English தமிழ்

Share the Article

தமிழ்நாட்டில் பல்வேறு வகையான தாவரங்களும் கால்நடைகளும் உள்ளன. தாவர வகைகளிலோ அல்லது கால்நடைகளிலோ பாரம்பரிய ஜெனிடிக் மூலத்தை தமிழ்நாட்டில் பாதுகாத்து வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் கந்தசாமிபாளையம், மூலனூர் அருகேயுள்ள நஞ்சை தளையூரைச் சேர்ந்த சௌந்தரம் ராமசாமி நான்கு காளை மாடுகளை தான் பெற்ற புள்ளைகளைப் போல வளார்த்து வருகிறார். அவரிடம் இருக்கும் காளைகள் ந்நான்கும் தமிழகத்தின் ப்பாரம்பரிய அடையாளமான காங்கேயம் வகையைச் சேர்ந்தது. சௌந்தரம் வாயில் தன் இரண்டு விரல்களையும் வைத்து விசிலடித்தால் நான்கு காளைகளும் ஓடிக் குதித்து வருகின்றன.

காளைகள் ஒரு பெண்ணை சுற்ரி இருப்பதை பார்க்கும் யாருக்கும் அது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். ஆனால் அந்தக் காளைகள் செல்ல நாய்க்குட்டிகளைப் போல் அவரை சுற்றி வருகின்றன. நாங்கள் மூன்றுதலைமுறைகளாக காங்கேயம் காளைகளை வளார்த்து வருகிறோம் என்கிறார் சௌந்தரம்.

மேற்கு தமிழகத்தில் புகழ்வாய்ந்த கால்நடை இனமாக காங்கேயம் காளை உள்ளது. அதற்கு இங்குள்ள தனித்தன்மையான ‘கொரங்காடு’ மேய்ச்சல் நிலம் முக்கிய காரணம். முன்பு, நீர் இறைக்கவும் உழவு செய்யவும் பொருட்களை ஏற்றி செல்லவும் அறுவடைக்கும் உறுதிமிக்க காளைகள் தேவைப்பட்டன. காங்கேயம் காளைகள் அழிவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்ரில் மிக முக்கியமானது நீர் பாசனம் பரவலாக்கப்பட்டது, டீசல் மற்ரும் மின் மோட்டார், நில உச்சவரம்பு சட்டம், கொரங்காடு மேய்ச்சல் நிலத்துக்கு கொடுக்கப்பட்ட விதிவிலக்கை நீக்கியது கொரங்காடு மேய்ய்ச்சல் நிலத்தை புறம்போக்கு என வருவாய் துறை கூறியது, அதற்கு விதிவிலக்கு அளித்தது உள்ளிட்ட காரணங்களால் காங்கேயம் காளைகள் அழியத் தொடங்கின.

சௌந்தரம் ராமசாமி காங்கேயம் வகை கால்நடைகள் இன உற்பத்தியில் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார்.

ஒரு நாளைக்கு சராசரியாக 6 பசுக்களுக்கு இந்த நான்கு காளாஇகள் மூலம் கருவூட்டம் செய்யப்படுகிறது. இதற்கு 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

செயற்கை கருவூட்டல் மூலம் கருவூட்டம் செய்ய முடியாத அந்நிய வகை பசுக்களான ஹோல்ஸ்டீன் ஃபிரெஸியன், ஜெர்சி வகைகளுக்கும் இக்காளைகள் மூலம் கருவூட்டம் செய்யப்படுகிறது. இதனை முதன்மை அக்கறையுடன் செய்யும் சௌந்தரம் அனைத்தையும் பதிவு செய்துகொள்கிறார். அதுமட்டுமில்லாது ஒருமுறை பசு கர்ப்பம் அடைவில்லை எனில் அவர் அதற்கு அடுத்த முறை கட்டணம் வசூலிப்பதில்லை. ‘’இந்தக் காளைகள் என் மனைவி சொல்வதைத்தான் கேட்கும். எதற்காவது காளைகளை மனைவி திட்டினால் அவை கவலையாகும்’’ என்கிறார் சௌந்தரத்தின் கணவர் ராமசாமி.

ராமசாமியும் இக்காளைகளுடன் உணர்வுப்பூர்வமான பந்தத்தை ஏற்படுத்தியுள்ளார்.’’வேறு யாராக இருந்தாலும், காளைகளுக்கு வயதாகிவிட்டால் அவற்றை கறிக்கு விற்று விடுவார்கள். ஆனால் என் மனைவியோ அவை இயற்கையாக இற க்கும் வரை நாமே அவற்றை பராமரிக்க வேண்டும். இறந்துவிட்டால் நாமே அவற்றை புதைக்க வேண்டும் ’’ என கூறியுள்ளார் என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

சௌந்தரத்தின் காளைகள் நான்குமே சுத்தமான நாட்டுவகை காளைகள். அவற்றை ஊரெங்கும் தேடி சிறந்த கன்றுக்குட்டிகளை தேர்ந்தெடுத்து வளர்த்து, இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்றவாறு ஊட்டமாக வளர்த்துள்ளனர். இவர்களை திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுக்காவில் உள்ள அரசுசாரா நிறுவனமான சேனாதிபதி காங்கேயம் காளைகள் ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்து அடையாளப்படுத்தியது. சௌந்தரம் காளை வளர்ப்புக்காக பல்வேறு விருதுகளாஇ பெற்றுள்ளார். சேனாதிபதி காங்கேயம் காளைகள் ஆராய்ச்சி நிறுவனம் நிறுவனம் சௌந்தரத்துக்கு காளைகள் பாதுகாவலர் 2010 என்ற விருதுக்கு பரிசீலனை செய்து தேர்ந்தெடுத்தது. அவ்விருதினை தேசிய பல்லுயிர் ஆணையம், சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வழங்கி கௌரவித்தது. அதுமட்டுமில்லாமல் ‘நாம் திருப்பூர் கூடல்’ நிகழ்வில், சேனாதிபதி காங்கேயம் காளைகள் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ் மையம் இணைந்து நடத்திய கால்நடை திருவிழாாவில் சௌந்தரத்துக்கு சிறப்பு விருது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது.வீடியோ காண கிளிக் செய்யவும்.

விவரங்களுக்கு: www.kangayambull.com


Share the Article