English தமிழ்

Share the Article

இளையராஜா ரீ-ரிகார்டிங்கின் அரசன் என்று போற்றப்படுகின்றார். அவரது திரைப்பட பின்னணி இசையின் ஆழம், காட்சிகளை நகர்த்தும் தன்மை மற்றும் ரசிகர்களை கட்டிப்போடும் லாவண்யம் ஆகியவை சாதரணக் காட்சியைக்கூட மேம்பட்டக் காட்சியாக்கி  மாற்றி விடும் ஆற்றலைப் பெற்றதனால்,  இசையில் அவர்    வெற்றி பெற்ற அம்சங்களின் கணக்கீடு  நம்மை செவிசாய்க்க வைக்கிறது.

நாயகன், பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், தேவர் மகன், ராஜப்பார்வை, முள்ளும் மலரும், மூடு பனி மற்றும் மூன்றாம் பிறை ஆகியவற்றின்ரீ-ரிகார்டிங்குக்கு திரைப்பட விமர்சகர்களிடம் மட்டுமின்றி கிராமத்து சினிமா ரசிகர்களிடமிருந்தும்  பாராட்டு கிடைத்தது.

தான் இயக்கும் படங்களில் இளையராஜாவின் பின்னணி இசையால் நிரப்புவதற்காக சில காட்சிகளை ஆலோசித்து விட்டு வைத்ததாகவும் அவைஇளையராஜாவின் பின்னணி இசையால் நிரப்பப்பட்டு உன்னத நிலையை அடைந்ததாகவும் பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாகூறியிருக்கிறார். எடுத்துக்காட்டாக கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தில் சத்யராஜையும் ரேகாவையும் வைத்து படமாக்கிய சிலகாட்சிகளைஇளையராஜாவின் பின்னணி இசையால் நிரப்புவதற்கு விட்டு வைத்திருந்தார். ஆனால் இளையராஜாவோ அந்தக் காட்சிகளை இணைத்துஅக்கணமே தாஸ் தாஸ் நீ இப்போ பாஸ் பாஸ் என்ற பாடலை உருவாக்கி அந்தக் காட்சிகளுக்கு பின்னணியில் ஒலிக்கவிட்டு சிறந்ததொரு பின்னணிஇசையை வழங்கி பரவசப்படுத்தி விட்டார். மேலும் இந்தப்பாடலும் மிகவும் பிரபலம் அடைந்து விட்டது.

இத்தனைக்கும் இந்தப்படத்தை இயக்கும்பொழுது பாரதிராஜா இந்தக் காட்சிகளில் பாடல் வைக்க திட்டமிடவே இல்லை.திரைப்படங்களில் இளையராஜாவின் பங்களிப்பை முதலில் அங்கீகரித்தவர்களில் ஏசி இ படத்தயாரிப்பாளர்  பாலு மகேந்திராவும் ஒருவர்.இளையராஜாவின் பின்னணி இசை இதயத்தை வருடும் என்றார். அவர் இயக்கிய மூன்றாம் பிறை திரைப்படத்துக்கான பின்னணி இசைதனித்தன்மை வாய்ந்தது என்றார். அப்படப் பாத்திரங்களின் மனோ நிலை மற்றும் உணர்ச்சிகள் ஆகியவைகளுக்கு ஏற்ற பின்னணி இசைகோர்ப்பானது படத்தின் மீதான ரசிகர்களின் கவனத்தை அதிகமாக்கியது. கடினமான இடங்கள் கூட  இளையராஜாவின் இசையால் நிரப்பப்பட்டதால்அந்த இடங்கள் வசனம்  இருக்கும் காட்சிகளை விட ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்ததாக பாலு மகேந்திரா பலமாக நம்பினார்.

இளையராஜா இசையமைப்பதை நிறுத்திவிட்டால் தான் படம் இயக்குவதை விட்டு விடுவதாக ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலு மகேந்திராகூறி இருந்தார்.

இளையராஜாவின் மீது எவ்வளவு அன்பும் மரியாதையும் இருந்தால் இவ்வாறு கூறியிருப்பார். ஏனெனில் அவரது படங்களில் இளையராஜவின்பங்களிப்பான இசை அதிக சிறப்புடன் இருந்தது தான் இவ்வாறு கூறவைத்தது.

பாலு மகேந்திராவை பின்பற்றி இயக்குனர்  பாலாவும் இளையராஜாவின் பின்னணி இசையின் பங்களிப்பானது திரைப்படங்களின்பாத்திரங்களின் மனோ நிலை மற்றும் கதையின் ஆழம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும் என்று கூறுகிறார்.. மேலும்இளையராஜாவின் ரீ-ரிகார்டிங் -ஆனது உணர்ச்சிகளை தூண்டும் வகையில்,  நுணுக்கத்துடன் படம் பிடித்ததற்கும் மேலாக சிறப்புடன் இருக்கும்என்று கூறுகிறார்.

மலையாள திரைப்பட உலகைச் சேர்ந்த புகழ் பெற்ற இயக்குநர்களான ஃபாசில் மற்றும் பிரியதர்ஷன் ஆகியோர் இளையராஜாவின் பின்னணிஇசையானது மனதைத் தொடுவதாக இருக்கும் என்று பாராட்டுகின்றனர். அவர் இசையமைத்த பழசிராஜாவுக்கு சிறந்த பின்னணி இசைவிற்கானதேசிய விருது கிடைத்தது.

மணிரத்னம் இயக்கிய  நாயகனின்  வெற்றியில் இளையராஜாவின் இசை  குறிப்பாக ரீ-ரிகார்டிங்குக்கு பெரும்பங்குண்டு.  நாயகனில் கமலஹாசன் பாடிய தீம் பாடல் காட்சிகளை ஒன்று சேர்க்கும் விதமாக அமைந்தது. சில இடங்களில் பாடல் வடிவிலும் சிலஇடங்களில் இசைக்கருவிகளில் வாசிக்கப்பட்ட இசையாகவும் ஒலித்து பாத்திரங்களின் உணர்ச்சிகளை உணர்த்தியதால் படமே நல்லதொருஉயரத்தை அடைந்தது.

தளபதி என்ற திரைப்படத்தில் சின்னத்தாயவள் தந்த ராசாவே என்ற பாடல் மனதை வாட்டும் சில இடங்களில்  ஒலிக்கும். பின்பு இதேப்பாடல்புல்லாங்குழலில் வாசிக்கப்பட்டு பின்னணி இசையாக தாய்க்கும் மகனுக்கும் இடையே உள்ள உணர்வுத் தொடர்பை அந்தப் பாத்திரங்கள் (தாயாக ஸ்ரீவித்யாவும் மகனாக ரஜினிகாந்தும்) வரும் காட்சிகளில் மெருகூட்டியிருப்பார்.

எஸ். ஜானகி மற்றும் கே.ஜே. ஜேசுதாஸ் குரல்களில் ஜொலித்த டூயெட் பாடலான புத்தம்புது பூ பூத்ததோ என்ற அற்புதமான பாடல்பதிவுசெய்யப்பட்டது ஆனால் படத்தில் இடம் பெறவில்லை.    படத்தின் நீளத்தைக் குறைப்பதற்காக இந்தப்பாடல்  வெட்டப்பட்டதாக  கூறப்பட்டது. என்றாலும், இளையராஜா பின்னணி இசையின் மூலமாக அந்த பாடலை ஆதாரமாக வைத்து, அந்த கதாபாத்திரங்களுக்கும், படத்துக்கும்  வலு சேர்த்தார்.

இளையராஜாவின் ரீ-ரிகார்டிங்கிற்கு இந்தியா முழுவதும் பாராட்டுகள் குவிந்தனர். இளையராஜா வேகத்துடன்,  விரைவாகப் பணிகளை செய்து தருவது. ஒரு திரைப்படத்தின் ரீ-ரிகார்டிங்கை (முழுவதையும்)இரண்டு நாட்களில் இளையராஜா முடித்து தருவதைப் பற்றி கேள்விப்பட்ட மும்பையில் உள்ள இசையமைப்பாளர்கள் ஆச்சர்யமடைந்தனர். மிகபிரபலமான இந்தி திரைப்பட உலகைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஒருவர் இளையராஜா அவர்கள் ஒரு திரைப்படத்தின் ரீ-ரிகார்டிங் பணி மேற்கொண்டபொழுது சந்தித்தார். இளையராஜா ஒவ்வொரு (திரைப்படக்) காட்சியையும் சும்மா இரண்டு முறை பார்த்துவிட்டு இசைக் குறிப்புகளைஎழுதி அவரது இசை கலைஞர்களுக்குக் கொடுத்ததைப் பார்த்து மிகவும் வியப்படைந்து போனார். கொடுத்த குறிப்புகளை வைத்து அவர்களைவாசிக்கச் சொல்லி சோதனை நடத்தவுமில்லை. ஒவ்வொரு இசைக் கலைஞரின் பங்களிப்பால் வரும் ஒலியை துல்லியமாக மனக்கண்ணில்கணித்து அவரவர் இசைக்கவேண்டியதை பேப்பரில் குறித்துக் கொடுத்தார். குறிப்புகளின்படி அவர்கள் ஒன்றாக இசைத்தபோது எந்தவித முரண்பாடும் இல்லாமல் சரியாக அமைந்தது. ரீ-ரிகார்டிங்கும் சரியாக அமைந்து பின்னணி இசையை அழகாக்கியது இன்னும் பிரமிப்படையவைத்தது. இளையராஜாவின் இந்த திறமைக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று திரைப்பட இயக்குனர்கள் மற்றும் இசை யமைப்பாளர்கள் கூறுவார்கள். வெளிநாட்டு இசையமைப்பாளர்களும் இளையராஜாவுடைய இந்த திறமைமிக்க இசை பணியை மிக அபூர்வமானது என்றுஅங்கீகரித்துள்ளார்கள்.

நடிகர் மற்றும் இயக்குநருமான பிரகாஷ் ராஜ் தனது தயாரிப்பான தோனி திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணியை இளையராஜா அவர்கள்மேற்கொண்டபோது கண்கூடாக  பார்த்ததினால் அவர் இசை மேதை என்பதற்கு தான் சாட்சி என்று குறிப்பிடுகின்றார்.

இளையராஜா ஒவ்வொரு காட்சியையும் இரு முறை பார்த்தபின்பு, ஒவ்வொரு இசைக்கலைஞர்களுக்கும் இசைக் குறிப்பைக் கொடுத்தார். அவர்கள் ஒன்றாக இசைத்தபொழுது சிறப்பாக இருந்தது மட்டுமல்லாமல் வியப்பை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டார்.   பிரபல திரைப்பட இயக்குநர் கே. விஸ்வனாத் அவரது புகழ் பெற்றப் படங்களான சாகர சங்கமம், சிப்பிக்குள் முத்து ஆகியவற்றின் காட்சிகளுக்குஏற்றவாறு இளையராஜா பின்னணி இசை அமைத்தது   படத்தின் தரத்தை மிகவும் உயர்த்தியது.இந்தப்படத்துக்கான இளையராஜாவின் வசீகர பங்களிப்பானது குறிப்பிடத்தக்கது என்றும் கூறினார்.   இப்படிப்பட்ட திறமைகள் உள்ள இளையராஜா

ஒரு திரைப்படத்தின் ரீ-ரிகார்டிங்கை (முழுவதையும்)இரண்டு நாட்களில் இளையராஜா முடித்து தருவதைப் பற்றி கேள்விப்பட்ட மும்பையில் உள்ள இசையமைப்பாளர்கள் ஆச்சர்யமடைந்தனர்.

அன்னக்கிளிப் படத்தின் ரீ-ரிகார்டிங்கை  இளையராஜா செய்ய கூடாது என்றும், அதற்கான திறமை அவர் இடத்தில் இல்லைஎன்று என்று படத்தின் தயாரிப்பு குழுவில் உள்ள   பஞ்சு அருணாச்சலத்தின் சகோதரர்கள் கூறிவிட்டனர்.     திரைப்படத்தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் சகோதரர்களான சுப்பு, லட்சுமணன் மற்றும் கிட்டு ஆகியோருக்கு ரீ-ரிகார்டிங்கை இளையராஜாவிடம் ஒப்படைப்பதில் விருப்பம் இல்லை என்பது ஒருமித்த கருத்தாக இருந்தது. ரீ-ரிகார்டிங் மிக கடினமான வேலை மற்றும் இதற்குத் தேவையான அனுபவம் அவருக்கு இல்லை, ஆதலால் ரீ- ரிகார்டிங்குக்கு ஜி.கே. வெங்கேடேஷ்போன்ற முன்னிலையில் உள்ள இசையமைப்பாளர்களிடம் கொடுக்கலாம் என்று தங்களது சகோதரராகிய பஞ்சுவிடம் கூறினார்கள் என்று பின்னாளில் ஒரு இண்டர்வியூவில் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் இளையராஜாவை இசையமைப்பாளராக நியமிக்க பஞ்சு விரும்பியபோது அவரது சகோதரர்கள் எதிர்த்ததை நினைவில் கொள்ளவேண்டும். இதற்குபின் பஞ்சுவின் சகோதரர்களை சமாதானப் படுத்தும் முயற்சியாகவும் தனது திறமையை நிரூபிக்கும் விதமாகவும் அன்னக்கிளிபடப்பாடல்களை (மிக அரிதாக நிகழும் வண்ணமாக) கல்யாண மண்டபத்தில் இசைக்குழுவினரின் துணையோடு பாடகர்களோடு அந்தபாடல்களை இளையராஜா  வழங்கினார்.  இதற்குபின் அரைகுறை மனதோடு பாடல்களுக்கு மட்டும் இசையமைக்கும்வாய்ப்பை இளையராஜாவுக்குக் கொடுக்க சம்மதித்தார்கள். ரீ-ரிகார்டிங்கை பெறுவதில் இடைஞ்சல் இருந்தது.

பஞ்சுவின் சகோதரர்கள் ரீ-ரிகார்டிங்கிற்கு வேறு இசை அமைப்பாளர் களை நியமிக்கலாம் என்று கூறிய போது,    பஞ்சுஅவர்கள் தான்  பல பிரபல இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களோடு பல ஆண்டுகளாக பணியாற்றியததை சுட்டிக்காட்டி,   கூடவே கண்ணதாசனுக்கு உதவியாக பிரபல இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களின் பாடல்பதிவின்போது இருந்திருக்கிற அனுபவமும் பெற்றிருந்ததை நினைவூட்டினார். பஞ்சு அருணாச்சலம் தனது சகோதரர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை ஒப்புக்கொள்ள வைத்தார்.

ராசையா என்ற இந்த பையனின் திறமையை அங்கீகரிப்பதாகவும் பின்னாளில் இந்த பையன் புகழ் பெற்ற இசையமைப்பாளராக வருவான் என்றும்கூறினார். இந்த முடிவை என்னிடம் விட்டுவிடுங்கள் என்று கூறி ரீ-ரிகார்டிங்கை –  இளையராஜாவிடம் ஒப்படைத்தார்.

இப்படியாக இளையராஜாவின் திரைபடங்களுக்கு ரீ-ரிகார்டிங் செய்யும் பணிக்கான  பயணம் பல நெருகடிகளுக்கு இடையில்தொடங்கியது. பாவலர் சகோதர்களுக்கு உதவி செய்த, அவர்களின் நெருங்கிய நண்பரான பாடகர் எஸ்பிபி தனது ஆருயிர் நண்பன்இளையராஜாவின் முதல் பதிவின்போது வரவில்லை, படத்தில் பாடவுமில்லை. ராஜாவின் ஒளிப்பதிவு கூடத்தில்   எஸ்பிபி  காணாமல்போனார்? ஏன்?

(தொடரும்) கூடவே பகுதி 1, பகுதி 2 மற்றும் பகுதி 3 வாசியுங்கள்.


Share the Article