மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு எதிராக குரல்கொடுப்போர் மீது தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் அவர்களை நசுக்கும் போக்கு நிலவிவருவதாக தமிழகத்துக்கு ஒரு அவப்பெயர் உண்டாகியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில், கனடாவில் வசிக்கும் ஆராய்ச்சியாளர் லூயிஸ் சோபியா , தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் வற்புறுத்தலின் பேரில், தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தலுக்கு ஆளானார். கனடாவில் ஆராய்ச்சி மாணவியாக இருக்கும் லூயிஸ் சோபியா பெற்றோருடன் தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பயணம் செய்தார். அதே விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் பயணம் செய்துள்ளார்.
அப்போது, தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக கோஷம் போட்டுள்ளார். அதையடுத்து, தூத்துக்குடியில் விமானம் தரையிறங்கியதும் தமிழிசை, சோபியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை மன்னிப்புக் கேட்கக் கோரினார். அதற்கு சோபியா தனக்கு கருத்துரிமை உரிமை உள்ளது;மறுப்புத் தெரிவிக்க தேவையில்லை என தெரிவித்தார். அதன்பிறகு, சோபியா கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் காவலில் வைக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அவருடைய மோசமான உடல்நிலை காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு சோபியாவுக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டது.

தமிழிசை சௌந்தரராஜன்
சோபியாவைக் கைது செய்ததும் பிணை வழங்கியதும் தமிழிசையின் புகாரும் இணையதளங்களில் வைரலாகப் பரவியது. அவற்றில் பெரும்பாலான கருத்துகள், தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் பாஜகவுக்கும் எதிராக இருந்தது. குறிப்பாக மக்கள் தங்கள் வெறுப்பை வெளிக்காட்டும்போது அதனை சிதைக்கும் அரசின் செயலை விமர்சிப்பதாக இருந்தது.
தமிழிசை, சோபியா வேண்டுமென்றே திட்டமிட்டு விமானத்தில் குரல் கொடுத்தார் என குற்றம்சாட்டியுள்ளார். தமிழிசை, தன்னுடைய பையை எடுக்க வந்த போது சோபியா ஃபாசிஸ்ட் பிஜேபி ஒழிக என்று கோஷமிட்டதாக தமிழிசை கூறினார். தூத்துக்குடியில் விமானம் தரையிறங்கியதும், வெளியே வந்த தமிழிசை விமானத்துறை அதிகாரிகளிடம் சோபியாவுக்கு எதிராக புகார் அளித்தார். ’’அவர் சாதாரண பயணி அல்ல. அவருக்குப் பின்னால் தீவிரவாத இயக்கங்கள் இருக்கலாம்’’ என்றார். இதுதொடர்பாக உலாவரும் வீடியோவில், தமிழிசை மிகுந்த கோபத்துடன், ‘’அவர் எப்படி அவ்வாறு சத்தம் போடலாம்? இது ஒன்றும் பொது இடமல்லவே’’ என கூறினார்.
’’பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தார்’’, “எச்சரிக்கை விடுத்தார்’’ என்று சோபியா மீது ர்தமிழிசை குற்றம்சாட்டினார். அதன்பிறகு காவல்துறையினர், ஐபிசி சட்டத்தின் கீழ், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பொது இடத்தில் வரம்பை மீறுதல், கலகத்தை தூண்டுதல் ஆகிய பிரிவின் கீழ் சோபியாவின் மீது வழக்கை பதிவு செய்து கைது செய்தனர்.
இதற்கிடையில், சோபியா தந்தை ஏ.ஏ.சாமி ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்; தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக புகார் அளித்தார். தன்னுடைய மகள் துன்புறுத்தப்பட்டதாகவும் அங்கே தமிழிசையுடன் இருந்த சிலரால் கிரிமினல் அச்சுறுத்தலுக்கு ஆளானதாக புகார் அளித்தார்.
இதுகுறித்துக் கூறிய சாமி, அவரும் அவரது மனைவியும் தங்கள் மகளை சென்னை விமான நிலையத்தில் வரவேற்று அவருடன் சேர்ந்து தூத்துக்குடிக்கு வந்துள்ளனர். அப்போது தூத்துக்குடியை வந்தடைந்ததும் அவருடைய மகளை சில ஆண்கள் சூழ்ந்துகொண்டு தவறான வார்த்தைகளால் பேசியுள்ளனர். மேலும், பாதுகாப்பு எனக் கூறி அவர்களை ஒரு அறையில் அடைத்துள்ளனர்.
சோபியா எழுத்தாளர் மற்றும் கணித ஆராய்ச்சியாளர். இவர் ஸ்டெர்லைட்க்கு எதிராகவும், சேலம் -சென்னை பசுமை வழிச் சாலையை எதிராகவும் கட்டுரைகள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கைது செய்யப்படுவதற்கு முன், விமானத்தில் இருந்த அவர் டிவிட்டரில் இப்படி பதிவிட்டுள்ளார். “I am on a flight with Tamilisai Soundararajan and really want to shout out ‘Down with Modi – BJP – RSS fascist government’. Will I be kicked off the flight?”(நான் தற்போது தமிழிசை இருக்கும் விமானத்தில் உள்ளேன். மோடி-பாஜக-ஆர்.எஸ்.எஸ் ஃபாசிச அரசு ஒழிக என்று கத்த வேண்டும் போல் உள்ளது)
தமிழிசை தூத்துக்குடி செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’சோபியா ஏதேனும் தீவிரவாத இயக்கத்தில் உறுப்பினராக இருக்கலாம். அவரைப் பார்த்தால் இயல்பாக இருக்கும் பெண்ணாகத் தெரியவில்லை. அவரைப் பார்த்து நான் பயப்படவில்லை.ஆனால் விமனத்தில் இருக்கும் மற்ற பயணிகள் அவரால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. அதனால் தான் நான் புகார் தெரிவிக்கிறேன். பொதுவெளியில் கோஷமிட/கத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் விமானத்தில் கோஷமிட யாருக்குமே உரிமை இல்லை’’ என்றார்.
இதற்கிடையில், சோபியா சம்பவம் இணையதளங்களில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டுவிட்டது. மேலும், பல எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சோபியாவுக்கு ஆதரவாகவும் தமிழக அரசு மற்றும் பாஜகவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலினின் டிவிட்டர் பதிவு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போலீசாரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் ‘’ஜனநாயக விரோத – கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!
அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?
நானும் சொல்கின்றேன்!
“பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” என்று பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய சோபியாவின் வழக்கறிஞர் அதிசயக்குமார், ‘’ சோபியா மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஒருமணி நேரம் விமான நிலையத்தில் வலிறுத்தியுள்ளார் தமிழிசை. ஆனால் சோபியா தன்னை விட்டுக்கொடுக்கவில்லை. தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்’’ என்றார்.
அதற்கு பிறகு, அவர் மீது ஐபிசி பிரிவு 290(பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்) ஐபிசி பிரிவு 505(பொது இடத்தில் தவறான வார்த்தைகளைப் பயன்படுதிடு கலகம் ஏற்பட வைத்தல்) ஆகிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட்டது. தமிழ்நாடு சிட்டி போலீஸ் சட்டம், ஐபிசி 290 மற்றும் 75(1)கீழ் அதான் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் அதிசயக்குமார் தெரிவித்தார். மேலும் இதுகுறித்துக் கூறிய அதிசயக்குமார்,’’தமிழிசை ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர். ஒரு மருத்துவரும் கூட. இந்நிலையில், சோபியா அவருக்கு எதிராக கோஷமிட்டபோதும், அவர் இந்த சூழ்நிலையை நல்லவிதமாக கையாண்டு இருக்கலாம். சோபியாவிடம் நேரடியாகப் பேசி, விவரித்துக் கூறியிருக்கலாம். இப்படி எதிர்ப்பை பதிவு செய்தல் கூடாது என கூறியிருக்கலாம்’’ என்றார்.
‘’இது துரதிஷ்டவசமானது’’ என்றார் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன். ’’இது பொது நிர்வாகம் குலைந்து வருவதையே காட்டுகிறது. இந்தக் கைது நடவடிக்கையில் மத்திய அரசும் ஈடுபட்டுள்ளது என்பது தெளிவாகிறது. தூத்துகுடியில் நிலைமை அசாதாரணமாக உள்ளது என்பதை தெரிந்துகொள்வது அவசியம். ஸ்டெர்லைட் தூத்துக்குடி சுற்றுப்புறசூழலை பாதிப்படையச் செய்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே ஸ்டெர்லைட்டின் பாதிப்பு உள்ளது’’ என்றார் அவர்.
‘’சோபியாவின் பிரச்சனையை தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. நிர்வாக செயல்பாடுகளிகளில் இந்துத்துவத்தின் வெளிப்பாடு உள்ளது என்பதையே மிகப் பிரச்சனை காட்டுகிறது’’ என்கிறார் சுற்றுசூழல் ஆர்வலரும் வழக்கறிஞருமான எம்.வெற்றிச்செல்வன்.
சோபியா கைதைக் கண்டித்து சினிமா இயக்குநர் பாரதிராஜாவும் ஆடியோ மூலம் தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அமுமுகவின் தலைவர் டிடிவி தினகரன் தமிழிசை முதிர்ச்சியில்லாமல் நடந்துகொண்டுள்ள்ளார் என விமர்சித்துள்ளார்.
சோபியாவைக் கைது செய்திருப்பதன் மூலம், தமிழகத்தில் தொடர்ந்து கைதாகி வரும் போராளிகள் வரிசையில் சோபியாவும் சேர்ந்துள்ளார். நாடு முழுவதும் இம்மாதிரி விமர்சனங்களை தொடுப்பவர்கள் தொடர்ந்து கைதாகி வருவது கவலைக்குள்ளான விஷயம் மட்டுமில்லை; ஜனநாயக அமைப்புகளுக்கு விடுக்கப்படும் சவால் என்பதே உண்மை.
Forums › விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவின் கைது சொல்வதென்ன?