Share the Article

தெலங்கானா விவசாயிகளுக்கு தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் அறிவித்த,ரிதுபந்து திட்டம் தேர்தலில் நல்ல பலனைக்கொடுத்துள்ளது. விவசாயிகளுக்கு நேரடி வருமானமாக ஏக்கருக்கு ஒவ்வொரு ஆண்டும் 8 ஆயிரம் ரூபாய் வழங்குவதுதான் இத்திட்டம். இதன்காரணமாக சமீபத்தில் நடைபெற்ற தெலங்கானா தேர்தலில் மி]கப்பெரிய வெற்றியைப்பெற்ற அவர், தேர்தலுக்கு முன்னதாக இந்தத்தொகையை ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் ஆக அவர் உயர்த்தினார்.

நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், விவசாயிகள் விதை, உரம், பூச்சி மருந்து வாங்க உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் வழங்கப்பட, அது விவசாயிகளுக்கு நேரடியாக உதவும் வருவாய்த்திட்டமாக அமைந்துவிட்டது. குறிப்பாக கடனில் உழலும் விவசாயிகளுக்கு கைகொடுப்பதாக அமைந்துள்ளது. அந்த முதலீடு திட்டத்தின் கீழ், நிலம் சொந்தமாக உள்ள விவசாயிகள் காரிப் மற்றும் குளிர்கால பயிருக்கு தலா 4,000 ரூபாய் பெறுகிறார்கள்.

இத்திட்டத்தால், 58 லட்சம் விவசாயிகள் பயனடைகிறார்கள்.  2018-19 இல் இத்திட்டத்துக்காக தெலங்கானா அரசு 12,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத்திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, நில விவரங்கள் சரியாக .

பதியப்பட்டுள்ளது. அதேபோல் கொடுத்த வாக்குறுதியின்படி பணம் விநியோகிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு பல்வேறு நிபுணர்கள், பொருளாதார வல்லுநர்களிடமிருந்து கிடைத்த பாராட்டை அடுத்து இந்தத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் யோசனையும் எழுந்துள்ளது.  நாடு முழுவதும் இதனை விரிவுபடுத்த 3.5 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். அதனை விவசாயிகளுக்கு வழங்குவது பிரச்சனையாக இருக்காது என்கிறார் கே. சந்திரசேகர ராவ்.

இது எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது குறித்த கேள்வி எழுகிறது. மிகமோசமான நிலையில் உள்ளவிவசாயிகள் குடும்பத்துக்கு நிதியுதவி அளிப்பது பிரச்சினை இல்லை, அதன் நோக்கம் சரியாக இருந்தால். நபார்டு வங்கியின் 2016-_17 அகில இந்திய நிதி சர்வேயின்படி, தெலங்கானா (79%), ஆந்திரப்பிரதேசம் (77%)  மற்றும் கர்நாடகம் (76%) ஆகிய மாநிலங்கள் கடன்வரிசையில் முதலிடத்தில் உள்ளன. விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் நேரடி வருமான 8,000 ரூபாய் நிதி, அதாவது மாதத்துக்கு சுமார் 666 ரூபாய் வீதம் கிடைக்கும். மிக மோசமான வறுமையில் உள்ள விவசாயிகளுக்கு இது உதவியாக இருக்கும். இது, அதீதக்கடனில் இருப்பவர்களை உடனே மீட்டெடுக்க வேண்டிய தன் அவசியத்தை இதுகூறுகிறது. விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்வது அவர்களின் பிரச்சனைகளுக்குத்தீர்வாக அமையும். இருந்த போதிலும் நேரடி வருமான நிதியுதவி நீண்டகால பயனளிக்கும். கடன் தள்ளுபடிக்குப்பிறகு, வருமான உத்தரவாதத்திட்டம் தொடங்கப்பட வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயிகளுக்கு நேரடி வருமானம் கொடுக்கவேண்டியதன் அவசியத்தைப்பேசியபோது பொருளாதார நிபுணர்கள் நகைத்தனர். உலகமயமாக்கல் மற்றும் தாராள மயமாக்கல் பொருளாதார காலக்கட்டம் என்பதால் அப்போது பல கேள்விகள் எழுப்பப்பட்டன. இதன் நல்விளைவுகளை உணர காலம் ஆகியுள்ளது. ஆனால், கே.சந்திரசேகர ராவ், அதனை செயல்படுத்தியுள்ளார். இந்தத்திட்டத்தில் சில இடைவெளிகள் இருக்கலாம். ஆனால், காலஓட்டத்தில் அவற்றை சரிசெய்து விடமுடியும். வருங்காலத்தில் இத்திட்டத்தின் கீழ்குத்தகை விவசாயிகளும் சேர்த்துக்கொள்ளப்படலாம். மேலும் விடுபட்டுள்ள விவசாயிகளின் கணக்குகளை வைத்து, அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்த்துக்கொண்டு விவசாயியாக இயங்குபவர்களையும் அடையாளம் காணமுடியும்.

தெலங்கானா எடுத்துக்காட்டு விரைவில் கர்நாடகத்திலும் செயல்படுத்தப்படலாம். கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலுக்குமுன்னதாக, முன்னாள் முதல்வர் சித்தராமய்யா, ‘ரய்தாபெலகு’ என்ற திட்டத்தின் கீழ்மானாவாரி விவசாயிகளுக்கு ஹெக்டருக்குரூ.5,000 வீதம் உதவி வழங்கப்படும் என்று கூறினார். இதன் மூலம் ஆண்டுக்கு 3,500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் 70 லட்சம் விவசாயிகள் நேரடியாகப்பலன் பெறுவார்கள் என்றும் சித்தராமய்யா கூறினார். தற்போது மகாராஷ்ட்ராவில் ஆட்சியைப்பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் வருமான உதவியை தர உத்தேசித்துள்ளது. இப்படியான விவசாய வருமான உதவி, விதியாக மாறும் என உறுதியாக நம்புகிறேன். பஞ்சாபில் கூட மூன்று விவசாயிகளுக்கு ஒருவர் வறுமைக்கோட்டுக்கு கீழேஉள்ளார். நேரடி நிதியுதவி அவர்களுக்கும் கொடுக்க முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்.

கடந்த நாற்பது ஆண்டுகளாக விவசாயம்உதவியை எதிர்நோக்கி உள்ளது. 2016 ஆம் ஆண்டு பொருளாதார சர்வேயின்படி இந்தியாவில் 17 மாநிலங்களில் விவசாயிகளின் ஆண்டு வருமானம் வெறும்ரூ.20 ஆயிரம் தான்.  நிதிஆயோக் அறிக்கையின்படி, 2011_-12 மற்றும் 2015-16 நில வரப்படிவேளாண்துறையில்  0.44 சதவீத வளர்ச்சியேஏற்பட்டுள்ளது.   நாட்டின் மொத்த உற்பத்தியில்வரிவிலக்கு 5 சதவீதம், பெரியதொழில்களுக்கும் பொது முதலீட்டுக்கும் வழங்கப்படும் வேளையில் விவசாயத்துக்கு 0.3லிருந்து – 0.5 சதவீதம்மட்டுமே வழங்கப்படுகிறது.

வேளாண் தொழில் வருமானமும் பொதுத்துறை முதலீடும் கடந்தபல ஆண்டுகளாக குறைந்து வருகிறது. ஆனால். பொருளாதார சிந்தனைகள் காரணமாக வேளாண் தொழில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. பொருளாதார கொள்கைகள் விவசாயத்துக்கு எதிராகவே உள்ளன. குறிப்பாக வேளாண்கடன்களைத்தள்ளுபடி செய்வது என்பதை நாட்டின் பொருளாதாரத்தை பின்னிழுக்கும் செயலாகக்கருதப்படுகிறது. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன் தள்ளுபடி பொருளாதார வளர்ச்சியாகப்பார்க்கப்படுகிறது. வேளாண்கடன் தள்ளுபடி மாநில அரசின் பிரச்சினையாகப்பார்க்கப்படுக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக்கடன் தள்ளுபடி வங்கிகளின் பிரச்சினையாக மட்டுமே கருதப்படுகிறது.

நேரடி வருமனம் இந்த மாதிரியான பாகுபாட்டைகளைய உதவும் கருவியாகப்பார்க்கப்படுகிறது.  அறுவடை காலத்தில் விவசாயிகள் வேளாண் பொருட்களுக்கு குறைந்த விலையைப்பெறும் போதும் அதிக இறக்குமதியினால் விலைவீழ்ச்சி ஏற்படும் போதும் நேரடி வருமான உதவி, விவசாயிகளுக்கு ஒருபாதுகாப்பாக அமையும்.

இக்கட்டுரையை ஆங்கில வடிவில் வாசிக்க கிளிக் செய்யவும்

 


Share the Article