறித்த விஷயதில் வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால், பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாகப் பயன்படுத்துவது, அதாவது சில எரிபொருள் பயன்பாட்டுத் தொழிற்சாலைகளில் புராசஸ் செய்யப்படாத கழிவுகளுக்கான தீர்வாக இந்த அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது சாத்தியமில்லை. 2021ஆம் ஆண்டு பிளாஸ்டிக் பேன் இந்தியா பிராண்ட் தணிக்கை அறிக்கையிலிருந்து ஐந்து பெரிய நிறுவனங்கள் 70 சதவீத பிளாஸ்டிக் கழிவுகளை (1,49,985 பிளாஸ்டிக் துண்டுகள்) வெளியேற்றுவது புலனாகியுள்ளது.

பார்லி, ஐடிசி, பிரிட்டானியா, ஹால்டிராம், யுனைட்டெட் ஸ்பிரிட்ஸ் ஆகிய இந்த ஐந்து நிறுவனங்கள் குறைந்த அடத்தி கொண்ட பாலி எத்திலீனால் தயாரிக்கப்பட்ட சாஷேக்களைப் பயன்படுத்துகின்றன.

பேக்கேஜ் செய்வதற்கு இவை எளிதாக இருந்தாலும்கூட, இவற்றை மறுசுழற்சி செய்ய முடியாது என்பதால் அவை சுற்றுச்சூழல் மாசு அடைந்து அது மாநிலத்துக்குப் பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சர்வேக்ஷன் ரேங்க் பட்டியலில் யார் வெல்லப் போகிறார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும்கூட, அதிகரித்து வரும் கழிவுகளை மேலாண்மை செய்வது என்பது இன்னும் பிரச்சினையாகவே உள்ளது. மாற்றுவழிகளைத் தேடிக் கொண்டிருப்பதைவிட, பயன்பாட்டைக் குறைப்பதற்கான பிரச்சாரம் தொடர வேண்டும். தூய்மைப்படுத்துவதற்கு தமிழ்நாட்டுக்குப் பெரிய வாய்ப்பு. ஈரமான குப்பைகளையும் உலர் குப்பைகளையும குடியிருப்போரிடமிருந்தும் வணிக நிறுவனங்ளிலிருந்தும் தனியே பிரித்து வாங்கி அவற்றைத் தகுந்த முறையில் அறிவியல் ரீதியாகக் கையாள வேண்டும் என்பதே இலக்கு.

கழிவுப் பொருட்களை ஒரு வளம் என்று அங்கீகரிப்பதே ஒரு நல்ல முயற்சியின் தொடக்கம். குப்பைகளைத் தனியேப் பிரித்து அளித்து, விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் குடிமக்களுக்கு ஊக்கமளிப்பதற்கான நடவடிக்கைள் தேவை. கழிவுப் பொருட்களை அகற்றும் கழிவு மேலாண்மை நிறுவனங்கள், குப்பைகளை அகற்றும் அளவு குறைவதை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அது தணிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அதுதான், தூய்மைப் பணியில் மாநிலங்களின் முன்நிற்கும் உண்மையான சவால்.


Share the Article