English தமிழ்

Share the Article

ஆரம்ப காலத்தில், இளையராஜாவின் சகோதரர் ஆர்.டி.பாஸ்கர் சென்னையில் உள்ள தயாரிப்பாளர்களின் அலுவலகங்களுக்குச் சென்றுஇளையராஜா- பாவலர் சகோதர்களுக்கு இசையமைப்பதற்கான வாய்ப்புகளைத் தேடுவார். அச்சமயத்தில் வாய்ப்புக்கொடுப்போர் தான்அவர்களுக்கு இல்லை. ஒரு கட்டத்தில், இளையராஜா தன் சகோதரர் பாஸ்கரிடம் யாருடைய அலுவல்ககத்துக்கும் போக வேண்டாம். வாய்ப்புநம்மைத் தேடி வரும் என கூறிவிட்டார். (இது இசைஞானி இளையராஜா தொடரின் மூன்றாம் பகுதியாகும். இரண்டாம் பகுதியை வாசிக்கலாம். )

ஒருநாள், அவர்களின் நண்பரான செல்வராஜ் ( கதையாசிரியர் மற்றும் இயக்குநர்) மையிலாப்பூரில் வாடகை வீட்டில் குடியிருந்த இளையராஜாவைதேடி வந்து, தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அவர்களை சந்திக்க விரும்பியதாகக் கூறினார். வேறு ஒரு இசை அமைப்பாளரின் இசைக்குழுவில் பணியாற்றிக்கொண்டிருந்தபடியால் ராசையா (இளையராஜா) அங்கு இல்லை. ஆகையால்,பாஸ்கரும் கங்கை அமரனும் மைலாப்பூரிலிருந்து நடந்தே பாம்குரோவ் ஹோட்டலுக்குச் சென்றனர். பஞ்சு அருணாச்சலம், ராசையா (இளையராஜாவும்) இருக்க வேண்டும் என விரும்பினார். அவர்கள் இருவரும் ராசையாவை அழைத்து வர, வாஹினி ஸ்டுடியோவுக்கு நடந்தே சென்றனர். அதிர்ஷ்டவசமாக, ராசையா கையில் காசு இருந்ததால், அன்று டாக்ஸிக்கு காசு கொடுத்துத் பஞ்சு அருணாச்சலத்தைச் சந்திக்க திரும்பினர். ‘’அப்போது டாக்ஸி கட்டணம் 70 பைசா தான். ஆனால் அதுவே எங்களுக்கு பெரிய காசாக இருந்தது’’ என்றார் பாஸ்கர்.

நினைவுகளை மீட்டுப் பேசிய இளையராஜா ,’’ பஞ்சு சார் சிறிய அறையில் இருந்தார். சிறிய மேஜைக்கு முன்பு லுங்கி, பனியனுடன்அமர்ந்திருந்தார். அந்த அறையில் சிகரெட் மற்றும் மதுவையின் . வாடை அடித்தது. அவரிடம் நான் உங்களை கவிஞர் கண்ணதாசனுடன் சபதம் படத்துக்கு பாட்டெழுத வந்தபோது
பார்த்துள்ளேன் எனக் கூறினேன். பஞ்சு சாரும் ஞாபகப்படுத்தி, ஆமாம் சந்தித்தோம் என கூறினார். அவருக்காக சில பாடல்களைப் பாடுமாறு கேட்டார்.பாடினேன். தாளம் போட அங்கிருந்த மேஜையைப் பயன்படுத்தினேன். அப்போது பஞ்சு சார், தான் ஒரு காமெடி படம் எடுப்பதாகக் கூறினார். அதற்குஇந்த பாடல்கள் பொருந்தாது என கூறினார். நான் பாடிய பாடல்களை வேறு ஒரு படத்துக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் ’’என கூறினார்.

‘’எங்களை பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் வேண்டாம் என மறுத்தனர். இத்தனைக்கும் நாங்கள் முழு ஆர்க்கெஸ்ட்ராவுடன் பாடகர்களை வைத்துதான் பாடி காட்டினோம் ஆனால், ஆச்சர்யமாக, பஞ்சு சார், நான் வெறும் மேஜையை தட்டி பாடிய பாடல்களைகேட்டு எனக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகக் கூறி பின்னர் வாய்ப்பும் கொடுத்தார்’’ என தன் பழைய நினைவுகளைக் கிளறினார்.

‘’இன்றும் கூட, அப்பாடலை நான் கேட்கும்போது என் மனதில் பாடல் பதிவின்போது நிகழ்ந்த சம்பவங்கள் ஓடும்’’ என்றுகூறினார் இளையராஜா

செல்வராஜ், மருத்துவச்சி என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதினார். பஞ்சு அருணாச்சலம் அதை படமாக்குவது என முடிவெடுத்தார். பின்பு அது ‘அன்னக்கிளி’ என்ற பெயரில் உருவானது. ‘அன்னக்கிளியே உன்னைத் தேடுதே’ பாடலுக்கு முதலில் லதா மங்கேஷ்கர் வைத்துதான் ஒலிப்பதிவு செய்வதாக இருந்தது.சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் வர முடியாமல் போனது என்று சில விஷயங்களைதெரியப்படுத்தினார் இளையராஜா. ஆகையால், எஸ்.ஜானகியை வைத்து அப்பாடலை ஒலிப்பதிவு செய்ய திட்டமிட்டோம். .இப்பாடலுக்கான ஒத்திகை கல்யாண மண்டபத்தில்தான் நடத்தப்பட்டது. ஏவிஎம் ரெகார்டிங் தியேட்டரில் தான் இப்பாடலை பதிவு செய்ய பூஜைபோடப்பட்டது. பாடலை பதிவு செய்வதற்கு முன்பு மின்சாரம் தடைபட்டது. ரெக்கார்டிங் தியேட்டரில் உள்ள அனைவரும்அதிர்ச்சி அடைந்தனர். அப்போது யாரோ,’’நல்ல சகுனம்’’ என கூறியது காதில் விழுந்தது என்றார் இளையராஜா.

பஞ்சு அருணாச்சலத்தின் குடும்பத்தில் சிலர் இளையராஜா இசை அமைக்க வேண்டாம்என கூற அதையும் தாண்டி அவர் முடிவெடுத்ததை சுட்டிக்காட்டினர். பஞ்சுவின் குடும்பத்தினர் ராசையா அப்படத்துக்குப் இசை அமைக்க எதிர்ப்புத் ‘தெரிவித்தது சரிதான் என்று கெட்ட சகுனம்’ காட்டிவிட்டது என சிலர் பாடல்பதிவின்போது கூறினர்.

‘’எங்கள் முதல் நாளிலேயே இப்படி நடந்தது மிகவும் பயங்கரமானதாக இருந்தது. எனக்கு துக்கம் தொண்டையை அடைக்க நான் ரெகார்டிங் தியேட்டரிலிருந்து வெளியேறிவிட்டேன். இயக்குநர் பி.மாதவன் அப்போதுதான் ஒரு பூஜையிலிருந்து, பாடல் பதிவைக் காண வந்திருந்தார். சிறு பாக்கெட்டிலிருந்து கொஞ்சம் குங்குமம் எடுத்துக் கொடுத்தார். அதனை என் நெற்றியில் வைத்துக்கொண்டேன். எஸ்.ஜானகி, ‘இதெல்லாம்நடக்குற விஷயந் தான். எல்லாம் சரியாகிவிடும்’ என ஆறுதல் கூறினார். சிறுது நேரத்தில் மின்சாரம் திரும்பி வர இன்னொரு பிரச்சனைக் காத்திருந்தது. முதல் டேக்கை எடுத்தோம் ஆனால் அது பதிவாகவில்லை’’ என அந்த முதல் நாள் திகில் நிமிடங்களை கூறினார் இளையராஜா.

‘’இன்றும் கூட, அப்பாடலை நான் கேட்கும்போது என் மனதில் பாடல் பதிவின்போது நிகழ்ந்த சம்பவங்கள் ஓடும்’’ என்றுகூறினார் இளையராஜா. ஏற்கனவே அவர் இசையமைத்த இரு படங்கள் வெளியாகவில்லை. இன்றும் பலர் ’அன்னக்கிளி’தான்இளையராஜாவின் முதல்படம் என்று நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அதற்கு முன்பு அவர் இசையமைத்த இரண்டு அல்லது மூன்றுபடங்கள் இறுதிவரை வெளியாகவில்லை. இது சினிமாத்துறையில் இயல்பாக நடக்கின்ற விஷயங்கள் தான்.

அவருடைய ஆரம்ப முயற்சிகள் தோல்வியடைந்த காரணத்தால், அன்னக்கிளி திரைப்படம் வெளியாகும் முன்பு அதிக படபடப்பில்இருந்துள்ளார் ராசையா.
ராசையாவுக்கு அடுத்து ஒரு தடையும் இருந்தது. பிற்காலத்தில் இளையராஜா ‘ரி-ரெகார்டிங்கின் ராஜா’ என்று அறியப்பட்டாலும் அவருடைய முதல்படத்துக்கு அவரால் ரி ரெஜ்கார்டிங் செய்ய தடை வந்தது.
யார் தடை விதித்தார்கள்?

(தொடரும்)…..


Share the Article