English தமிழ்

Share the Article

ஒரு விஷயத்தை  சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வெளிநாட்டவர்களை சந்திக்கும்போது, நம் நாட்டில் நிலவும் சாதியம் குறித்து என்னிடம் கேட்பார்கள். ஜப்பானிய சமூகத்தில் எல்லாருமே சமமானவர்கள்’ என்றார் ஒரு ஜப்பான்காரர். அவரிடம் நான், ‘அப்படியானால் புராகுமின் மக்கள் யார்?’ என கேட்டேன். அவர் தர்மசங்கடத்துடன், ‘அதெல்லாம் கடந்த கால விஷயங்கள்’ என்றார். அவரிடம், ‘இந்தியா குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருக்கும் அந்த விஷயமும் இப்போது இல்லை’ என பதிலளித்தேன்.

இடதுசாரிகளின் மிகப்பெரும் களமாக  அறியப்பட்ட மான்ஹாட்டனில் கூட சாதியம் இருந்தது என நிரூபிக்க விரும்பினேன்; இடதுசாரிகள் அதுகுறித்து உற்றுநோக்க இந்திய வரை செல்ல வேண்டாம் என்று கூற விரும்பினேன்.

96ஆவது கிழக்கு   தெரு மான்ஹாட்டன் தீவிலிருந்து கீழ்நோக்கி அமைந்திருந்தது.  ஸ்பானிஷ் ஹார்லம் என்றழைக்கப்பட்ட அப்பகுதியில் லத்தீன் அமெரிக்கர்கள் வசித்தார்கள். அந்த தெருவின் சரிவு, சமூக வீழ்ச்சியின் ஆரம்பமாகவே உணர்ந்தேன்.

நான் இதழியல் குறித்து படிக்கும்போது, ‘’நியூயார்க் நகரம்  மேலும் கீழும்’’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதும் வாய்ப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. இந்தியாவில் சாதி இருக்கிறது என பேசும் அமெரிக்கர்களிடம் உங்கள் ஊரிலும் இப்படியான வேறுபாடு இருக்கிறது என்பதை நிரூபிக்க களத்தில் குதித்தேன்.

நியூயார்க்வாசிகள் உயர்ந்த நிலையிலும் தாழ்வான நிலையிலும் எப்படி வாழ்கிறார்கள் என்பதை சொல்வது நோக்கம் எனக்கு இல்லை. ஆனால் வருமானம், சமூக பாகுபாடுகள் அந்த நகரத்தில் எப்படி விரவியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்பினேன். அதற்காக அவர்களின் வருமானம் உள்பட அனைத்துத்  தகவல்களையும் ஆராய ஆரம்பித்தேன்.

அமெரிக்காவில் 2002இல் கூட ஒருவர் சி.எஸ்.வி ஃபைல் மூலம், ஒவ்வொரு ‘பிளாக்’ கிலும் உள்ள மக்கள் தொகை குறித்து அறிய முடியும். அதாவது அத்தகவல்களைக் கொண்டு பகுப்பாய்ந்து சில உண்மைகளை பெற முடியும் என்ற நிலையிருந்தது. (நியூயார்க்கில்  பிளாக் என்பது இரண்டு நிழற்சாலைகள் மற்றும் இரண்டு தெருக்களுக்குட்பட்ட செவ்வகப்பகுதி) அங்கு, பெரும்பாலான உயர் வருமான வெள்ளைக்காரர்கள் ஒருவருக்கொருவர் அருகில் வசித்தார்கள். அவர்களின் வாழிடம் கடலை நோக்கியோ அல்லது பசுமையான திறந்த வெளியை நோக்கியோ இருந்ததை பார்த்தேன்.

இதற்கு விதிவிலக்காக கிழக்கில் 96ஆவது தெரு இருந்தது. கிழக்கு 96ஆவது தெருவுக்கு தெற்கில் பணக்காரர்களும், வடக்கே ஏழ்மையில் இருந்த லத்தீன் அமெரிக்கர்கள் வசித்து வந்தனர்.

மான்ஹாட்டன் என்பது ஒரு தீவு. அங்கு 1250 வரையுள்ள கிழக்கு மேற்காக தெருக்கள் அமைந்திருக்கும். வடக்குத் தெற்காக நிழற்சாலைகள்(அவென்யூ) அமைக்கப்பட்டிருக்கும்.  உதாரணத்துக்கு முதல் தெருவில் ’வால் ஸ்டீரிட்’ இருந்தது.

கிழக்கு 96ஆவது தெருவில் வாழ்ந்த பணக்காரர்கள், ஏழைகளின் முகம் பார்த்து வாழ்ந்தார்கள். புவியமைப்பு சமுக பாகுபாட்டுக்கு உதவுவதுபோல் அமைந்திருப்பதுதான் புதிராக இருந்தது. 96ஆவது கிழக்கு தெரு மான்ஹாட்டன் தீவிலிருந்து கீழ்நோக்கி அமைந்திருந்தது.  ஸ்பானிஷ் ஹார்லம் என்றழைக்கப்பட்ட அப்பகுதியில் லத்தீன் அமெரிக்கர்கள் வசித்தார்கள். அந்த தெருவின் சரிவு, சமூக வீழ்ச்சியின் ஆரம்பமாகவே உணார்ந்தேன்.

நியூயார்க்கில் நிலவிய கடும் குளிர் என்னை கதகதப்பான அறையிலேயே இருக்க கட்டாயப்படுத்த, என் நண்பன் சான் அல்ஃபானோ  அந்தக் கட்டுரையை செய்ய முனைந்தார். அந்தக் கடும் குளிர் அவரை ஒன்றும் செய்யவில்லை. அவருடைய கட்டுரையின் மூலம் கிழக்கு 96ஆவது தெருவில்  நிலவும் பாகுபாட்டை தோலுரித்துக் காட்டினார்.

என் முயற்சியில்  வென்றுவிட்டேன் என பெருமிதப்பட்டேன். மான்ஹாட்டன் நகரம் எங்கள் மூதாதையரின் ஊரான திருநெல்வேலி அருகிலுள்ள கருங்குளத்தை நிலவிய பாகுபாட்டை ஒத்திருந்தது என நிரூபித்தேன்.

கருங்குளத்தில் இருக்கும் மலையில் கோயில் இருக்கும். அதன் சரிவில் பல்வேறு சாதி மக்களை காண முடியும்.  மலையின் உச்சியில் பார்ப்பனர்கள் அதிகம் வசிக்கும் அக்ரஹாரம் இருக்கும். அங்கிருந்து சரிந்து செல்லும் பகுதியில் நடந்தால் கோட்டைவாசல் , அதாவது மலையின் நுழைவாயில் வரும். அம்மலை வாயில் வழியே செல்ல, அங்கு பெரிய கோட்டை எதுவும் இல்லாத போதும், கோட்டைவாசலில் பெரும்பாலான மக்கள் வசித்தார்கள்.

வீழும் தடுப்புகள்

1970களில் பார்ப்பனர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று விட்டார்கள்.  அங்கு மற்ற சாதியைச் சேர்ந்தவர்கள் வீடு வாங்கி அக்ரஹாரத்துக்குள் குடிபெயர்ந்தனர். இன்று கருங்குளம் அக்ரஹாரத்தில் பல சாதி மக்கள் அருகருகே வசிக்கிறார்கள். ஆனால், ஸ்பானிஷ்  ஹார்லம் பகுதியில் லத்தீன் அமெரிக்கர்கள்  மட்டுமே வசிக்க, 96ஆவது கிழக்கு தெருவில் தெற்குப் பகுதியில் அதே வெள்ளையர்கள் மட்டுமே வசிக்கிறார்கள். ஆகவே, எனது பூர்வீகம் குறித்து எனது மனதில் இருந்த கறைபடிந்த பிம்பம் அகன்றுவிட்டது என நினைத்தேன்.

எந்த திசையில் இருந்து வரும் காற்றானாலும் அது தலித்துகளை வருடிய காற்றாக இருக்கக் கூடாது என்பதற்காகவே தென் கிழக்காக தலித் குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார் சிவசுப்ரமணியன். தீண்டாமையின் உச்சகட்டம் இது என்று விவரிக்கிறார்.

கருங்குளம் குறித்து எனது சிறுவயது நினைவுகளில் இருப்பது, கோயில் அருகே அமர்ந்து மலையுச்சியில் மாலை நேரத்தில் வீசும் அந்தத் தென்றல் காற்றை ரசித்த நிமிடங்கள் தான். அப்போது இடதுபுறத்தில்  தாமிரபரணி ஆறும் நிலவொளியின் ரம்மியமும் அதனூடே எப்போதாவது ஒலிக்கும் பேருந்து ஹாரன் சப்தமும் மறக்கமுடியாதவை. வலது புறத்தில், திருநெல்வேலி  திருச்செந்தூர் செல்லும் ரயில் ஒரு மலை முகட்டில் ஏறி, மற்றொரு மலை முகட்டில் மறைவதைக் காண முடியும். அப்போது அங்கு எந்தக் கட்டடங்களும் இந்தக் காட்சியை மறைக்கவில்லை.

இன்னமும் அந்த காட்சி அப்படியே உள்ளது. தாமிரபரணி ஆறு வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டுதான் உள்ளது. திருச்செந்தூர் ரயில் பரந்த வெளியில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

கருங்குளத்தில் இப்போது இருக்கும் மாற்றங்களில், அங்கிருக்கும் கல்யாண மண்டபமும் ஒன்று.  அது அந்த கிராமத்தின் நுழைவாயில் போல் உள்ளது. அந்த மண்டபம், பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் காட்டப்பட்ட மண்டபத்தை ஒத்திருந்தது. அக்காட்சியில், தன் கல்லூரி தோழி அழைத்ததால் திருமண நிகழ்வுக்கு தன் சாதியை மறந்து வந்து, அப்படி வந்த காரணத்துக்காகவே அவமானப்படுத்தப்படுவான் கதை நாயகன்.  அக்காட்சியில் கதை நாயகனை  இழிவுபடுத்த, அவர் மீது ஒருவர் சிறுநீர் கழிப்பது போன்ற அதிர்ச்சிகரமான காட்சி  அனைவரையும் உறையவைக்கும்.

அந்த காட்சி ஒரு முக்கிய திருப்புமுனைக் காட்சியாக அமையும். அது சமூகத்தில் நிலவும் சாதி ஆதிக்கத்தை சுருங்கக் கூறுவதாக உள்ளது. இருந்தபோதும் படத்தில் சாதி என்ற வார்த்தையோ அல்லது வேறு குறிப்பிட்ட வார்த்தைகளோ ஒரு குறிப்பிட்ட சாதியை சுட்டுவதாக இல்லை. இப்படத்தில் கருங்குளம், புளியங்குளம், செய்திங்கநல்லூர் ஆகிய கிராமங்களில் நிலவும் சாதிய  ஒடுக்குமுறைகளையும் சமத்துவமின்மையையும் காட்டப்பட்டுள்ளது.

கூகுள் வரைபடத்தில் புளியங்குளம் கருங்குளத்துக்கு தென் கிழக்கில் இருப்பதாகக் காட்டுகிறது. இங்கிருந்துதான், பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் வந்துள்ளார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த நாட்டுபுற ஆய்வாளரும் எழுத்தாளருமான பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன், தலித் குடியிருப்புகள் ஒரு கிராமத்தின் தென் கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் என்கிறார்.  சங்கப்பாடல்களில் ஒவ்வொரு திசையில் இருந்து வரும் காற்றுக்கு ஒவ்வொரு பெயர் உள்ளது என்று விளக்குகிறார்.  எந்த திசையில் இருந்து வரும் காற்றானாலும் அது தலித்துகளை வருடிய காற்றாக இருக்கக் கூடாது என்பதற்காகவே தென் கிழக்காக தலித் குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார் சிவசுப்ரமணியன். தீண்டாமையின் உச்சகட்டம் இது என்று விவரிக்கிறார்.

புளியங்குளம் இப்போது வறண்ட, உயிரற்ற நிலமாக தோன்றலாம், குறிப்பாக இத்திரைப்படத்தில். ஆனால் இங்குதான் பெரிய நாகரிகங்கள் தோண்டியெடுக்கப்பட்டு கண்டறியப்பட்டது. பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் புளியங்குளம் அருகிலுள்ள ஆதிச்சநல்லூரில் தான் கண்டுபிடிக்கப்பட்டன.  19ஆம் நூற்றாண்டில் பொக்கிஷங்களைத் தேடி வந்த ஐரோப்பியர்களுக்கு கிடைத்த அற்புத இடம் ஆதிச்சநல்லூர். ஜெர்மன் இனப்பண்பாட்டியியலாளர் ஃபெடர் ஜாகர், ஆதிச்சநல்லூரில் இருந்து எடுத்துச் சென்ற பழமையான ஆபரணங்கள், பாண்டங்கள், ஆயுதங்கள் அனைத்தும் இன்றும் வகைப்படுத்தப்படாமல் ஜெர்மன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

முதுமக்கள் தாழியிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் வல்லுநர்களுக்கு குழப்பத்தை உண்டாக்குவதாகவே உள்ளது. எலும்பு அமைப்பு, இன்றைய தமிழர்களுடன்  ஒத்துப்போவதாக இல்லை. அவர்கள் தான் திராவிடர்களின் மூதாதையர்களாக இருப்பார்கள்; சிந்து சமவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்களும் இவர்களாக இருக்கலாம் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள்.  இந்தக் எலும்புக் கூடுகள் சங்க காலத்தை சேர்ந்ததாக இருக்கும். அதாவது கி.மு 500. பாண்டியர்களின் துறைமுகமான கொற்கைக்கு  வந்த வெளிநாட்டவர்களின் எலும்புக் கூடுகள் அவை என்கிறார் எலும்பு உயிரியல் ஆய்வாளர் பி.ராகவன்,  .

பி.ராகவனின் சொல்கிறபடி,  ஆதிச்சநல்லூர் ஒரு குடியிருப்பாகவும்  இருந்திருக்கலாம். மக்களை புதைத்த இடமாகவும் இருக்கலாம்.  2500 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதிச்சநல்லூர் நாகரிகம் வளர்ந்த இடம். ஆதிச்சநல்லூர் கதை, எப்படி பரியேறும் பெரிமாள் திரைக்கதையுடன் பொருந்தி வரும்?

சமூக இனக்குழுக்களை ஆந்திரா மற்றும் வட இந்தியாவில் இருந்து வந்த பார்ப்பனர்கள் தான் சாதியாக மாற்றினார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அந்த பார்ப்பனர்கள் கடினமான சுவரை எழுப்பி அதில் தங்கள் இருப்பை உறுதி செய்து, சாதி நிலைகளை உருவாக்கிக்கொண்டனர். பார்ப்பனர்களை குடியமர்த்திய அரசர்கள்,  அவர்களுக்கு முதன்மையான  நிலங்களை வழங்கினர். இன்றும் தமிழகத்தில் ஆற்றங்கரையோரத்தில்  வளமானதாகவும் நீர்ப்பாசன வசதியுடனும் இருக்கும் நிலங்கள் பார்ப்பனர்களுக்கு சொந்தமானது. கருங்குளத்தில் பார்ப்பனர்களுக்கு சொந்தமான நிலம் அப்படித்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இது கருங்குளம் அல்லது புளியங்குளத்தில் மட்டுமில்லாது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடக்கும் சமத்துவமின்மை என்று கூறுகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.  இன்று கருங்குளத்தில் உள்ள அக்ரஹாரத்தில் கோனார்களும் தேவர்களும் பார்ப்பனர்களும் வசிக்கிறார்கள். ஆனால் கோயிலுக்கு கீழிருக்கும் தெருவில் தலித் மக்களான பள்ளர் சமூகத்தினர் குடியேறினார்களா?


Share the Article