தமிழ்

Share the Article

கடந்த 40 ஆண்டுகளாக தக்காளி விலையில் பெரிய மாற்றம் எதுவும்  இல்லை. 1978ஆம் ஆண்டில் தக்காளிக்குக் கிடைத்த விலைக்கும் 2018இல் கிடைக்கும் விலைக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால், தக்காளியின் விலை பொதுவாக அதேநிலையில் உள்ளது. அதைவிட சற்று குறைவாக இருக்கலாம். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தக்காளியை சாலைகள் கொட்ட்டுகிறார்கள் என்ற செய்திகள் வெளியாகின்றன. அதற்கு  காரணம் உற்பத்திச் செலவுக்குக் கூட விலை கிடைப்பதில்லை. இந்த செய்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக  தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கிறது. தக்காளியை தங்கள் கால்நடைகளுக்குப் பயன்படுத்தியும், வீதிகளில் கொட்டியும் விவசாயிகள் போராடி வரும் செய்திகள் 1980களிலேயே வெளிவந்தது எனது நினைவுக்கு வருகிறது.

தேசிய சந்தைகள் இல்லை. சந்தைகளில் வியாபாரிகளின் வெளிப்படையான பங்கேற்பும் இல்லை. இந்த நிலையில், இந்தியாவில்  விவசாயப் பொருட்களை விற்பதற்கான பலமான சந்தை நடைமுறைக்கு வரவில்லை என்பதை உறுதியாகக் கூற முடியும்.  குறைந்தபடச ஆதார விலையை 6 சதவீத விவசாயிகளே பெறுகிறார்கள். மீதி 94 சதவித விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு வெளி சந்தைகளை நம்பியே உள்ளனர். விவசாய விலை பொருட்களுக்கு கிடைக்கும் குறைந்த விலை என்பது சந்தையின் திறனை பிரதிபலிக்கிறது என்று அர்த்தமாகாது. இந்த விஷயத்தில் அமெரிக்காவை நோக்கினால் அது உலகின் முன்னேறிய பொருளாதாரமாக  உள்ளது. அமெரிக்க சந்தைகள் போட்டிகள் நிறைந்தவை; பெரிய போட்டியாளர்கள் எளிதாக சந்தையில் இயங்குகிறார்கள். அதனால் அங்கு வியாபாரம் தளைக்கிறது.

1974ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி அவரது தந்தை 25 கிலோ மக்காசோளத்தின் விலை 3.58 அமெரிக்க டாலர் என்று தன்னுடைய வலைப் பக்கத்தில் குறிப்பிட்ட அமெரிக்க விவசாயி மைக், 2018இல் அதே மக்காசோளாத்துக்கு 3.56 அமெரிக்க டாலர் விலைதான் என்கிறார். அதாவது 2 சென்ட்கள் விலை குறைவாகப் பெறுகிறார். இதேநிலைதான் கனடாவைச் சேர்ந்த பிலிப் ஷா என்கிற விவசாயிக்கும். “ஒரு விவசாயி 1974இல் மக்காசோளத்துக்கு என்ன விலையோ அவர் ஓய்வு பெறும் வயதிலும் அதே விலைதான்”என்கிறார் மைக்.

சந்தைகள் திறம்பட செயல்பட்டிருந்தால், விலை வீழ்ச்சிக்கான எந்த காரணத்தையும் என்னால் காண இயலவில்லை. 44 ஆண்டுகளாக  மக்கசோளத்துக்கு அதேவிலைதான் கிடைக்கும் என்றால், சந்தைகள் திறம்பட செயல்படவில்லை என்றே தெரிகிறது. இது குறித்துக் கூறும் அமெரிக்க விவசாயி, “விதை, நிலம், கருவிகள், உரம், எரிபொருள் ஆகியவற்றுக்கான விலை மிக அதிகமாக உயர்ந்திருக்கும்போது  விவசாய விலைபொருட்களின் விலை மட்டும் அப்படியே மாற்றமில்லாமல் இருக்கிறது. இதைவிட வலி மிகுந்த விஷயம் வேறென்னவாக இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்புகிறார் ஓர் அமெரிக்க விவசாயி.

உணவு வீக்கத்தைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேண்டுமென்றே 15 சதவீதம் குறைவாகவே மானியம் வழங்கப்படு வருகிறது.

அக்ரிகல்சர் எகனாமிக் அண்ட் அவுட் லூக் ஃபாரின் ட்ரேட் ஃபோரம் அமைப்பு சார்பில் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க வேளாண் துறையின் தலைமைப் பொருளாதர நிபுணர் டாக்டர் ராபர்ட் ஜான்சன், விவசாய பொருட்களுக்கு கிடைக்க வேண்டிய உண்மை விலை, பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டு, 1960லிருந்து  மிக கூர்மையாக வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கிறது’’ என்றார். அமெரிக்காவிலும் இது நிகழ்கிறது. சந்தையினால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கொடுக்க முடியாத நிலையில், அதைச் சரிகட்ட, அமெரிக்க அரசு சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு 50,000 டாலர் வீதம் மானியம் அளிக்கிறது.

இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில், கடந்த இருபது ஆண்டுகளாக வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலை மாறாமல் அப்படியே தான் நீடிக்கிறது. உணவு வீக்கத்தைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேண்டுமென்றே 15 சதவீதம் குறைவாகவே மானியம் வழங்கப்படு வருகிறது. குறைந்த மானியம் வழங்கப்படுவதாலும் வருமானம் இல்லாததாலும் இந்திய விவசாயிகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனர்.

இடுபொருட்களின் விலை ஏற்றம், விவசாயத்தில் முதலீடு இல்லாமை போன்ற பல காரணங்களால், திறனின்றி செயல்படும்  சந்தைகளின் பலியாடுகளாக விவசாயிகள் மாறி வருகின்றனர். விவசாயிகளின் துயரங்களை வெளியுலகுக்கு எடுத்துச் சொல்ல சிறந்த வழி, சந்தைகளை சுதந்திரத்தன்மையுடன் மாற்றுவதுதான். அதன்மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலையை கிடைக்கச் செய்வதுதான்.

கோடை காலப் பருவ கால பயிர்களின் அறுவடை தொடங்கிவிட்ட நிலையில், உளுந்து, பாசி பருப்பு, சோளம், கம்பு ஆகியவற்றின் விலை குறைந்தபட்ச ஆதார விலையைவிட குறைவாகவே உள்ளது. பாசிப் பருப்பின் விலையை எடுத்துக்கொள்ளுங்கள். குவிண்டாலுக்கு ரூ.6,975 வழங்கப்பட வேண்டும். ஆனால் மத்தியபிரதேசத்தில் உள்ள சந்தைகளில் குவிண்டாலுக்கு 3,900 ரூபாயிலிருந்து 4,400 ரூபாய் வை தான் கிடைக்கிறது. நல்ல விலை என்பது அதிகபட்சம், ரூ.4,900 ரூபாய். உளுந்தை எடுத்துக்கொண்டால், குவிண்டாலுக்கு 5,600 ரூபாய் வழங்கப்பட வேண்டும். ஆனால் குவிண்டாலுக்கு 3,900 ரூபாயிலிருந்து 4,200 ரூபாய் வரைதான் விலை கிடைக்கிறது. சீசன் ஆரம்பத்தில் இந்த விலைதான்.

கோடை கால அறுவடை உச்சத்தில் இருக்கும்போது என்ன விலை கிடைக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகள் நிலவரத்தைப் பார்க்கும் போது, நாடுமுழுவதும் அவற்றின் விலை 20லிருந்து 40 சதவீதம் வரை குறைவதற்குத்தான் வாய்ப்புள்ளது. விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

இடுபொருட்களின் விலை ஏற்றம், விவசாயத்தில் முதலீடு இல்லாமை போன்ற பல காரணங்களால், திறனின்றி செயல்படும்  சந்தைகளின் பலியாடுகளாக விவசாயிகள் மாறி வருகின்றனர்.

சந்தைகளில் தங்களது உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காத போது, விவசாயிகள் கடனிலிருந்து மீளமுடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த நிலையில், ‘பிரதான் மந்திரி அன்னத்தத்தா ஆய் சன்ரக்ஷன் அபியான்’ திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு வருமானத்துக்கு உத்தரவாதம் தேவை என்பது உறுதிபடுத்தப்படுகிறது. வேளாண்மையில் வருமானத்தை உறுதி செய்தால்தான் மற்ற துறைகளிலும் வளர்ச்சி இருக்கும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் நோக்கம்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மூன்று திட்டங்களை அரசு முன்னேற்ற பாதையில் கொண்டு  செல்ல முடியும். அதாவது, தற்போதைய விவசாயப் பொருள்களுக்கான ஆதார விலை ஆதரவுத் திட்டத்தைத் தொடருதல், மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற முயற்சியைப் போல விவசாயப் பொருட்களுக்கான விலை குறைவை சரிகட்ட கொடுக்கும் தொகை ஆகிய திட்டங்கள். இதுதவிர, விவசாயிகளிடமிருந்துசோதனை அடிப்படையில் தனியார் வியாபாரிகளை  கொள் முதல் செய்ய அனுமதிப்பபது. அதை எண்ணெய் வித்துக்களை வாங்குவதிலிருந்து ஆரம்பிக்கலாம்.

உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஆதாரவிலை அறிவிப்புக்கு பிறகு, அது விவசாய சங்கங்கள் கேட்ட விலையை விட குறைவு என்றபோதும், சந்தை உள்கட்டமைப்புகளை வெற்றிகரமாக உருவாக்கினால்தான் அரசு உறுதியளித்ததுபோல் கூடுதல் உற்பத்தி பொருட்களில் 25 சதவீதத்தை வாங்குவதை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும். ஒவ்வொரு 5 கி.மீ சுற்றளவிலும் அரசு அறிவித்த திட்டத்தின்படி மொத்தமாக 42,000 சந்தைகள் இருக்க வேண்டும். ஆனால் 7,600 சந்தைகள் தான் உள்ளன. அரசு சார்பில் அதிக அளவிலான சந்தைகள் உருவாக்கப்பட வேண்டும். அதைவிட முக்கியம் விவசாயப் பொருள்களுக்கு ஆதார விலை கிடைக்க போதிய நிதி ஆதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். பட்ஜெட்டில் அறிவித்தபடி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.15,053 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது என்பது மிகவும் குறைவுதான். 2008ஆம் ஆண்டில் பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ரூ.186 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தது போல, விவசாயப் பொருள்களுக்கு நியாயமான  கொள்முதல் விலை கிடைப்பதற்கு அதுபோன்ற பெரிய தொகையை ஒதுக்கீடு செய்யாமல் இருப்பதற்கான காரணம் விளங்கவில்லை.

தேவிந்தர் சர்மா

இக்கட்டுரையின் ஆங்கில வடிவத்தை வாசிக்க கிளிக் செய்யவும்.


Share the Article