Read in : English

Share the Article

அன்புள்ள விவசாயிகளே! வேளாண்மையின் நோக்கம் நம் அனைவருக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே. அதேவேளையில் நாட்டுக்கு உணவு வழங்க வேண்டும் என்கிற தார்மீகக் கடமையும் உண்டு. ஆனால், இன்று விவசாயம்  பல்வேறு காரணங்களால் வருவாய் இல்லாத தொழிலாக உள்ளது. அவற்றின் பல்வேறு காரணங்களை நான் எனது கடந்தகால பத்திகளில் குறிப்பிட்டுள்ளேன். அதற்காக கிராமங்களில் இன்று  யாரும் விவசாயம் செய்யவில்லை என்று கூறிவிட முடியாது. வேளாண் பயிரில்லாத மற்றவற்றில் இருந்து உதிரி வருமானத்தை ஈட்டுவதில்தான் வேளாண் தொழிலை நிலைத்திருக்கச் செய்யவதற்கான ரகசியம் உள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா, சிந்தக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த கே.கே.சோமசுந்தரம், வேளாண் தொழிலில் வருமானம் ஈட்டும் விதத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த கிராமத்தைப் ற்றி செய்திகள் வந்ததில்லை. இந்த கிராமம் முழுமையாக விவசாயத்தையும் அது தொடர்பான தொழில்களையும் சார்ந்திருக்கும் பகுதி.

ஸ்ரீரங்கம் நான்கு மாடவிதிகளிலும் இக்கிராமத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குளியல் சோப் பெயர் பெற்றது. கே.கே சோமசுந்தரம் என்கிற சோமு இந்த சோப்பைத் தயாரித்து வருகிறார். ஸ்ரீரங்கம் நான்கு மாடவீதிவாசிகள், ‘’சோப்  சோமசுந்தம்’’ வருகையை ஒவ்வொரு மாதமும் ஆவலுடன்க எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். சோமுவிடம் ஒரேயொரு காங்கேயம் மாடு உள்ளது. மாட்டின் மூத்திரத்ததையும் சாணியையும் ஒருநாளில் பலமுறை சேகரிக்கிறார். இந்த இரண்டும்தான் சோப் தயாரிப்பில் முக்கியப் பொருட்கள். இவற்றுடன் வேப்பிலை,  நல்லெண்ணெய், கற்பூரம் மற்றும் சில மூலிகைகளைச் சேர்க்கிறார்.

அனைத்து உட்பொருட்களும் சுத்தம் செய்யப்படு பிறகு சலிக்கப்பட்டு எண்ணெயுடன் சேர்க்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் ஒன்றாகக் கலக்கிபசை போல ஆக்கி சோப் தயாரிக்கும் இயந்திரத்தின் மூலம் சோப்பாகத் தயாரிக்கப்படுகிறது. பின்பு, சோப்புகள் அனைத்தும் 10 நாட்கள் உலர்த்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராகிறது. ஒரேநாளில் சிலநூறு சோப்புக் கட்டிகளைத் தயாரித்து, நீள்வட்டமான அந்த சோப்புகளை ஸ்ரீரங்கத்துக்கு பேருந்தில் எடுத்துவந்து விற்பனை செய்கிறார்.

இந்த சோப்புக்கு அதிக ‘டிமாண்ட்’ இருப்பது அவருக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.  பசுவின் சாணம், மூத்திரத்திலிருந்து இந்த சோப் தயாரிக்கப்படுவதால் அதனை புனிதமாகக் கருதி அதிகளவில் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு மாதமும் இந்த சோப் விற்பனை மூலம் அவர் ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.35 ஆயிரம் வரை வருவாய் ஈட்டுகிறார். வெளிநாடுகளில் வசிக்கும் தங்களது குழந்தைகளுக்காக மொத்தமாக சோப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்களும் உள்ளனர்.

நாக்பூரில் பசுவை அடிப்படையாகக் கொண்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்பயிற்சி நிறுவனமான கோ விஞ்ஞான் அனுஷந்தன் கேந்திரத்தில் பயிற்சி பெற்றவர் சோமசுந்தரம். சோப், பற்பசை, தலைக்குத் தேய்க்கும் எண்ணெய்,  வலிநிவாரண தைலம், முகப்பவுடர், ஊதுவத்தி, மற்றும் ஷாம்பு உள்ளிட்ட 10 வகையான பொருட்களை அவர் தயாரித்து வருகிறார். இதன் மூலம், அவர் தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் தன் கிராமவாசிகளுக்கும் ஆண்டு முழுக்கழுக்க  வேலைவாய்பை உருவாக்கி வருகிறார். இவர் தனது தயாரிப்புகள் அனைத்தையும் நேரடியாக விற்பனை செய்து வருகிறார். மேலும், ஈரோட்டில் இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் உழவர் அங்காடி மூலம் இந்தப் பொருள்களை விற்று வருகிறார். அவருடைய தயாரிப்புகளால் ஈர்க்கப்பட்டு , சோப் தயாரிக்கும் பிரிவுகளைத் தொடங்குவதற்காக அவரை பல விவசாயிகள் அணுகுகிறார்கள்.

எனது தயாரிப்புகளை ஒருவர் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் அவர் தொடர்ந்து என்னுடைய பொருட்களை விடாமல் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள் என்கிறார். காரணம் அவரது தயாரிப்புகளில் எந்த வேதிப்பொருட்களும் இல்லை. கோபிச்செட்டிபாளையத்தில் இயங்கி வரும் மைராடா கிருஷி விஞ்ஞான் கேந்திரத்தில் உள்ள முனைவர் பி. அழகேசன், சோமுவை தொடர்ந்து ஊக்கப்படுத்தி அவருடைய செயல்பாடுகளை விரிவாக்க உதவி வருகிறார். நாமும் ஏன் இப்படி ஒரு தொழிலில் ஈடுபடக்கூடாது? மாறுபட்ட சிந்தனைகளில் தான் தீர்வு உள்ளது.

தொடர்புக்கு: கே.கே.சோமசுந்தரம், ஸ்ரீரங்கம் கோஷாலா தயாரிப்புகள், சிந்தக்கவுண்டம்பாளையம், ஆப்பக்கூடல் வழி, அந்தியூர்- 638313, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு.

தொலைபேசி: 9442931794,

இ-மெயில்: srirangagaushala@gmail.com

மீண்டும் சந்திப்போம்!


Share the Article

Read in : English