Read in : English

Share the Article

உலகில் மிகவும் ரகசியமான செய்திகளில் ஒன்று, திமுக தலைவர் கருணாநிதி சென்னை  அமோகம் சாமியுடன்கொண்டிருந்த உறவு. அவர் ஃபிடில் ராஜமாணிக்கம் பிள்ளையின் பேரர். அமோகம் சாமி இன்று பல பிரபலங்களின்ஆன்மீக குரு. சென்னை அசோக் நகரில் இருக்கும் அவரது இல்லத்துக்கு சென்ற பிரபலங்களில் கருணாநிதியும் ஒருவர்.

அமோகம் சாமியும் அவரது குடும்பத்தாரும் கருணாநிதியை 70களில் சந்தித்துள்ளதாக  அமோகம் சாமி கூறினார். 1977ஆம்வருடம் கருணாநிதியை  தனியாக  சந்திக்கும்  வாய்ப்பு  அவருக்குக் கிட்டியுள்ளது. கருணாநிதி ஆட்சியில் இல்லாத காலகட்டங்களில்  அவரது  ஓட்டுநர்கள் அவருக்கு வண்டி ஓட்டுவதற்குத் தயங்கி, விலகிப் போய்உள்ளார்கள். ‘’அக்காலக்கட்டத்தில் காவல்துறையினருக்கு செய்தி  எட்டாத  வகையில்  கருணாநிதி  சிலரை சந்தித்துள்ளார். அப்போது  என்  ஸ்டாண்டர்டு  காரைப்  பயன்படுத்தி  (நான் ஓட்டுவேன்) சில சந்திப்புகளை போலீஸார் அறியாத வகையில் மேற்கொள்வார்”

1977லிருந்து 1983-84  வரை  கருணாநிதியை  ஒவ்வொரு  செவ்வாய்க்கிழமையும்  வடபழனி  முருகனை தரிசனம் செய்துவிட்டு ச்ந்திப்பேன். அப்போது அவரிடம் விபூதி பாக்கெட்டைத்  தருவேன்.’’அவர் அந்த விபூதி பாக்கெட்டை பெற்றுக்கொள்வார்.

”அந்த விபூதி பாக்கெட்டை அவர் பெற்றுக்கொண்டாலும் அதை என்ன செய்வார் என்று  எனக்குத் தெரியாது. அதை அவர் பயன்படுத்தி  நான்  பார்த்ததில்லை. அவர் என் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் பொருட்டு அதை வாங்கியவர்,  என்னை ஒருபோதும் தடுத்து நிறுத்தியதில்லை. இருந்தபோதும் அவர் ஆன்மீகத்தை கண்டுணர்ந்ததாகவே நான் உணர்கிறேன்’’  என்கிறார் சாமி.

அமோகம் சாமிகள்(இடது ஓரம்) கருணாநிதி, ராஜாத்தி மற்றும் பலருடன்.

”1976ஆம் ஆண்டின் இறுதியில், என்னுடைய இளைய சகோதரர்   டாக்டர் பத்மநாபன்   அன்பில்  தர்மலிங்கம் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்  1978, சென்னையில்  நடைபெற்ற என் சகோதரர் மகளின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார்’’.

1977- 78ல்  தொழில்  மற்றும்  வணிகத்துறையின்  இணைப் பதிவாளர்  ஒருவர்  ஊழல்  வழக்கில்  சம்பந்தப்பட்டு இருந்தார்.கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் என் உதவியை கேட்டார்.   என்  சகோதரர்  அங்கு  நீதிபதியாக  பொறுப்பு வகித்தார்.  நேரில்  என்னை சந்தித்து இந்த உதவியைக்கேட்டார். என் சகோதரர் ஒரு வழக்கில் தலையிட்டு இடையூறு செய்ய மாட்டார்; வழக்கு அதன் போக்கில் செல்லவேவிழைவார் எனக் கூறினேன்.  உங்களுக்கு இது விஷயமாக என்ன வேண்டும் என அந்த அதிகாரியிடம் கேட்டேன்.   அதற்கு பதிலளித்த  அதிகாரி  நான்  சிறைப்படக் கூடாதுஎன்றார். நான் அந்த அலுவலருக்காக பிரார்த்தனை செய்தேன். அந்த வழக்கில் தீர்ப்பு வெளியாதற்கு சில நாட்களுக்குமுன்பாக அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரித்தார். இதுகுறித்து பேசுகையில் கருணாநிதியிடம் சொன்னேன், ‘’அந்த அலுவலர் தண்டனை  பெற கூடாது என கேட்கவில்லை. அவருடைய பிரார்த்தனையும்  சிறை  சென்றுவிடக் கூடாது  என்பதுதான்.  அது நடந்தது. ஆகையால் ஒருவர் அவர்களது பிரார்த்தனையை தெளிவாகக் குறிப்பிட  வேண்டும். அவர் சிறைக்கு சென்றுவிடக் கூடாது என்ற பிரார்த்தனை நிறைவேறியது. இவ்வாறு நான் கருணாநிதியிடம் சுட்டிக் காட்டினேன்’’

அமோகம் சாமிகள் தற்போது

“அந்த நிகழ்வுக்கு பிறகு கருணாநிதிக்கு என்மேல் நம்பிக்கை அதிகரித்தது. அதன் பிறகு ஒரு சம்பவம் நடந்தது. ஒருநாள் முரசொலி செல்வம்  அவரது வக்கீலுடன்  என்  அசோக் நகர்  வீட்டுக்கு  வந்து, ஒரு கொலை வழக்கில்  உதவிவேண்டும்  என கேட்டுக்கொண்டார் . அப்போதைய முதல்வர் எம்ஜிஆரிந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு  தண்டனை  வழங்க  அனைத்து நடவடிக்கைகளையும்  மேற்கொண்டார்.  அது ஒரு  புகழ்பெற்றவழக்கு.  கருணாநிதிதான்  செல்வத்தை என்னிடம் அனுப்பினார்; என்னால்  வீரபாண்டி ஆறுமுகத்தை காப்பாற்ற  முடியுமா  என கேட்டார்.  நான் சில விஷயங்களை செய்து, ஆறுமுகத்திற்காக பிரார்த்தனை செய்தேன். தீர்ப்பு வந்தபோது  ஆறுமுகம் அந்த வழக்கிலிருந்து விடுதலையாகியிருந்தார்.  நான் இந்த வழக்கில்  ஆறுமுகத்திற்கு உதவினேன் என்பதை எம்ஜிஆர் தெரிந்துகொண்டார். அதன்பிறகு கலைஞருக்கு என் மீதானநம்பிக்கை இன்னும் அதிகமானது”.

எம்ஜிஆர் நான் கருணாநிதியின் குடும்பத்தாருக்கும் கருணாநிதிக்கும் உதவுவதை தெரிந்துகொண்டார். 1981-ல் திரு.ஆர்.டி  சீதாபதியிடம்  எம்ஜிஆர்  என்னை  சந்திக்க  விரும்பியதாகக்  கூறி அவரை அனுப்பி வைத்தார். சீதாபதியிடம்,நான் அரசியல்வாதிகளை சந்திப்பது இல்லை. எனக்கென்று எந்த தனிப்பட்ட உதவிகளையும் நான் பெறுவதில்லை. என்குடும்பத்தினருடன் கருணாநிதி கொண்ட தொடர்பினால் மட்டுமே அவரை சந்திக்கிறேன் என்று விவரித்துசொல்லியனுப்பினேன். அதை அவர் எம்ஜிஆரிடம் சொல்லியிருக்கிறார். அதோடு அந்த விஷயம்  முற்றுப்பெற்றது. ”கருணாநிதிக்கு,  நான்  எம்ஜிஆர்  வீட்டுக்கு  செல்லவில்லை  என்பது  தெரியும்.   என்  மீதான மதிப்பு அவருக்குஅதிகரித்தது. ’’ என்றார் அமோகம் சாமி விரிவாக. ·

1984-ல்  தேர்தல்  பிரச்சாரம்  தொடங்குவதற்கு  முன்பு,  அவரைச்  சந்திக்கும்  வாய்ப்பைப்  பெற்றேன். அவருடைய பயணத்திட்டம்  குறித்து  செய்தித்தாள்களில்  படித்ததும்  அவரைச்  சந்திக்க விரும்பினேன். அப்போது, சந்திராஷ்டம நாளில் பயணத்தை  தொடங்க  வேண்டாம்  எனக் கேட்டேன்.  தேதியை  மாற்றவும்  கேட்டேன்.  என்னை மாறனிடம் பேசச் சொன்னார்.  அப்போது  முரசொலி மாறன்   என்னை  மிகவும் மதிப்பதாகவும்  கலைஞர்  எந்தளவுக்கு  என்னை மதிக்கிறார் என்றும் கூறினார். இந்த விஷயங்களில் தனக்கு நம்பிக்கை   இல்லை என்றாலும் தேதியை மாற்றுவதாகக் கூறினார்.  தேதியும்  மாற்றப்பட்டது.  பயண  நிகழ்ச்சி தொடங்கியதும்   கலைஞரின்    கார்  சேலத்துக்கருகில்   விபத்துக்குள்ளானது;  அவர் எந்த காயமுமின்றி தப்பித்தார். ‘’அன்றிரவு  கலைஞர் என்னிடம்  தொலைபேசி மூலம் பேசினார்.  அப்போது  தேதி  மாற்றப்பட்டபோதும்  எப்படி  இந்த விபத்து  நிகழ்ந்தது..ஏன்?   என கேட்டார். ‘’நான் சொன்னேன்,  நீங்கள் தேதியை மாற்றியதால் தான் காயமின்றி தப்பித்தீர்கள். அதனால் தான் இப்போது என்னுடன் பேசிக்கொண்டு உள்ளீர்கள்’’ என்றேன்.  கருணாநிதி சிரித்தார். ஆனால்  அதுகுறித்து  அவர்  அதிகமாக  சிந்தித்து இருக்க  வேண்டும்.

‘’ இன்றும் கூட நான் செய்திதாள்களில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்டு 28ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுகூட்டத்தில் அவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக வாசித்தேன். அந்த தேதியன்று சந்திராஷ்டமம் இருப்பதால் அந்த தேதியை  அவர்    தவிர்க்கலாம்.  அன்று மரணயோகமும் கூட. ஸ்டாலின் பூரம்        நட்சத்திரத்தில்  பிறந்தவர்.  அவருக்கு  செவ்வாய்க்கிழமை உகந்த நாள்அல்ல. அவருக்கு நல்லது செய்யும் நாளும் அல்ல. ‘’இதனை நான் உங்கள் மூலம் அவருக்குச் சொல்கிறேன். ஆனால் அவர் என் அறிவுரையைக்  கேட்பாரா  என்பது எனக்குத் தெரியாது’’ என்றார்  அமோகம் சாமி.

ஜெயலலிதாவும் கூட அவரது ஆட்கள் மூலம் செய்தி  அனுப்பி, அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கிறது எனக் கேட்டார்

ஜெயலலிதாவும் கூட அவரது ஆட்கள் மூலம் செய்தி  அனுப்பி, அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கிறது எனக் கேட்டார். ‘’2016 தேர்தலுக்கு  முன்பு  அவரது  அதிமுக  மீண்டும்  ஆட்சியை  கைப்பற்றுமா, அவர் முதல்வராக வருவதற்கான வாய்ப்புகள் குறித்து கேட்டார்.நான்,  அவருடைய  கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்; ஆட்சியில் தொடரும் என தெரிவித்தேன்.  அவர் யுடூப்பில் என் பேட்டியைப் பார்த்தார்.அதில்  அவர்  முதல்வர் ஆவார் ஆனால்    ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருப்பாங்களான்னு தெரியாது எனக் கூறினேன். அதைப் பார்த்து அவர் மகிழ்ச்சியடைந்தார். அதே நேரத்தில் நான் எதைக்  குறிப்பிடுகிறேன் என்பதை  புரிந்துகொண்டார். சிறிது காலம் தான்  இருப்பார்   என்பதை அவரே உணர்ந்திருந்தார்.  ”

‘’என்னுடைய மனதுக்குத் தெரிந்தவரை, கருணாநிதி நாத்திகவாதி கிடையாது. அதேவேளையில் மத  சடங்குகளை கடைபிடிக்கும் நபர்அல்ல.   தீவிரமானப் மதப்பற்று  கொண்டவரும்  அல்ல.  இதற்கு இடைப்பட்ட நிலையில் இருந்தவர்.  ஆன்மீகத்தை அவர் உணர்ந்து  கொண்டதாகவே உணர்கிறேன்.  ஒவ்வொரு நாளும்  அவர் வீட்டைவிட்டு  வெளியேறும் முன்பு, அவரது பெற்றோர்களின் புகைப்படங்கள் முன்பு நின்று செல்வார்.  என்னிடம் அவர்,  போலி சாமியார்கள் தவிர்க்கப்பட வேண்டும்  என கூறியுள்ளார்.  அவர்  போலி  சாமியார்களுக்கும்  நல்ல சாமியார்களுக்கும்  இடையேயுள்ள  வேறுபாட்டை  அறிந்திருந்தார். நல்ல பண்பான சாமியார்கள் ஒருபோதும் சுய தேவைக்காக உதவிகள் கோரமாட்டார்கள் என அவர் என்னிடம் கூறியிருந்தார் .  அவர் முதல்வராக இருந்த  போது நான் அவரை சந்திக்கவில்லை. தனிப்பட்ட முறையில் நான் அவரிடம் எந்த உதவியையும் கேட்டதில்லை. அவர் என்னை பண்பான மனிதராக நினைத்தார். என் உள்ளே ஏதோ ஒரு சக்தி, கடவுள் அருளினால், இருக்கு என்று மட்டும் உணர்கிறேன்.”’

“அமோகம்” — பேட்டி  முடிந்து  நான்  அவருடைய  அசோக் நகர்  வீட்டை விட்டு  வெளியேறும்  முன்பு அவர்  கூறிய வார்த்தை.


Share the Article

Read in : English