English தமிழ்

Share the Article

ஆண்களில் பலருக்கு கருணாநிதியை போல் வாழ வேண்டும் என்ற ஆசை உண்டு. பல ஆண்களைப் போலவே கருணாநிதிக்கும் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை என இருந்தது. பெரும்பாலான் ஆண்களுக்கு இந்த மூன்று வாழ்க்கையும் ஓரிடத்தில் ஒன்றாக கலந்து நிற்கவேண்டும் என்கிற பேராசை உண்டு. இந்த ஆசை நிறைவேறிவிட்டால் அவர்க்ளின் வாழ்க்கை முற்றிலுமாக வாழ்ந்து அனுபவிக்கப்பட்ட வாழ்க்கையாகஅமையும். அப்படியான ஒரு வாழ்க்கை கருணாநிதிக்கு அமைந்தது. கருணாநிதிக்கு தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், குடும்ப வாழ்க்கை என அனைத்தும் ஒன்றாக கலந்தும் பிணைந்தும் அமைந்தது.

மற்ற ஆண்களைப் போல் அல்லாமல் கருணாநிதிக்கு வேறொரு வாழ்வு அமைந்தது. மற்றொரு பரிணாமத்திலும் தன் வாழ்வை தொடர்ந்தார் – அது அவரின் சமூக வாழ்க்கை. கருணாநிதியின் கட்சியிலும் மாநிலத்திலும் அவர் உயர்ந்ததலைவர். சமுக வாழ்க்கையுடன் சேர்த்தே அவ்வாழ்வை அவர் மேற்கொண்டார்.

கருணாநிதி தன் சுய-தனிப்பட்ட வாழ்வையும் சமூக பரிணாமங்களையும் சேர்த்து குழப்பிக் கொள்வதாக அவர் மீது  பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் கருணாநிதி தமிழ், இந்திய கலாச்சாரங்களில் கலவையானவர்; இங்கு பெண்கள் தங்கள் குடும்ப வாழ்வை இறக்கிவைத்தால் தான் தொழில் மற்றும் சமூக வாழ்வில் முழுமையாக பணியாற்ற முடியும் என்ற நிலை. ஆனால் ஆண்களுக்கு அப்படியான நிலை தேவையில்லை.

கருணாநிதி எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை தெளிவாக வரையறுத்திருந்தார். முதலில் தனக்கு முன்னுரிமை கொடுத்தார்; அடுத்து தன் குடும்பம்; மூன்றாவதக அவருடைய அரசியல் –சமூக வாழ்க்கையான திராவிட அரசியலும் திமுகவும். அவருடைய கட்சி என்பது அவருடைய குடும்பத்தின் நீட்சிதான். கட்சியின் தொண்டர்கள் அனைவரும் அவரது இரத்த சொந்தங்கள்-உடன்பிறப்புகள். கருணாநிதியின் மகத்துவம் என்பது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, அரசியல்-சமூக வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றி பெற்றதுதான்.

அவருடைய கட்சி என்பது அவருடைய குடும்பத்தின் நீட்சிதான். கட்சியின் தொண்டர்கள் அனைவரும் அவரது இரத்த சொந்தங்கள்-உடன்பிறப்புகள். 

பல தொகுப்புகள் கொண்ட கருணாநிதியின் வாழ்க்கை சுயசரிதமான ’நெஞ்சுக்கு நீதி’யில்  தன்  கிராமத்தில் உரிமைகளுக்காக போராடும் சிறுவனாக தன் வாழ்வை தொடங்கி எப்படி தலைவரானார் என்பதை விவரித்திருப்பார். அவருடைய எதிர்குழு நாடகமொன்றை போட, அதை எதிர்க்கும் சூழ்நிலை வாய்த்தது கருணாநிதிக்கு. அந்த போட்டிக்குழு அரங்கேற்றிய நாடகத்தில் கதாநாயகனாக நடிக்க ஆள் தேவைப்பட்டது. ஆனால் அவர்களால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது கருணாநிதி அவர்களிடம் சென்று உங்கள் குழுவை கலைத்து எங்களுடன் இணைந்துகொண்டால் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதாக கூறினார். அதற்கு அவர்களும் ஒத்துக்கொண்டார்கள். தன்னுடைய நீண்ட வாழ்க்கையில் பல எதிரிகளை அழித்தார். பின்பு கருணாநிதி என உயரத்தில் அமர்ந்தார்.

1980கள் வரை அவருடைய அரசியல்-தொழில் வாழ்வு இரண்டாவது முன்னிலையான விஷயமாக இருந்தது. ஆனால் 1990களில் அது அப்படி இருக்கவிலை. அரசியல் அதிகாரத்தில் இருப்பதற்காக தன் நம்பிக்கைக்கு உரியவர்களை அனைத்து இடங்களிலும் முன்னிறுத்தினார். குடும்பத்தினரை விட அதிக நம்பிக்கைக்கு உரியவர்களாக  யார் இருக்க முடியம்?

அதிகாரத்தின் பிடிமனமாக அவருடைய சித்தாந்தங்களை முடிந்தளவு பரவச் செய்தார். அதற்கு தன் இரு முன்னிலை உரிமைகளான தன்னுடைய சுய இடம், குடும்பம் இரண்டையும் அனுமதித்தார். வரலாற்றை திரும்பி பார்க்கும் போது அதிகம் விமர்சனத்துக்குள்ளான பாஜகவுடனான கூட்டு நினைவுக்கு வரும். தன் மருமகன் முரசொலி மாறன் மூலம்  அமைத்த கூட்டு பின்பு திமுகவுக்கு எதிரானதாக மாறியது.

கருணாநிதி ஒவ்வொரு ஆணின் பொறாமைக்குரியவாராகவே இருப்பார். இருந்த போதும் அவருடைய இந்த வெற்றி திராவிட இயக்கத்துக்கான தோல்வி. தன்னுடைய வழிகாட்டி அண்ணாதுரை சாதித்த அளவுக்கு கருணாநிதி சில விஷயங்களைத் தொடவில்லை. பெரும்பான்மை தமிழர்களின் தலைவராக, எல்லோராலும் எற்றுக் கொள்ளப்பட்ட தமிழ் நாட்டின் சின்னம்மாக அவர் திகழவில்லை.

இறுதிவரை கருணாநிதி ஒரு கட்சியின் தலைவனாகவும் அரசியல்வாதியாகவும் குடும்பத்தின் தலைவனாகவுமே அறியப்பட்டார். எந்த சித்தாந்தமும் இயக்கமும் அவரை முன்னிறுத்தியதோ அது முழுமையாக நிறைவேற்றப்படாமலே தான் இருக்கிறது. சாதிய வேறுபாடுகளும் தலித்துகள்  மீதான  ஒடுக்குமுறைகளும் முற்போக்கு அடையாளம் இல்லாத மற்ற மானிலங்கள் போலவே தமிழகத்திலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.


Share the Article