Read in : English

Share the Article

இந்தியாவின் பெரும்பாலான கிராமங்களில் 20-30 சதவீத பெண்கள் விதவைகளாகவும் குடும்பம் மற்றும் சமூகத்தால் தனித்து விடப்பட்டவர்களாகவும் வாழ்கிறார்கள். இவர்கள் தங்கள்குடும்பத்தின் சுமைகளையும் குழந்தைகளையும் மூத்தவர்களையும்  தோள்களில் தாங்குகிறார்கள். இவர்களுக்கு சொந்தமாக நிலம் இருப்பதில்லை அல்லது மானாவாரி துண்டு நிலம் இருக்கும். தங்கள் நிலத்தில் முதலீடு செய்வதற்கான பணம் இல்லாதிருப்பதாலும் தங்கள் நிலத்தை தாங்களே பார்த்துக்கொள்ளும் திறமை இல்லாத காரணத்தாலும் பெரும்பாலும் இவர்கள் கூலித்தொழிலாளார்களாக, கால்நடைகளை பராமரிப்பவர்களாகவே  இருப்பார்கள்.

‘தமிழ்நாடு விமன்ஸ் கலக்டிவ்’ -35 பெண் தலைமைகளை ஒருங்கிணைத் த் உருவாக்கப்பட்ட அரசு சாரா பெண்கள் அமைப்பு ,தமிழகத்தில் உள்ள விளிம்புநிலை பெண்கள் மேம்பாட்டுக்காகசெயல்பட்டு வருகிறார்கள். இந்த அமைப்பு 1994ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தொண்டுநிறுவனம். இது தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இயங்கி வருகிறது.

இந்த அமைப்பு 13 கிராமங்களில்  ஆய்வு மேற்கொண்டது. அதில் தனித்து வாழும் பெண்கள், விதவைகள், நிலமில்லா விவசாயக் கூலிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வைஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த பெண் விவசாயிகள் சங்கம் மூலம் மேற்கொண்டது. அந்த ஆய்வில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்கள். அதன்பின்புசங்கத்தில், பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலத்தில் நிலமில்லாத ஏழை பெண்களாஇக் கொண்டு எவ்வாறு விவசாயம் செய்யலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போதுதான் இந்தகூட்டுப்பண்ணை என்கிற திட்டம் உருவானது. இதன் மூலம் உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பு என்பது மட்டுமில்லாமல், இயற்கை வழி விவசாயம் மூலம் பாதுகாப்பான உணவு என்றதிட்டமும் உருவாக்கப்பட்டது.

அதன்பிறாகு பலமுறாஇ கலந்துரையாடியதன் மூலம், கூட்டுப்பண்ணையத்தை மேம்படுத்தும் முயற்சிகளைக் கண்டறிந்தார்கள். அதன் மூலம் விதவைகள் மற்றும்நிலமில்லா கூலித்தொழிலாளார்கள் அடங்கிய   10 உறுப்பினர்கள் கொண்ட விவசாயக் குழு உருவாக்கப்பட்டது. குழு உருவாக்கப்பட்ட பின்பு அவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுகொண்டநிலம் ஒதுக்கப்பட்டது. அதில் கிடைக்கும் மகசூலில் மூன்றில் ஒரு பங்கினை நில உரிமையாளாருக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. குழு உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில்தங்கள் தினசரி பயன்பாட்டுக்கு உதவும் தானியங்கள், காய்கறிகள், பருப்புவகைகளை பயிரிட ஒத்துக்கொண்டார்கள். மேலும் இந்தக் குழு வெளிப்படைத்தன்மையுடன் இயங்கும் வகையில்வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு , வரவு செலவுக் கணக்கு பதிவேடுகள் பராமரிக்கப்பட்டன. தற்போது, விருதுநகர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருவள்ளூரில் உள்ள 13 கிராமங்களில் 15 விவசாய குழுக்கள் இயங்கி வருகின்றன.

இந்தக் குழுக்களுக்கு மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி  நம்மாழ்வார் தலைமையின் கீழ் பங்கேற்பின் மூலம் திட்டமிடுதல், சரியான முடிவு எடுத்தல், பயிர்களை தேர்ந்தெடுத்தல், பயிர்பண்ணை முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியின் மூலம், பலதரப்பட்ட இயற்கை இடுபொருள் தயாரிப்பு குறித்து அக்குழுவினர் கற்றுக்கொண்டார்கள். தொடர்ந்துஅளிக்கபட்ட ஆதரவு மற்றும் வழிகாட்டலால்  அப்பெண்கள் விவசாயம் செய்வதற்கு தேவையான அனைத்து திறாமைகளாஇயும் தலைமைப் பண்புகளையும் கற்றுக்கொண்டார்கள்.  தமிழ்நாடுபெண்கள் கூட்டமைப்பு, ஒவ்வொரு குழுவுக்கும் ரூ.10,000 வழங்குகிறது. அந்த பணத்தைக் கொண்டு விவசாயம் செய்வதற்குத் தேவையான விதைகள், இயற்கை உரம் உள்ளிட்ட இடுபொருட்களைஅவர்கள் வாங்கிக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் என்ன வேலை என்பதை வாரந்திர கூட்டத்தில் முடிவு செய்துகொள்கிறார்கள். அனைத்து வேலைகளும் எல்லா உறுப்பினர்களுக்கும்சமமாகவும் சுழற்சி முறையிலும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. கூட்டுப் பண்ணையத்தின் முதன்மை நோக்கம் குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதுதான். தற்போது அப்பெண்கள் உற்பத்தி செய்தபொருட்களை சந்தைப்படுத்தியும் வருகிறார்கள்.  கூட்டுப் பண்ணையம் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உணவு மாதத்தில் 15 நாட்களுக்கு யமப்பெண்களுக்கு கிடைக்கிறது. நிலத்தில் கிடைக்கும்களையை கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுக்கிறார்கள்.

இவர்களுக்கு அண்டை நிலத்தாரும் உதவி செய்கிறார்கள். அப்பகுதியில் உள்ள மற்ற விவசாயிகள் இயற்கை உரம் தயாரிக்கத் தேவையான மாட்டுசாணம், கோமியம் போன்றவற்றைக் கொடுத்துஉதவி, பெண்களின் இம்முயற்சிக்கு ஆதரவளிக்கிறார்கள்.  இந்த உறவு, நிலமுள்ள விவசாயிகளிடம் இருந்து பகிர்ந்தளித்தல் உள்லீட்ட பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவுகிறது.

பருவமழை பொய்த்து போவது, தொடர்ந்து மின்சாரம் தடைபடுவது போன்ற சவால்களும் அப்பெண்களுக்கு இருக்கிறது. அவர்கள் பய்திர் செய்யும் நிலத்தில்போதிய மண் வளாம் இல்லை. அதனை உயிர்பிக்க அவர்களுக்கு நிறைய இயற்கை உரம் தேவைப்படுகிறது.   சைந்த சவால்களை எலலாம் எதிர்கொள்வதால் அவர்கள் மனம் தளர்ந்துவிடவில்ல்லை; மாற்றுப் பண்ணையம்குறித்து விவாதித்து சவால்களில் இருந்து மீளவும் கற்று வருகிறார்கள். தொடர்ந்து இயற்கை உரம் பயன்படுத்தினால் நிலத்தின் வளம் அதிகரித்து பயன் கிடைக்கும்;வருமானம் அதிகரிக்கும்  என்பதை உறுதியாக நம்புகிறார்கள்.   விதைகளின் விலை அதிகமாக இருப்பதால், குழு உறுப்பினர்களில் சிலரே விதை உற்பத்தியில் ஈடுபட்டு, விதை வங்கியை உருவாக்கி வருகிறார்கள்.

‘’எங்களுக்கு கொஞ்சம் நிலமும் அந்த நிலத்தில் செஇயற்கை வழி வேளாண்மை மூலம்  உற்பத்தி செய்ய முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஒருவிவசாயியாக நாங்களே உற்பத்தி செய்து எங்கள் குடும்பத்தினரின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்;அது எங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தருகிறது.அதுகூடுதல் மகிழ்ச்சி’’ என்கிறார் ஒரு பெண் விவசாயி .

தொடர்புக்கு: பொன்னுத்தாய், தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு,

(79, செண்பக விநாயகர் கோயில் தெரு, கீழ கடைவீதி, 7ஆவது வார்டு, வாசுதேவநல்லூர், சிவகிரி தாலுக்கா, விருதுநகர் மாவட்டம். அலைபேசி: 94448 32021)


Share the Article

Read in : English