English தமிழ்

Share the Article

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், அதிமுக அரசுக்கு சார்பாகவும் 18 எம்.எல்.ஏக்களுக்கு எதிராகவும் தீர்ப்புக் கிடைத்தால், ஆளும் அரசுக்குஅத்தீர்ப்பு தற்காலிகத் தீர்வாக  மட்டும்  அமையலாம். ஆனால் நீண்டநாட்களுக்கு அது பல்வேறு அரசியல் சிக்கல்களையும் தடுப்பரண்களையும்எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும். தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு வந்தால், அரசு உடனே 20 இடங்களில்இடைத்தேர்தலை நடத்த வேண்டி வரும். அது ஒரு ‘குறு பொது  தேர்தல்’ போல் அமையும்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஆர்கே நகர் இடைதேர்தலில் அமுமுக தலைவர் டிடிவி தினகரன் செய்ததைப் போல் இந்த 20 தொகுதிகளிலும்செய்ய     இயலாது என்ற நம்பிக்கை இருந்தால்,  இடைதேர்தல் வெற்றி அவர்களுக்கு மெஜாரிட்டி கிடைக்கச் செய்யலாம். ஆனால், ஆனால் இந்த இடை தேர்தல்களில் வெற்றி பெறுவது எளிதல்ல. கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் வெற்றிபெற்றால் திமுக ஆட்சி அமைக்க ஒரு சூழ்நிலை உருவாகலாம் அல்லாத 117 இடங்களை நெருங்கலாம்.

திமுகவிடம் ஏற்கனவே 88 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸில் 8 எம்.எல்.ஏக்களும்  முஸ்லீம் லீக் கட்சியில் ஒரு எம்.எல்.ஏ என மொத்தம் 97 பேர்உள்ளனர்.  அதுமட்டுமில்லாமல் அதிமுகவுக்கு பல திசைகளில் இருந்தும் சிக்கல் எழும். ஒரே நேரத்தில் திமுக, தினகரனின் அமுமுக ஆகியகட்சிகளை எதிர்கொள்வதோடு, உள்கட்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொடுக்கும் குடைச்சலையும் எதிர்கொண்டாக வேண்டும்.

 தினகரனின் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏக்கள், தங்க தமிழ்ச்செல்வன் – ஆண்டிபட்டி தொகுதி,  ஆர்.முருகன்  – அரூர், மாரியப்பன் கென்னடி – மானாமதுரை, கதிர்காமு – பெரியகுளம், ஜெயந்தி பத்மநாபன் – குடியாத்தம், பழனியப்பன் – பாப்பிரெட்டி பட்டி, செந்தில் பாலாஜி – அரவக்குறிச்சி, எஸ். முத்தையா – பரமக்குடி, வெற்றிவேல் – பெரம்பூர், என்.ஜி.பார்த்திபன் – சோளிங்கர், கோதண்டபாணி – திருப்போரூர், ஏழுமலை – பூந்தமல்லி, ரெங்கசாமி – தஞ்சாவூர், தங்கதுரை – நிலக்கோட்டை, ஆர்.பாலசுப்பிரமணி – ஆம்பூர், எஸ்.ஜி.சுப்ரமணியன் – சாத்தூர், ஆர்.சுந்தரராஜ் – ஒட்டப்பிடாரம், கே.உமாமகேஸ்வரி – விளாத்திகுளம் ஆகியோரை சபாநாயகர் தனபால் கடந்த செப்டம்பர் 18, 2017-ல் தகுதி நீக்கம் செய்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்டஎஸ்.டி.கே ஜக்கையன்  விளக்கம் அளித்த பிறகு சபாநாயகரால்  மீண்டும் சேர்க்கப்பட்டு அவருடைய எம்.எல்.ஏ பதவியைதக்க வைத்துக்கொண்டார்.

20 தொகுதிகளில் நடத்தப்படும்  இடைத்தேர்தல்களில் காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்பதை ஒரு முன்னோட்டமாகஅறிந்துகொள்ள முடியும்.  அது,  தமிழக அரசியலில் திடுக்கிடும் பல மாற்றங்களை உருவாக்குவதற்கு ஏதுவாக அமையும். பாஜக  யாருடன்  கூட்டணிஎன்பதை வெளிப்படுத்தியாக வேண்டும், ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளுமா அல்லது ஆர்கே நகர் இடைத்தேர்தலில்செய்தது போல் தனித்து போட்டியிடுமா என்பது   தெரியவரும்.

இடைத்தேர்தல்களில் மூலம் அதிமுக  குறைந்தபட்சம் 10 இடங்களிலாவது வெற்றி பெற்று   தனது பலத்தைஅதிகரித்துக்கொள்ள முடியும். அப்படியான வெற்றியைக் கொடுத்தால்தான், அதிமுக தனது கௌரவத்தை நிலைநாட்ட முடியும். மேலும் 2021 சட்டசபை தேர்தல் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள இயலும் என்ற நம்பிக்கையும் தன் தொண்டர்களுக்கும் மக்களுக்கும்கொடுக்க   முடியும்.    ஒருவேளை மிக மோசமான  தோல்வியை தழுவினால், அது அதிமுகவை மிகவும் பலவீனப்படுத்தும். திமுகஒருவேளை பல இடங்களில் வெற்றிபெற்றால், அடுத்து வரும் தேர்தலுக்கான வெற்றிக்கு அடித்தளம் அமைத்ததைப் போல் இருக்கும். ஒருவேளைதோற்றாலும் திமுகவுக்கு பெரிதாக எந்த இழப்பும் இல்லை, ஏனெனில் 2016 தேர்தலில் திமுக தோல்வியடைந்த தொகுதிகள் தான் இவை என்பதுகுறிப்பிடத்தக்கது. திமுகதான் இந்த இடைதேர்தலில் அதிக பயனடைந்த கட்சியாக இருக்கும். அதிமுக அணி பிளவுபடுவதின் பயனை திமுக நிச்சயம்அறுவடை செய்யும் என்று நம்பலாம்.

திமுகவுடன் கூட்டணியில் இல்லாத கட்சிகள் அதிமுகவுடனோ அல்லது தினகரனனின் அமுமுகவுடனோ ஏன், கமலின் ‘மய்யம்’  உடனோ,ரஜினியுடனோ கூட்டணியில் இணைய முற்படும். கமல், ரஜினி இந்த  இடைத்தேர்தல்கள் குறித்து  இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனால் 20 இடைத்தேர்தல்கள் வந்தால் அவர்களால் போட்டியிடாமல் இருக்க இயலாது.  இந்த இடைத்தேர்தல்களை சந்தித்தால்தான், கட்சிகளின் பலமும் மக்கள் இடையே இருக்கின்ற செல்வாக்கைப்பற்றியும் தெரிந்து கொள்ளலாம். அந்தவகையில், இடைத்தேர்தல்கள், 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக அமையும்


Share the Article