Read in : English

Share the Article

கடந்த இரண்டு வாரங்களாக உங்களுடன் உரையாடுவது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுப்பதாக உள்ளது. இந்த வாரம் என்னை கர்நாடகாவில் இருந்துவந்திருந்த விவசாயிகள் சந்தித்தனர். அவர்கள் எந்த பயிரை விளைவித்தால் அதிக வருமானத்தை பெற முடியும் என்பதை தெரிந்துகொள்ளவிரும்பினர். அவர்களுடன் பகிர்ந்துகொண்ட அதே விஷயங்களை நீங்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தியாவில் விவசாயம் செய்வது என்பது  கஷ்டம்  நிறைந்த தொழில் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மண், தட்பவெப்பம், கூலிக்கு ஆள் ஆகியவிஷயங்கள் நடைமுறையில் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடு கொண்டது. ஒரே வகை பயிருக்கு மண்ணுக்கு ஏற்றார்போல் விளைச்சலும் மாறுபடும். இந்த பத்தியில், மத்தியபிரதேசத்தில் பெட்லாவாட் மாவட்டத்தில் சாரங்கி என்னும் கிராமத்தைச் சேர்ந்த சிறு விவசாயி திரு.பலராம் பட்டிதார் (செல்பேசி:09977096087) செய்த விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன்.

பல்ராம் பட்டிதார், அவரது நிலத்தில் எப்போதும் விளைவிக்கும் அதே மக்காசோளத்தை பயிரிட்டுக்கொண்டிருந்தார். நமது தமிழ்நாட்டில் எப்படிநெல்லில் பெரிய லாபம் கிடைப்பதில்லையோ அதேபோல் மத்தியபிரதேசத்தில் மக்காசோளத்தில் எதுவும் கிடைப்பதில்லை. அவர் கொஞ்சம்யோசனை செய்த பிறகு, மக்காசோளத்திலிருந்து தக்காளி மற்றும் மிளாகாய் பயிருக்கு மாறினார். விளைவு, இந்த பயிரிலிருந்து நிலையான வருமானம்வரத் தொடங்கியது. அவர் இந்த விளைபொருட்களை டெல்லி, அகமதாபாத், மும்பை, இந்தூர் ஆகிய ஊர்களுக்கு வெற்றிகரமாக சந்தைப்படுத்தினார். அதன்மூலம் வருடத்துக்கு 10-15 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டினார். நினைவில் கொள்ளுங்கள் – வருடத்துக்கு மொத்த வருமனாம் 10-15 லட்சம்!

இந்த வருமானத்தைக் கொண்டு திரு.பட்டிதார் கொஞ்சம் நிலத்தை வாங்கினார். (அவரது நிலம் ஒரு ஏக்கரிலிருந்து 4.5 ஏக்கர் என மாறியது). அந்தநிலத்தில் தன் வெற்றி சூத்திரத்தை நடைமுறைப்படுத்தினார்.

இதை நினைத்துப் பார்க்க முடிகிறதா? இன்று நிலத்தை விற்கும் விவசாயிகள், நிலத்திருந்து வருமானம் வராத காரணத்தால் விற்பதாகக் கூறும்நிலையில் ஏன்  அவர்கள் அடுத்தடுத்து நிலங்களை வாங்குவார்கள்? இதில் அடுத்த விஷயம், அவர் எப்படி தானே இதனை சந்தைப்படுத்தினார்? ஒருஇடத்துக்கு வர வேண்டுமானால், நாம் விதைத்து அறுவடை செய்வதோடு நின்றுவிடாமல் சந்தைப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆரம்பகட்டத்தில் இது நமக்கு சிரமமானதாக தோன்றினாலும் அது பயன் நிறைந்த வழிமுறை என்பது புரியும். முதலில் நமது அண்டை வீட்டார், தெரிந்தவர்கள் என ஆரம்பித்து அதனை அப்படியே மெதுவாக அதிகரிக்க வேண்டும். இந்த வழிமுறை கொஞ்சம் காலம் எடுத்துக்கொண்டாலும்நிச்சயம் பயனளிக்கும்.

இதோடு மட்டுமில்லாமல் அந்த விவசாயி நவீன தொழில்நுட்பங்களான விதை நேர்த்தி, ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு, உர மேலாண்மை, நீர்மேலாண்மை ஆகியவற்றையும்  பின்பற்றினார். இதோடு சேர்த்து அவர் அனைத்து பயிர்களுக்கும் சொட்டுநீர்ப்பாசனம் முறையை பயன்படுத்துகிறார்.  தற்போது குடை மிளகாய், பப்பாளி, தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பயிரிட்டு வருகிறார். இது அனைத்தும் அவரது நம்பிக்கையையும் நேர்மறையானஅணுகுமுறையையும்  காட்டுகிறது.

அன்பார்ந்த விவசாயிகளே! எனது யோசனையாக உங்களுக்குக் கூறுவதெல்லாம், ஏதோ ஒரு பயிர் செய்தோம் என்றில்லாமல், ஒரு பயிரைவிளைவிப்பதற்கு  முன்பு  ஒரு வெற்றிகரமான விவசாயியை சந்தித்து உரையாடி முடிவு செய்யுங்கள். ஒரு பயிரை குறித்து நீண்ட கால அனுபவமும்பொறுமையும் சந்தைப்படுத்தும் நுட்பமும் இது குறித்து பல்வேறு வகைப்பட்ட  விவசாயிகளுடன் உரையாடலும் ஒரு நல்ல அறுவடையை மேற்கொள்ளதேவைப்படுகிறது.

அடுத்து ஒரு வெற்றி, அனுபவக் கதையை அடுத்த வாரம்  பகிர்ந்துகொள்ளும் வரை உங்களிடமிருந்து வணக்கத்துடன் விடைபெறுகிறேன்.


Share the Article

Read in : English