English தமிழ்

Share the Article

இசை என்பது ஏழுகுறிப்புகள் (ஸ்வரங்கள் தான்) – ஸ ரி க ம ப த நி .  இதில் இசைக் கலைஞர்கள் புதியதாக செய்ய எதுவுமில்லை.   இசை என்பது ஏமாற்று வேலைதான்.  இந்த ஏழு ஸ்வரங்களுக்குள் சிறிய மாற்றங்களை செய்து அதன் வரிசையை மாற்றி புதிய இசைத் தோற்றங்களை உருவாக்குவதாக மக்களை நம்பவைத்து ஏமாற்றுபவன் ஞானி.  இதில் அதிகமக ஏமாற்றுபவன் இசை ஞானி  என்று தன்னையே விமர்சனம் செய்யத் தயங்காத அதிசய மனிதர் இசை ஞானியாக போற்றப்படுபவர் இளையராஜா.

மெயிஸ்ட்ரோ இசைஞானி  இளையராஜா தன்னைப்பற்றி வேறு சந்தர்ப்பத்தில் கூறியது தற்போதுள்ள  இசையமைப்பாளர்களுக்கு  இசைமேதைகள் ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன், விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி ஆகியோரால் போட்ட பிச்சையினால்தான் நாங்களெல்லாம் இசை அமைக்கின்றோம்.

லட்சக்கணக்கோர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இளையராஜா , மறைந்த இசைமேதைகளின் உமிழ்நீரில் தான் நாங்கள் இசை அமைக்கின்றோம் என்றுக் கூறினார். 

லட்சக்கணக்கோர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இளையராஜா , மறைந்த இசைமேதைகளின் உமிழ்நீரில் தான் நாங்கள் இசை அமைக்கின்றோம் என்றுக் கூறினார்.   மேலும் அவர் அபூர்வமான இசையமைப்பாளர்களான ஜி. ராமநாதன், சி.ஆர். சுப்பராமன், டி.ஜி. லிங்கப்பா மற்றும் அவர்களைப் போன்ற  சாலையை உருவாக்கி தந்துள்ளார்கள்.  தற்போதுள்ள என்னைப் போன்ற  இசையமைப்பாளர்கள், அவர்கள் அமைத்துத் தந்த இந்த நல்ல சாலைகளில்  ஏசி கார்களில் பயணம் செய்கிறோம் என்றும் அவர் கூறினார்.  அவருடையப் பாடல்களுக்கு ஊக்கமாக இருந்தவற்றை எப்போதும் அவர் மறுத்ததில்லை.  ராஜகுமாரன் என்ற திரைப்படத்தில் எஸ்.பி.பி. பாடிய தரமானப் பாடலான என்னவென்று சொல்வதம்மா என்ற இந்தப் பாடலுக்கு விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி இசையமைத்த, பி. சுசீலா பாடிய  அத்தைமடி மெத்தையடி என்றப் பாடல் தான் ஆதாரம் என்று இளையராஜாவே அதை அனைவருக்கும் தெரிவிப்பார். அந்தப் படத்தில் சில காட்சிகள் முன்னால் ஒரு கதாப்பாத்திரம்  அத்தைமடி மெத்தையடி என்ற பாடல் பாடுவதாக ஒரு காட்சி அமைக்கப்படும். அதாவது என்னவென்று சொல்வதம்மா என்று பாடல் அத்தைமடி மெத்தையடி என்ற பாடலின் தழுவல் தான் என்று இளையராஜாவே அந்தப் படத்தில் பதிவு செய்கிறார். இந்த பாடல்  விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி ஆகியோருக்கு தன்னுடைய பாணியில் காணிக்கை கொடுக்கும் விதமாக அமைத்திருந்தார்.  மேலும் நம்மையும் அவர்களை நினைத்துப் பார்க்கும் விதமாக அமைத்திருப்பார்.    இப்படிப்பட்ட துணிச்சலும் நேர்மையும் யாருக்கு வரும்?

உலகம் அவரை இசை ஜாலவித்தைக்காரர்(மந்திரவாதி) என்று ஆரவாரமாக கொண்டாடும்பொழுது அவர் தன்னைப் பற்றி மிக உயர்வாக மதிப்பிட்டதுக் கிடையாது.  பொது நிகழ்ச்சிகளிலும் அல்லது நேரடி பேட்டிகளிலும் இந்தமாதிரி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம் அதாவது இளையராஜா மிக அரிதாக கொடுக்கும் நேரடி பேட்டிகளிலும்  சரி அல்லது கலந்துக் கொள்ளும் பொதுவிழாக்களிலும்(இசை சம்பந்தப்பட்ட விழாக்களிலும்) சரி இவ்வாறு தற்பெருமை இல்லாமல் எளிமையாக நடந்துக் கொள்வதால் மற்ற இசை அமைப்பாளர்களிலிருந்து இவர் தனியாக தெரிகிறார்.

திரைப்படத்துறையில் இளையராஜா தற்பெருமை மற்றும் கர்வம் கொண்டவர் போல் நடந்து கொள்கிறார் என்று சிலர் நினைத்தாலும் இதற்கு எதிர்மறையானதாகவே இருப்பார்.  இளையராஜா மீது சிலர் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் வைப்பது நியாயம் தானா என்று பார்த்தால் அவர்கள் இளையராஜாவை புரிந்து கொள்ளவில்லை என்றுதான் சொல்ல நினைக்கின்றது. அடிப்படையில் ஒரு படைப்பாளி அவர்களது திறமையை எண்ணி  பெருமிதம் கொள்வது இயல்பான ஒன்று தான்.  அப்படி ஒரு உணர்வு ஏற்படவில்லை என்றால் அவன் படைப்பாளியே இல்லை என்று தான் பொதுவாக கருதுவோம்.    இளையராஜா திரைப்படங்களின் காட்சிகளுக்கேற்றவாறு  நல்ல / தரமான பாடல்களை வழங்கும்பொழுது, திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கோ அல்லது இயக்குநர்களுக்கோ எது நல்ல பாடல் அல்லது எது சரியில்லை என்றுத் தெரியாமல் (தெரியாததால்) மாற்றுக்கருத்தாக சிலவற்றைச் சொல்லி அவரை வற்புறுத்தும்பொழுது இளையராஜா அவர்களுக்கு எரிச்சல் ஏற்படுவதால் அவரைப் பார்க்குபோது கர்வம் உள்ளவர் போல் தோன்றும்.

நடிகர் மற்றும் இயக்குநரான நாசர் ஒரு சம்பவத்தை விவரித்தார்.     அது என்னவென்றால் நாசர் அவர்கள் அவதாரம் படம் தயாரித்தபொழுது அந்த படத்தில் இடம்பெற்ற தென்றல் வந்து என்ற பாடலுக்கு பல்லவியை இளையராஜா அவுட்லைன்  (கோடிட்டு) போட்டுக்காட்டியிருக்கின்றார்.  ஆனால் இதில் நாசருக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒரு நல்ல பாட்டைக் காட்டினால் தான் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்குவோம் என்று தெரிவித்த நிலையில் பாடல் சரியில்லை என்ற கவலையில் இருந்தார் நாசர். இளையராஜா, நாசர் அவர்களை மதியம்  இசைஅமைப்புக்(பாடல் ஒலிப்பதிவு) கூடத்திற்கு வரச்சொன்னாராம்.   நாசர் சென்றபொழுது,  இளையராஜா அவர்கள் முழுப் பாடலையும் பாடல் குழு மற்றும் இசையுடன் சேர்த்து போட்டுக்காட்டியுள்ளார்கள்.  நாசர்  ஆனந்த அதிர்ச்சியடைந்து விட்டார்.  ஏனெனில் அந்தப் பாடலானது அதன்  நடை(அமைந்த விதம்) மற்றும் தரத்தால் அவருக்கு பிரமிப்பு ஏற்பட்டது.

இதன்மூலம் நாசர் சொல்வது என்னவென்றால் நாம் யாரு அவருக்கு(இளையராஜாவுக்கு) “பாடலில் எந்த மாதிரி வேண்டும் என்று ஆலோசனை வழங்க? அவரிடம் இசையமைக்கும் பொறுப்பை கொடுத்துவிட்டால் நாம் அதில் தலையீடுச் செய்யவேண்டிய அவசியம் தேவையில்லை என்று குறிப்பிடுகின்றார்.  இசை அறிவேயில்லாத ஒரு தயாரிப்பாளர் எந்த பாடல் நல்லப் பாடல் என்று தீர்மானம் செய்தால் ஒரு உண்மையான படைப்பாளியான இளையராஜாவிற்கு கோபம் ஏற்படுவது நியாயம் தானே?

அவர்மீது பக்தி(போற்றும்படியான அன்பு) கொள்ளும் அளவிற்கு! ஒரு ரசிகர் பட்டாளம் எப்படி அமைந்தது?

(தொடரும்)…


Share the Article