English தமிழ்

Share the Article

போற்றி வழிபாடு செய்யப்படும் நிலையை இளையராஜா அடைந்தது எப்படி? தென் தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்தவர். கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இசை நிகழ்ச்சிகளுக்கு அண்ணன் பாவலர் வரதராஜனுடன் சென்று வந்து கொண்டிருந்த ராசையாவுக்கு (அப்போது அவர் அப்படித்தான் அழைக்கப்பட்டார்), அண்ணனைத் தவிர வேறு எந்த இசைக் கலைஞரையும் தெரியாது. இசை ஞானியாக அவர் உருவெடுத்துக் கொண்டிருந்தார் என்பதற்கான எந்த அடையாளங்களும் அப்போது இல்லை.(இது இசைஞானி இளையராஜா தொடரின் இரண்டம் பகுதியாகும். முதல் பகுதியை இங்கே படிக்கவும்.)

பாவலர் சகோதர்ர்கள் தமிழ்நாட்டின் பட்டி, தொட்டியெங்கும் சென்று பாடிக் கொண்டிருந்தார்கள். புகழ்பெற்ற தமிழ், இந்தி திரைப்படப் பாடல்களை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரத்துக்கு ஏற்றவாறு மாற்றிப் பாடுவதுதான் அவர்களுடைய சிறப்பு.  இந்தப் பயிற்சிதான், குறிப்பிட்ட சந்தர்ப்பங்களுக்கான பாடல்களை கம்ப்யூட்டர் போல நினைவில் வைத்துக் கொள்வதற்கு ஒருவேளை ராசையாவுக்கு உதவியிருக்கலாம்.

வாழ்க்கைப் போராட்டம்

திரைப்படத் துறையில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த அவரும் அவரின் சகோதரர்களும், மயிலாப்பூரில் ஒரு சிறிய லாட்ஜில் தங்கியிருந்தனர். தன்ராஜ் மாஸ்டரின் இசை வகுப்புகளுக்கு போய் வந்து கொண்டும், தங்களுக்கு வாய்ப்பு தருகிற  இயக்குநர் அல்லது தயாரிப்பாளர் யாரையாவது சந்திப்போம் என்ற நம்பிக்கையுடனும் இருந்தனர். வாழ்க்கை நடத்துவதே போராட்டமாக இருந்தது. பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும், ராஜாவின் இசைக் குழுவினரும் பல்வேறு இடங்களில் அப்போது மிகவும் பிரபலமாக இருந்த இந்திப் பாடல்கள் உள்ளிட்ட பாடல்களைப் பாடி இசை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தனர். இசையமைப்பாளர் ஜி.கே .வெங்கடேஷுக்கு உதவியாளராக வேலை செய்து கொண்டு ,  அதில் கிடைத்த வருமானத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார்.

இளையராஜா. தனது சொந்த முத்திரையைப் பதிப்பதற்காக இளையராஜா வாய்ப்புகளைத் தேடிவந்த போதிலும், யாரும் முன்வரவில்லை.

 இளையராஜா. தனது சொந்த முத்திரையைப் பதிப்பதற்காக இளையராஜா வாய்ப்புகளைத் தேடிவந்த போதிலும், யாரும் முன்வரவில்லை.

அப்போதுதான் கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாசலம், தனது அன்னக்கிளி படத்துக்காக கிராமிய இசை அடிப்படையில் இசை அமைக்கக் கூடிய இசை அமைப்பாளர் யாரும் கிடைப்பாரா என்று தேடிக்  கொண்டிருந்தார். தமிழ்நாட்டில் இந்தி சினிமா பாடல்களின் ஆதிக்கத்தால் மனம் வெறுத்துப் போயிருப்பதாகவும், இந்தி இசையின் இரும்புப் பிடியை யாரேனும் உடைக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் பஞ்சு கூறிவந்தார்.

அன்னக்கிளி படத்துக்கான இளையராஜாவின்  முதல் பாடல் பதிவே சகுனத் தடையுடன்தான் தொடங்கியது – ரெக்கார்டிங் ஆரம்பமாவதற்கு சற்று முன்பாக பவர் கட்- ஏற்பட்டது. ராஜாவின் திறமையில் நம்பிக்கை இல்லாத சிலர், இந்த கெட்ட சகுனத்தால் படம் தேறாது  என்று கருதினர். ஏற்கெனவே திரையுலகில் சில ராஜாக்கள் இருந்த்தால், ராசையாவுக்கு இளையராஜா என்ற பெயர் சூட்டப்பட்டது.

அன்னக்கிளி படம் வெளியானதும் முதல் 2 வாரங்களுக்கு படத்துக்குக் கூட்டம் வராமல் தள்ளாடிக் கொண்டிருந்தது. ஆனால் திடீரென, ரேடியோவில் இந்தப் படத்தின் பாடல்கள் ஒலிபரப்பான நிலையில், எஸ்.ஜானகி பாடிய “மச்சானைப் பாத்தீங்களா?” பாடல் தமிழ்நாடு முழுவதும் சூறாவளியாக சுழன்று அடித்தது. “அன்னக்கிளி உன்னைத் தேடுதே” போன்ற மற்ற பாடல்களும் பிரபலம் அடைந்தன. பாடல்களால் கவந்திழுக்கப்பட்ட மக்கள் கூட்டம் தியேட்டர்களில் அலைமோதியது. அன்னக்கிளி ஹிட் ஆனது. இது ஏதோ குருட்டு அதிர்ஷ்டம், தற்காலிக வெற்றி என்று நினைத்தவர்கள் ஏமாறும் வகையில், அடுத்தடுத்து,  ஹிட்-பாடல்கள் தொடர்ந்து வந்தன.

ராஜாவினால் ஒருபோதும் எம்.எஸ்.விசுவநாதனின் இடத்தைப் பிடிக்க முடியாது என்றும், கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட அவரது பாடல்களை வெல்ல முடியாது என்றும் சிலர் சொன்னபோதுதான், `பத்ரகாளி’ படத்தில் `கண்ணன் ஒரு கைக்குழந்தை’ பாடலுடன், அதில் உள்ள ஒரே பாடல் வரிகளுக்கு யேசுதாஸுக்கும் பி.சுசீலாவுக்கும் வியக்கத்தக்க வெவ்வேறு டியூன்களுடன் வந்தார் இளையராஜா. என் கண்மணி (சிட்டுக் குருவி)  போல ஒன்றன் மேல் ஒன்றாக கவிந்து கிடக்கும் பாடல், கண்மணியே (தர்மயுத்தம்) போல ஏறக்குறைய மூச்சு விட இடமில்லாத பாடல், சீரான மேற்கத்திய இந்திய இசைகள் கலந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் (சிகப்பு ரோஜாக்கள்) பாடல்  என அலைக்கு மேல் பேரலை எனக் கொந்தளிக்கும் இசைச்  சுனாமியாக சுழன்று வீசினார் இளையராஜா.

வெகு விரைவிலேயே எல்லோரும் இளையராஜாவை தேடி வரத் தொடங்கிவிட்டனர். அவர் ஹிட்டுக்கு மேல் ஹிட் கொடுக்க ஆரம்பித்தார். பதினாறு வயதினிலே படத்தில் இவருடன் பாரதிராஜா இணைந்தார். இருவரும் இணைந்து பல ஹிட் படங்கள் கொடுத்தனர். தமிழ்த் திரையுலகத்துக்கு ஒரு புதிய கட்டுக்கோப்பை வழங்கினர். இளையராஜா, ஒரு புதிய தென்றலை அழைத்து வந்தார். சீக்கிரத்திலேயே அது, முதுபெரும் இசை அமைப்பாளர்கள், இளம் இசை அமைப்பாளர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் ஒதுக்கித் தள்ளும் புயலாக மாறியது.

திரை இசை உலகில் நன்கு காலூன்றி பிரபலமாக இருந்த பாடகர்களான டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா போன்றவர்கள் பின் வரிசைக்குப் போகும் நிலை ஏற்பட்டது. திரையுலகை இளைஞர்கள் கையில் எடுத்துக் கொண்டனர். ஒளிப்பதிவாளர்கள், சவுண்ட் என்ஜினீயர்கள், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மத்தியில் புதிய திறமையாளர்கள் வந்தனர். இயற்கையை சிறப்பாக காட்டுவதற்காக, ஸ்டூடியோ செட்-களில் இருந்த படப்பிடிப்பு  வெளிப்புறங்களுக்கு மாறியது. இயற்கைச்சூழலுக்கேற்ற இன்னிசையையும் தாளத்தையும் இளையராஜவின் இசை வழங்கியது.

இளையராஜா சுசீலா வாக்குவாதம்

இளையராஜா ஒரு கிடாரிஸ்ட் ஆக பணி புரிந்து கொண்டிருந்த ஆரம்ப நாட்களில், இன்னொரு இசையமைப்பாளரின் ரெக்கார்டிங்கின்போது, ஒரு தப்பெண்ணம் ஏற்பட்டது. அவர் ஒரு இசைக் குறிப்பை (chord) வாசிக்கவில்லை என்று பி.சுசீலா நினைத்தார். அதை வாசித்ததாக இளையராஜா கூறினார். ஆனால், ராஜா வாசித்ததை சவுண்ட் என்ஜினீயர் ரெக்கார்டு செய்யத் தவறிவிட்டார் என்பது பிறகு தெரியவந்தது. அப்போது அதுபற்றி வாக்குவாதம் ஏற்பட்டபோது, அறையில் இருந்து ராஜா வெளியேறிவிட்டதாக் கூறப்படுகிறது. அதனால்தான், ஆரம்ப நாட்களில் எஸ்.ஜானகியை அவர் அதிகம் பாட வைத்தாரா?

ஆனாலும் தொடர்ந்து, அவர் பி.சுசீலாவை ஏறக்குறைய ஒரு பெண் தெய்வமாகவேக் கருதி போற்றி வந்தார் என்ற அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. பல பாடல்களுக்கு சுசீலாவின் குரலை அவர் பயன்படுத்திக் கொண்டார். அவையும் ஹிட் பாடல்கள் ஆகியிருக்கின்றன. எனினும், ஒரு பாடலில் குடிகொண்டிருக்கும் மனநிலையை வெளிக் கொண்டு வருவதில் ஜானகிக்கு இருக்கும் ஆற்றலும், வீச்சும் இளையராஜாவுக்கு அதிகம் பொருந்தி வந்தன. லதா மங்கேஷ்கருடன் ஒரு ரெக்கார்டிங்  என்பது ராஜாவின் கனவாக இருந்து வந்த நிலையில், அப்படி ஒரு ரெக்கார்டிங்கை அவருடன் முடித்த பிறகு, லதா மங்கேஷ்கர்  அற்புதம் என்றாலும் ஜானகி ஜானகிதான் என்று இளையராஜா குறிப்பிட்டதாக சொல்லப்படுகிறது.

ஜானகியின் வீச்சு, முன்னேற்பாடில்லாமல் திடீரென பாடும் திறன், சூழலுக்கு ஏற்றவாறு அது தாலாட்டு, நாட்டுப்புற பாடல், சோகமான சூழல், காதல் அல்லது உணர்ச்சிப் பரவசம் என எதுவாக இருந்தாலும் குரலை மாற்றிப் பாடும் ஆற்றல் முதலியவை எல்லாம் தனக்கு அதிகம் பொருந்துவதாக இளையராஜா உணர்ந்தார். அன்னக்கிளியில் இருந்து ஜானகியின் பாடல்களை வரிசையாக எடுத்துக் கொண்டால், அவரது நிலை சரியென்பது மெய்ப்படும். கடந்த காலங்களில், இரண்டாவது ஹீரோயின்களின் பாடல்களுக்குத்தான் ஜானகி அதிகம் பயன்படுத்தப்பட்டார். மெயின் ஹீரோயினுக்கு சுசீலாதான் பாட வேண்டும், ஜானகி அல்லது எல்.ஆர். ஈஸ்வரி போன்றவர்கள் மற்றவர்களுக்குப் பாடவேண்டும் என்பது அந்த நாட்களில் எழுதப்படாத விதியாக இருந்தது. இதை எல்லாம் இளையராஜா புரட்டிப் போட்டார். ஜானகிக்கு முதலிடம் கொடுத்தார். அந்த துணிச்சலான முடிவுக்கு நல்ல பலன் கிடைத்தது.

வயதாகிக் கொண்டிருந்த நிலையும் சுசீலாவுக்கு இழப்பை ஏற்படுத்த தொடங்கியது என்பதையும், அவரின் குரல் முன்பு போல அவ்வளவு இனிமையாக இல்லை என்பதையும்  நினைவில் கொள்ள வேண்டும். எனவே, ஜானகியை (உயர்ந்த குரலெடுத்து, எட்டு கட்டை சுரத்தில் பாடுவதில் அவர் தனித் திறமை கொண்டிருந்தார்) அதிகம் பாட வைப்பது என்ற இளையராஜாவின் முடிவு, தொழில்முறையிலும் வலுவான முடிவாக இருந்தது.

இதனால் அவர் சுசீலாவை புறக்கணித்து விட்டார் என்பதல்ல. சுசீலாவைப் பொருத்தவரையில், கடந்த கால தப்பெண்ணங்களை எல்லாம் அவர் ஒதுக்கித் தள்ளிவிட்டார். இளையராஜாவின் கை இசைக்கோல் அசைவுகளின் கீழ் சுசீலா தொடர்ந்து எண்ணற்ற பாடல்களைப் பாடியிருக்கிறார். அவற்றுள் பல ஹிட் சாங்ஸ். இளையராஜா – ஜானகி இணைந்து உருவாக்கிய தாக்கத்தை அவை ஏற்படுத்தவில்லை என்றாலும். சுசீலா – இளையராஜா பாடல்களுக்கு, அவற்றுக்கே உரிய மாயங்களும், மனமகிழ்ச்சியும் இருக்கின்றன. (ராசாவின் மனதிலே, உன்னை நம்பி நெத்தியிலே, சோலை புஷ்பங்களே, டார்லிங் டார்லிங் டார்லிங், ஏ தென்றலே, முத்துமணி மாலை, கண்ணன் ஒரு கைக் குழந்தை, கங்கை ஆற்றில் நின்றுகொண்டு முதலியவை.)

மற்ற எல்லோரைக் காட்டிலும் தனக்கு அவர் உயர்ந்தவர் என்பதைக் காட்டும் வகையில், சுசீலாவை அத்தகைய ஒரு பீடத்தில் இளையராஜா அமர்த்தியிருந்தார் என்று சொல்லப்பட்டது. சுசீலாவின் இசையைப் பற்றியும்,  குரல் வளம் குறித்தும் அவர் மணிக் கணக்கில் பேசுவார். ஏறக்குறைய சுசீலாவின் திரை இசைப் பயணத்தையே முடிவுக்குக் கொண்டு வந்த அவர்தான், சுசீலாவின் பயணம் புதிதாகத் தொடர்வதற்கும் காரணமாக இருந்தார் என்பதுதான் வினோதம்.

(தொடரும்)


Share the Article