Read in : English

Share the Article

திமுக 2014 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று முடிவெடுத்து, 2004லிருந்து கூட்டணிக்கட்சியாக  இருக்கும் காங்கிரஸைக் கைவிட்டது. அத்தேர்தலில்,மொத்தம் 39 தொகுதிகளில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றிபெற, திமுகவுக்கு மாபெரும்தோல்வி கிடைத்தது. கடந்த டிசம்பர் 11ஆம் தேதி, இந்த தவறைத்திருத்திக்கொள்ளும்விதமாகவும் பாஜகவை தோற்கடிக்கவும் காங்கிரஸ் தலைவர்ராகுல்காந்தியை, பிரதமர் வேட்பாளர் என முன்னிறுத்தினார். அதனையே அறிவிப்பாகவெளியிட்டபோது மேடையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு  நாயுடுவும்  மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயனும் இருந்தனர்.

ஸ்டாலின் இந்த அறிவிப்பை கூறியது மட்டுமில்லாமல் நாட்டிலுள்ள மற்றஎதிர்க்கட்சிகளிடம் ராகுல் காந்தியை பிரதம வேட்பாளாராக முன்னிறுத்த வேண்டும் எனகோரிக்கையும் விடுத்தார். அதிமுகவில் ஓட்டுக்களை ஈர்க்கும் சக்தியாக விளங்கியஜெ.ஜெயலலிதா இல்லை என்பதையும் அக்கட்சி 2019 பாராளுமன்றத் தேர்தலில்பாஜகவுடன்  கூட்டணி அமைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது என்பதையும் ஸ்டாலின்அறிந்தே உள்ளார். நடிகர்கள் கமல் மற்றும் ரஜினியின் அரசியல் கட்சிகள் ஓட்டுக்களைபிரிக்கவும் வாய்ப்புள்ளது.

பாஜக, ரஜினியை அதிமுக-பாஜக கூட்டணியில் கொண்டுவருவதற்கான அனைத்துசாத்தியங்களையும் செய்யும். இந்த சூழ்நிலையில் திமுக எந்த நல்வாய்ப்பையும் தவறவிரும்பவில்லை.அதனால் ஒரு பலமான கூட்டணியை தமிழகத்தில் அமைக்கவிரும்புகிறது. இந்த சமன்பாடுகள், 2014 பாராளுமன்றதேர்தலில் நிலவிய சூழ்நிலையைமாற்றக்கூடிய வகையில் 2019 பாராளுமன்றத் தேர்தலில் இருக்கும். 2014 பாராளுமன்றத்தேர்தலில் ஜெயலலிதா பிரதகமராக வாய்ப்புள்ளது என்ற செய்தி உலவிய காரணத்தால் 44சதவீத ஓட்டுக்களைப் பெற்று தமிழகத்தில் அக்கட்சி வெற்றி பெற்றது. அப்போது தேசியமுற்போக்குக் கூட்டணியில் தமிழகத்தைச் சேர்ந்த தேமுதிக, பாமக, மதிமுக   அகியகட்சிகள் கூட்டணியில் இருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணி மோடிதான் பிரதமவேட்பாளர் என்று கூவியபோது லேடிதான் பிரதம வேட்பாளர் என்ற கோஷமும் அதிமுக தரப்பிலிருந்து  எழுந்தது.

இரண்டு கட்சிகளின் கோஷம் ஓங்கி ஒலித்தபோது, தமிழகத்தில் தனித்துவிடப்பட்ட திமுக தமிழ்நாட்டுக்கு  ’டேடி’(கருணாநிதி) தான் என கூறினாலும் அப்போதைய சூழ்நிலையில்இந்தக் கோஷம் எடுபடவில்லை. இப்படி பலவாறாகப் பிரிந்த காரணத்தினால் திமுக 2014பாராளுமன்ற தேர்தலில் ஒரிடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இப்போது மீண்டும் அதேதவறைச் செய்யக் கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது.  அதன் வெளிப்பாடாகஆரம்பக்கட்டத்திலேயே ராகுல் காந்தியை பிரதம வேட்பாளரென அறிவித்துள்ளார்ஸ்டாலின்.  தமிழகத்தில் ஸ்டாலின் அறிவிப்பு   எடுபடலாம். ஆனால் மற்றமாநிலங்களில்?

நாட்டின் இதர எதிர் காட்சிகள் தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் முடிந்த அளவிற்குபாஜக வை எதிர்த்து கூட்டணி அமைத்து தோற்கடிப்போம், அல்லது தவிர்க்க முடியாதசூழ்நிலையில் தனித்து  போட்டியிட்டு, தேர்தலுக்கு பிறகு ஒன்றாக சேர்ந்து ஒரு மாற்றுஅரசை ஏற்படுத்தலாம் என்று தான் நினைக்கிறார்கள்.  யார் பிரதமர் என்பதை தேர்தலுக்குபிறகு முடிவு செயது கொள்ளலாம் என்று தான் முடிவெடுத்துள்ளார்கள்.

ஸ்டாலின் கருத்தை அவர்கள் தற்போது ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. ஆனால்ஸ்டாலின் அறிவிப்பு தமிழகத்தில் திமுக கூட்டணிவிற்கு சாதமாக இருக்கலாம். தமிழகத்தில் வெளிவரும் கருத்துக்கணிப்புகள் திமுக-காங்கிரஸ் கூட்டணி பாராளுமன்றதேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றும் என்று தொடர்ந்துகூறிவருகின்றரன. ஆகையால் 2019 பாராளுமன்ற தேர்தலுக்காக இப்பொழுதே தன்ஆட்டத்தைத் தொடங்கிவிட்டது திமுக.


Share the Article

Read in : English