English தமிழ்

அருப்புக்கோட்டையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும், ஒப்பந்ததாரர் செய்யதுரையால் நடத்தப்படும் எஸ்.பி.கே குழும நிறுவனங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வருவாய்த்துறை தொடர் சோதனைகளால், அஇ அதிமுக முகாம் அதிர்ச்சியில் இருக்கிறது. மாநிலத்தில் நடக்கும் ஆட்சி நிர்வாகத்தைக் குறித்து விமர்சிக்கும் பாஜக தலைவர்களை எதிர்த்த அமைச்சர் ஜெயக்குமாரின் சவால்தான், இத்தகைய வருமானவரித்துறை சோதனையாக பார்க்கப்படுகிறது.
பாஜக தேசிய செயலாளர் அமித்ஷாவின் தமிழக வருகையின்போது, தமிழகத்தில் நடப்பது ஊழலாட்சி என்றும், ஊழலில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்றும் பேசிய அவரது விமர்சனத்துக்குப் பிறகு, இரு ஆளுங்கட்சிக்கும் இடையிலான இணக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியோ, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமோ இதுகுறித்து பேசாதபோதும், முதலமைச்சரின் அங்கீகரிக்கப்படாத செய்தித் தொடர்பாளராக செயல்பட்டுவரும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை வைத்து பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.
அஇஅதிமுக பெருந்தொண்டர் படையைக் கொண்ட கட்சி என்றும், ஆற்றல் வாய்ந்த பதிலளிப்பதற்கான சூழலை பாஜக வலிந்து உருவாக்ககூடாது என்று குறிப்பிட்டிருந்தார் ஜெயக்குமார் .
ஒரு நாள் முழுதாக முடிந்திராத நிலையில், அருப்புக்கோட்டையில் உள்ள ஒப்பந்ததாரர் செய்யத்துரையின் அலுவலகங்களுக்கும், காம்ப்ளக்ஸ்களிலும், சென்னை போயஸ் கார்டனிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வருமான வரித்துறை சோதனை நடந்திருக்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் மகன்களுக்கு, செய்யத்துரை மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. பல பெரிய திட்டங்களுக்கு, நெடுஞ்சாலைத் துறை நாடும் முக்கிய ஒப்பந்ததாரர் செய்யத்துரை.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டைக்கு அருகிலிருக்கும் பாளையம்பட்டியைச் சார்ந்தவர் 60 வயது செய்யத்துரை. மதுரை மாவட்டத்தில், மாட்டுத்தாவணியிலிருந்து திருமங்கலத்திற்கு மாற்றப்படும் 4 வழிச் சாலைப் பணிகளில் ஈடுபட்டிருப்பது எஸ்.பி.கே நிறுவனம்தான்.
சில நாட்களுக்கு முன்பு, குழந்தைகளின் மதிய உணவுத் திட்டமான, தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு முட்டைகள் விநியோகிக்கும் க்றிஸ்டி குழும நிறுவனங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனை அஇஅதிமுக அரசுக்கு இடர்ப்பாட்டைக் கொடுத்தது.  பாஜக தலைவர்களிடமிருந்து கேலியான விமர்சனங்கள் எழுந்தன. சமீபத்தில், தமிழக மக்களுக்கு மொட்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய புதிய வருமானவரிச் சோதனைகள், மத்திய அரசின் அரவணைப்பில் மாநில அரசு இருப்பதாக நினைக்கப்படும் பார்வையை குழப்பத்தில் வைத்திருக்கிறது. அரசியல் நோக்கர்கள் இதுகுறித்து தெரிவிக்கையில், அஇஅதிமுக அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் யாரும் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்ட பின்னரும் கூட , சுமார் 90 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கையகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்கள்.
எப்படி இருந்தாலும், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் அருகிலுள்ள அறையில், தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பின்பு, வருமான வரிச் சோதனை தொடர்பான அச்சம் அதிமுக முகாமில் இருந்து வருகிறது. ஆளும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான உறவில் இன்னும் விரிசல் ஏற்படுமா என்னும் குழப்பத்தில் நிலைகுலைந்திருக்கிறது அஇஅதிமுக

Pin It on Pinterest

Share This