தமிழ்

Share the Article

நமது மண்ணின் வளம் குறைந்து வருகிறது. நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சுவதால், நிலத்தடி நீரின் அளவு வேகமாகக் குறைந்து வருகிறது. வேதி இடுபொருட்களான பூச்சி மருந்துகள் சுற்றுச்சூழலை மாசடைய வைக்கிறது. இதனால் நமது உணவுச் சங்கிலி பாதிக்கப்படுகிறது. இவை அனைத்துக்கும் அறிவியல் சாட்சியங்கள் உள்ளன. மண் தனது வளத்தை இழந்து வருவதால், மண் அரிப்பு அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. பயிர் உற்பத்தி பல ஆண்டுகளாக ஒரே நிலையில் இருப்பதால், உற்பத்தியைப் பெருக்க மேலும் மேலும் வேதி உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. : ‘’1980களில் 50 கிலோ கோதுமையை உற்பத்தி செய்ய, 1 கிலோ உரம் பயன்படுத்தினர். இன்று விவசாயிகள் 8 கிலோ கோதுமையை உற்பத்தி செய்ய 1 கிலோ உரத்தை பயன்படுத்துகின்றனர்’ என்கிறார். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் முன்னாள் டைரக்டர் ஜெனரல்களில் ஒருவர்.

விவசாய நிலங்கள் நஞ்சாக மாறி வருவதால், இன்றைய நவீன வேளாண்மை பசுமை இல்ல வாயுக்களை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய மூலாதாரமாக உருவாகி பருவநிலையை பாதிக்கிறது என்று சொல்லப்பட்ட ஆய்வு, கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளது. ஜெர்மனியில் கடந்த 25 ஆண்டுகளில் வனப்பகுதியில் உள்ள பூச்சிகளில் மூன்றில் ஒரு பங்கு முற்றிலும் அழிந்துவிட்டன என்கிறது என்கிறது சஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழக ஆய்வு, தேனீக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது சர்வதேச அளவில் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. அதுவும், இயற்கை வளப்பகுதிகளில் 75 சதவீத பூச்சிகள் அழிந்து வருவது,  ’சூழியல் போர்’ உருவாவதற்கான எச்சரிக்கை. இது இந்தியாவில் மகாராஷ்ட்ரா, குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்களில் மட்டும் நடக்கவில்லை. அமெரிக்காவில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியில் காய்ப்புழு பூச்சி மருந்துகளுக்கு கட்டுப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கரோலினாவிலிருந்து டெக்ஸாஸ் மாகாணம் வரை, காய்ப்புழுகள்   பருத்தியை அழித்து வருகின்றன.

விவசாய நிலங்கள் நஞ்சாக மாறி வருவதால், இன்றைய நவீன வேளாண்மை பசுமை இல்ல வாயுக்களை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய மூலாதாரமாக உருவாகி பருவநிலையை பாதிக்கிறது என்று சொல்லப்பட்ட ஆய்வு, கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளது.

பசுமை புரட்சி, ஏற்கெனவே பல்வேறு துயரங்களை உருவாக்கி விவசாயிகள் தற்கொலை வரை கொண்டுபோய் விட்டுள்ளது.  இடுபொருட்களின் விலை உயர்வுடன் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு அதற்கு ஏற்ப அதிக விலை கிடைக்காமல் போனால், விவசாயிகளின் வருமானம் மிக மோசமாக வீழ்ச்சியடையும். அமெரிக்கவில் கடந்த 4 ஆண்டுகளில், பல நூறு பால் பண்ணை உற்பத்தியாளர்கள் தங்களது பண்ணைகளை மூடியுள்ளனர். மானியம் நிறுத்தப்படுமானால், ஐரோப்பாவில் பல பண்ணைகள் லாபகரமாக இயங்க முடியாத நிலை ஏற்படும். 2016இல் விவசாயிகள் ஒரு மாதத்துக்கு 350 யுரோக்களை மட்டுமே  வருமானமாகப் பெற்றுள்ள்ளனர் என்று பிரான்சில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் 17 மாநிலங்களில் அதாவது பாதிக்கும் மேற்பட்ட நாட்டில் விவசாயிகளின் ஆண்டு வருமானம் ரூ.20 ஆயிரம்தான் என்று 2016ஆம் ஆண்டு மத்திய அரசின் பொருளதார சர்வே தெரிவித்துள்ளது. நிதி ஆயோக் நடத்திய ஆய்வில், 2011ஆம் ஆண்டிலிருந்து-2016 வரை விவசாய வருமானத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, சில ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச பருவலநிலை மாற்ற அமைப்பும் (ஐபிசிஎல்)  எச்சரிக்கை விடுத்துள்ளது. ’எப்போதும் போலான விஷயம்’ என்ற முடிவு முன்னேற்றத்துக்கு வழி வகுக்காது என்பதை பலமுறை கூறியுள்ளோம். இம்மாதிரியான எச்சரிக்கைகளைக் கவனத்தில் கொள்ளாமல், சுற்றுச்சூழலை பாதுகாக்க கொள்கையளவில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதுகுறித்து, சர்வதேச அளவில் இயங்கும் மேம்பாட்டுக்கான வேளாண் அறிவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு அமைப்பு (IAASTD), ஜோகன்ஸ்பெர்க்கில் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதியிலிருந்து 12 ஆம் தேதி வரைகளில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் நிலைத்த வேளாண்மைக்கு மாறுவது குறித்த ஒப்பந்தம் கூட இன்னும் முழு உருவம் அடையாமல் தொடக்க நிலையிலேயே இருக்கிறது.

ஒவ்வொரு பேரழிவும் ஒரு வாய்ப்பு. ஆனால் இது  வியாபாரத்துக்கான வாய்ப்பாக அமைந்து விடுகிறது. உதாரணத்துக்கு, 2008இல் உணவுப் பஞ்சம் நிலவியது. 37 நாடுகள் உணவு பஞ்சத்தை எதிர்கொண்டன. இந்த நிலைமையை மாற்ற சர்வதேச சமூகம் ஒரு திட்டத்தை முன்மொழிந்தது. 17 தனியார் நிறுவனங்களின் தலைவர்கள், 2009இல் உலக பொருளாதார மன்றம் அமைத்து உலக அளவில் ஒரு மாற்றத்துக்கான தொடக்கத்தை ஆரம்பித்தார்கள். இந்தப் பொருளாதார அமைப்பில் மாண்சாண்டோ, கோ கோலா, டூபாண்ட், வால்மார்ட், யுனிலீவர், நெஸ்லே, பெப்ஸி கோ,கிராப்ட் ஃபுட்ஸ் உள்ளிட்ட சில பெரிய வேளாண் நிறுவனங்கள் இந்த அமைப்பில் இருந்தன. ‘வேளாண்மையில் புதிய நோக்கம்;பார்வை’ என்பதின் கீழ், பத்தாண்டுகளில் உணவு உற்பத்தியை 20 சதவீதம் அதிகரிப்பது, பசுமை இல்ல வாயுக்கள்  வெளியேற்றத்தை ஒரு டன்னுக்கு 20 சதவீதம் குறைத்தல், ஒவ்வொரு பத்தாண்டுக்கும் வறுமையை 20 சதவீதம் ஒழித்தல் போன்ற பல முக்கிய நோக்கங்களைக் கொண்டு அது உருவாக்கப்பட்டது. அதாவது உலகம் பல விஷயங்களை மாற்ற  விரும்பியது. இருப்பினும் பல விஷயங்கள் மாறாமல் அப்படியே உள்ளன.

இப்படி சிக்கலான நேரத்தில், சீன அதிபர், உலகம் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஒத்துக்கொண்டுள்ளார். கடந்த அக்டோபரில் பெய்ஜிங்கில் நடைபெற்ற நேஷனல் காங்கிரஸ் ஆப் தி கம்யூனிஸ்ட் பார்ட்டி கூட்டத்தில், ‘’இயற்கையின் மீது நாம் எந்த சீரழிவை உருவாக்கினாலும் அது திரும்ப நம்மையே தாக்கும். இந்த உண்மையை நாம் எதிர்கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார். இதனை எதிர்நோக்க, சட்டப்படியான கொள்கைகளை உருவாக்க வேண்டும். அக்கொள்கையின் மூலம் பசுமையான, குறைந்த கார்பனை உருவாக்கும் வகையிலான மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்கு மரம் நடுதலை மேம்படுத்த வேண்டும். நஞ்சை நிலத்தை பலப்படுத்த அதனை மீட்டுட்டுருவாக்கம் செய்து, பாதுகாக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், 21ஆம் நூற்றாண்டு, சூழியல் நாகரிகத்துக்கான தொடக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வளங்குன்றா வேளாண்மை குறித்த பேச்சு பரவலாக்கம் பெற்று வரும் சூழலில், ஆந்திர மாநிலத்தில் இயற்கை வேளாண்மையை ஆதரிக்கும் வகையில் பெரிய திட்டம் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம், ’ரிது சதிக்ர சம்ஸ்தா’ என்றழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம், 2017லிருந்து 2022க்குள் 13 மாவட்டங்களில் 5 லட்சம் விவசாயிகளை இயற்கை விவசாயம் செய்ய வைக்க வேண்டும் என்பதே நோக்கம். அண்மையில் கர்னால் மாவட்டத்தில் பல கிராமங்களை பார்வையிட்ட போது, சில விவசாயிகள் ரசாயன உர விவசாயத்திலிருந்து இயற்கை விவசாயத்துக்கு மாறுவதைப் பார்த்தேன். அதனால், பல இடங்களில் பயிர்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதைக் கண்டு அதிசயித்தேன். நிலக்கடலை உற்பத்தி 35 சதவீதம் அதிகரித்துள்ளது. பருத்தி 11 சதவீதமும் மிளகாய் 34 சதவீதமும்  கத்தரி 69 சதவீதமும் நெல் 10முதல்12 சதவீதம் வரையும் உற்பத்தி அதிகரித்துள்ளது. தற்போதுவரை 1.63 லட்சம் விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு திரும்பியுள்ளனர். வேதி உரம் மற்றும் பூச்சி மருந்துகள் இல்லாமல் பயிர் உற்பத்தி அதிகமானால், விவசாயிகளின் நிகர வருமானமும் அதிகரிக்கிறது. ஆந்திரத்தை முன்னுதாரணமாகக் கொண்டு மற்ற மாநிலங்களும் இம் முன்னோடித் திட்டத்தை ஏன் அமல்படுத்த முயற்சி செய்யவில்லை என்பதுதான் கேள்வி.

இக்கட்டுரையின் ஆங்கில வடிவத்தைப் படிக்க கிளிக் செய்யவும்.


Share the Article