English தமிழ்

Share the Article

திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புக்காக இளையராஜா முயற்சி செய்த காலங்களின் ஆரம்பக் கட்டத்தில் பாடகர்  எஸ்பிபி பாவலர்சகோதரர்களுக்கு உதவியுள்ளார். ஆனாலும் இளையராஜா முதலில் இசையமைத்த  திரை இசை பாடல்களில் இன்னும் எஸ் பி பியைக்காணமுடியவில்லை.

பாவலர் சகோதரர்கள் இளையராஜா, பாஸ்கர் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் சென்னையில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புக்காகமுயற்சி செய்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் தங்குவதற்கான இடத்திற்கும் ஒருவேளை உணவிற்கும் கூட கஷ்டப்பட வேண்டியதிருந்தது.இத்தகையச் சூழல் இருந்த நாட்களில் எஸ்பிபி பாவலர் சகோதரர்களை மேடையில் இசைநிகழ்ச்சிகள் நடத்தும் தனது இசைக்குழுவில் சேர்த்துவாய்ப்புகள் வழங்கி உதவினார்.

எஸ்பிபி இசைக்குழுவில் தங்களை சேர்த்துக்கொள்ள பாவலர் சகோதரர்கள் எஸ்பிபியை நேரில் சந்தித்து கேட்டுக்கொண்டனர்.  எஸ்பிபிக்கும்இளையராஜாவுக்கும் பொதுவான நண்பர் இளையராஜாவை எஸ்பிபிக்கு அறிமுகப்படுத்தி இசைக் கருவிகளை  எஸ்பிபிக்கு வாசித்துக்காட்டுமாறுக் கூறினார்.

இளையராஜா ஹார்மோனியத்தையும் அமர் கிதாரையும் பாஸ்கர் தவில்/மிருதங்கத்தையும் வாசித்துக் காட்டினர். எஸ்பிபி இவர்களது அதீதஆற்றல்களால் கவரப்பட்டாலும் அவரது இசைக்குழுவில் ஏற்கனவே ஹார்மோனியம் மற்றும் கிதார் இசைப்பவர்கள் இருந்ததால் இவர்களுக்குவாய்ப்புத் தரையியலாது என்று கூறினார். அதேவேளையில் சென்னையில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கூட அவர்கள்சிரமப்படுவதைக் கண்டு தன்னுடைய குழுவில் இளையராஜாவை ஹார்மோனியத்தையும், அமரை கிதாரையும் பாஸ்கரை தவில்/மிருதங்கத்தையும் வாசிக்க வாய்ப்புத் தந்து உதவினார்.

டெமோ வேளையில் இளையராஜா தன்னுடைய இரு கைகளினாலும் ஹார்மோனியத்தை இசைத்து வெளிப்படுத்திய ஒவ்வொரு நோட்ஸும்(அவை லாரா தீம் ஆகவோ அல்லது புகழ் பெற்ற இந்தி பாடலாகவோ/தமிழ் பாடலாகவோ எதுவாகிலும்) எஸ்பிபியை பெரிதும் கவர்ந்தது.

அந்நாட்களில் எஸ்பிபி ஹிட் ஆன இந்தி திரைப்படப் பாடல்களை அதிக அளவில் தனது மேடை நிகழ்ச்சிகளில் பாடுவது வழக்கம். அவை தமிழ்படப்பாடல்களை விட அதிக அளவில் பிரபலமடைந்தவையாக இருந்தக் காரணத்தால் பயன்படுத்துவார். ஆராதனா என்ற இந்தி படத்தில்இடம்பெற்ற ஹிட் பாடல்களை தனது மேடை நிகழ்ச்சிகளில் எஸ்பிபி பயன்படுத்தும் போது அவற்றின் சுவை/இனிமை குன்றாமல் இசையைத்தருவதில் இளையராஜாவும் அவரது சகோதரர்களும் கை தேர்ந்தவர்களாக இருந்தனர். பின்பு எஸ்பிபிக்கு நிறைய தமிழ் மற்றும் தெலுங்குபடப்பாடல்கள் பாட வாய்ப்புகள் கிடைத்து அவர் பிஸியாகி விட்டார்.

இறுதியில் பாவலர் சகோதரர்களுக்கு சென்னையில் வசிப்பதற்கு பணம் தேவைப்பட்டது.  இருந்தாலும் எந்த கஷ்டத்தையும் பொருட் படுத்தாமல்இளையராஜா திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புக்கு தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருந்தார்.

இளையராஜாவும் எஸ்பிபியும் தங்களுடைய சந்தோஷத்தையும் துக்கத்தையும் பரிமாறிக்கொள்வது முதல் ஒருவரையொருவர் வாடா போடாஎன்று உரிமையோடு  கூப்பிடும் அளவிற்கு நெருக்கமான நண்பர்களாகி இருந்தனர்.

எஸ்பிபி, பாவலர் சகோதரர்களின் வாழ்க்கையின் முக்கியத் தருணமான அன்னக்கிளி  முதல் பாடல் பதிவின்போது அவர்களோடு இருக்கவில்லை.  மேலும்  அன்னக்கிளி படத்தில் அவர் பாடவில்லை. இளையராஜா இசையில் இரண்டு படங்கள் வெளிவரவிருக்கும்  சூழ்நிலையில்  அவரது அன்பிற்குரிய நண்பர் எஸ்பிபி இன்னும் அவரது இசையில் பாடவில்லை.

அன்னக்கிளி திரைப்படத்தின் பாடல் பதிவிற்கு முந்தைய நாள் மாலை வேளையில் எஸ்பிபியிடம் இளையராஜா, குரலை கவனமாக பாதுகாத்துமறுநாள் நடைபெறும் பாடல் பதிவிற்கு வருமாறு கூறியுள்ளார். ஆனால், இளையராஜா பயந்ததுப் போலவே எஸ்பிபிக்கு தொண்டைவலி    ஏற்பட்டதாக கூறி பாட வரவில்லை என்று எஸ்பிபி இளையராஜாவிற்கு தகவல்அனுப்பினார்.  தான் முன்னெச்செரிக்கையுடன் இருக்கச் சொல்லிய பிறகும் இப்படி நடந்து விட்டது என்று  இளையராஜா கடிந்து கொண்டார்.

பதினாறு வயதினிலேயும் எஸ்பிபி பாடவில்லை. இப்படத்தில் இடம்பெற்ற ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற பாடல் எஸ்பிபி பாடுவதாகஇருந்தது. எஸ்பிபியால் பாடமுடியாத சந்தர்ப்பத்தால் பாடும் வாய்ப்பு மலேசிய வாசுதேவனுக்குப் போய், அவரால் பாடப்பட்ட அந்தப் பாடல்மிகவும் புகழ் பெற்று அவரது திரையிசைப் பயணத்துக்கு பெரியதொரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. இப்படத்தில் இடம்பெற்ற மற்றொருபுகழ் பெற்ற பாடலான செவ்வந்தி பூ முடிச்ச-வை பாலு பாடுவதாக இருந்தது. இதுவும் அவரால் பாடமுடியாதக் காரணத்தால் பாடும் வாய்ப்புமீண்டும் மலேசிய வாசுதேவனுக்குப் போனது. சிகப்பு ரோஜாக்களிலும் எஸ்பிபி இல்லாமல் இரண்டு டூயெட் பாடல்கள் இடம்பெற்றன. அவற்றில்ஒன்றை கமலஹாசனும் எஸ். ஜானகியும் மற்றொன்றை மலேசிய வாசுதேவனும் எஸ். ஜானகியும் பாடினர்.

பின்பு ஒருநாள் நிகழ்ச்சி ஒன்றில் எஸ்பிபிக்கு இளையராஜாவை சந்திக்க நேரிட்டது. அப்போது எஸ்பிபி – ஏண்டா டே நானெல்லாம் உனக்குபாடகராக தெரியலையா? என்று இளையராஜாவிடம் உரிமையுடன் கேட்டார். அதற்கு இளையராஜா சிரித்துக்கொண்டே  உடல்நலம்பாதிக்காமல் பாதுகாத்து, மறுநாள் வருமாறு  கூறினேன் என்று குறிப்பிட்டார்.  சரி, நாளைக்கு வா என்றார் இளையராஜா. இதன் பின் அவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றி பாடல்களை பதிவு செய்ய தொடங்கினர்.இவர்கள் கூட்டணியில் முதலில் பதிவான பாடலாக உறவாடும் நெஞ்சம் என்ற படத்தில் எஸ்பிபி மற்றும் எஸ். ஜானகியால் பாடப்பட்ட ஒருநாள்உன்னோடு ஒருநாள் என்ற டூயட் பாடல் அமைந்தது. இருந்தாலும் இவர்கள் கூட்டணியில் பாலூட்டி வளர்த்தக் கிளி என்ற திரைப்படத்தில் எஸ்பிபிமற்றும் எஸ். ஜானகியால் பாடப்பட்ட நான் பேசவந்தேன் என்ற பாடல் முதலில் வெளி வந்துவிட்டது. ஏனெனில் பாலூட்டி வளர்த்தக்கிளிதிரைப்படம் உறவாடும் நெஞ்சம் படத்திற்கு முன்பே வெளியிடப்பட்டுவிட்டது.

இதன்பின்பு எஸ்பிபி-யின் பாடல்கள் தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தை பெற்றது. இளையராஜா எஸ்பிபி கூட்டணியில் உருவானபாடல்கள் ரசிகர்களிடம் அதிக அளவில் ஆர்வத்தை தோற்றுவித்தன. இளையராஜா இசையில் எஸ்பிபியும் எஸ். ஜானகியும் சேர்ந்து பாடிய டூயட்பாடல்கள் அதிக அளவில் பிரபலமடைந்தன. இளையராஜாவின் வசீகரிக்கும் இசையானது மேற்கத்திய இசையையும் தமிழக கிராமியஇசையையும் கலந்து இழையாகப் பின்னப்பட்டு ஒரு புதிய பரிமாணத்தில் மிளிர்ந்தது. இத்தைகைய புதுமைமிக்க இசையில் எஸ்பிபியும் எஸ். ஜானகியும் சேர்ந்து கொடுத்த டூயட் ஹிட் பாடல்கள், எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் டி.எம். சௌந்தர்ராஜன் மற்றும் பி. சுசீலா பாடிய டூயட்பாடல்களையே நீண்ட நாட்களாக கேட்டுகொண்டிருந்த ரசிகர்களுக்கு புதிய இசைத்தென்றலாக அமைந்தது.

அலை அலையாக பாலு இளையராஜா கூட்டணியில் இருந்து வந்து ரசிகர்களை ஆட்டம் போடவைத்த பாடல்கள் மற்ற இசை அமைப்பாளர் களின்இசையில் ஒலித்த பாடல்களைப் பின்னுக்குத் தள்ளின. இந்த பலமான தாக்குதலால் பிற இசை அமைப்பாளர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

இதன்பின் இளையராஜாவின் மேடை நிகழ்ச்சிகள் நடக்கின்றபொழுது எஸ்பிபி கலந்துகொண்டு நட்சத்திரமாக ஜொலித்தார். இசைமேடையில்நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும்பொழுது எஸ்பிபி, இளையராஜா மற்றும் அவரது சகோதரர்கள் சேர்ந்து ஒருவர் காலை மற்றவர் வாரிவிடுவது, முன்முயற்சியின்றி திடீரென்று பாடல் எழுதிப்பாடுவது மற்றும் கூக்குரலிட்டுச் சிரிப்பது போன்ற சந்தோஷ கலாட்டாக்களை இடையிடையேசெய்து ஆனந்தப்பட்டனர். இசைநிகழ்ச்சி சீரியசாக நடந்து ரசிகர்களை வசீகரித்துக் கொண்டிருக்கும்போதும் கூட நிகழ்ச்சியின் நடுவில் இந்த மாதிரிகலாட்டாக்களை அரங்கேற்றுவர்.

பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தில் எஸ்பிபி-இளையராஜா கூட்டணியில் வெளிவந்த அத்தனைப் பாடல்களும் புதியதொரு சிகரத்தைஅடைந்து அவர்களை ரசிகர்கள் போற்றிக் கொண்டாடும் அளவுக்கு அதிக புகழைக் கொடுத்தன. 1980-ல் தொடங்கி பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழ்திரையிசை உலகில் ஆதிக்கம் செலுத்தினர். மற்ற புகழ்பெற்ற திரைப்பட பின்னணி பாடகர்களான கே.ஜே. ஜேசுதாஸ் மற்றும் ஜெயச்சந்திரன்ஆகியோர் பாடல்களில் தடம் பதித்தாலும் எஸ்பிபி-யின் கொடி அதிக உயர்த்தில்(அபரிதமான வளர்ச்சியில்) பறந்து கொண்டிருந்தது. 20 ஆண்டுகளுக்குப் பின் எஸ்பிபி அளித்த பேட்டி ஒன்றில் தான் இளையராஜாவுக்காகவும் இளையராஜா தனக்காகவும் படைக்கப்பட்டவர் /பிறந்தவர்என்று பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.

ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகுக்கு அதிரடியாக அறிமுகமான ஏ.ஆர். ரகுமானின் வரவால் 1990-ன் மத்தியில் இளையராஜா சகாப்தம்முடிவுக்கு வந்தது. எஸ்பிபி மற்றும் இளையராஜா பிரிந்து, எஸ்பிபி வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்ததருணத்தில் இளையராஜாவால் லீகல் நோட்டிஸ் அனுப்பப்பட காரணம் என்ன? எப்படி இந்த பிளவு ஏற்பட்டது. (தொடரும்)


Share the Article