Read in : தமிழ்

இந்திய சட்ட கமிஷன் ஒரு முன்வரைவை வெளியிட்டுள்ளது. அதில் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் 2019-ல் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதைபரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை, அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 மற்றும் சட்டமன்றம் மற்றும்நாடாளுமன்ற ஒழுங்கமைப்பு சட்டத்தில்  ஏற்றுக்கொள்ளபட்டால் மட்டுமே அமல்படுத்த முடியும்.

இந்த ஒரே நேரத்தில் தேர்தல் என்பது, பல்வேறுவகையான சட்டப் பிரச்சனைகளையும் அரசியலமைப்பில் உள்ள பல தடைகளையும் தாண்டி செயல்படுத்த வேண்டும். அதைவிட அனைத்து அரசியல்கட்சிகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகே இதனை செயல்படுத்த முடியும் என்பது மிக முக்கியமானது.

உதாரணமாக, சட்டசபையை நீட்டித்தல் என்பது எளிதில் சாத்தியமில்லை. அது  அவசரநிலையை பிரகடனப்படுத்தினால் மட்டுமே சாத்தியம். சட்டம்நீதி, நாடாளுமன்றம், பொதுமக்கள் குறைதீர்ப்புக்கான நிலைக்குழு இந்த தடையை குறித்து குறிப்பிட்டுள்ளது. தேர்தலை முன்கூட்டியே நடத்துவதும்அம்முடிவை சட்டமன்ற காலம் முடிந்த பிறகு அறிவிப்பதுமே நிலைக்குழு பரிந்துரைக்கும் யோசனை.

நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் 2015 டிசம்பர் 15ஆம் தேதி தன் அறிக்கையில்  குறிப்பிட்டது என்னவெனில் ‘பல்வேறு அரசியல் கட்சிகளிடம் நடத்திய ஆலோசனையில் ஐந்து வருடத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமில்லை; எதிர்காலத்தில் அதற்கான சாத்தியங்கள் கைகூடலாம்’ எனகுறிப்பிட்டுள்ளார். அதற்கு சில மாநில சட்டசபைகளின் காலம் நீட்டிக்கபப்டவோ குறைக்கப்படவோ வேண்டும் என்கிறார். ஆனால் சட்டன்ற ஆட்சிகாலத்தை நீட்டிப்பது அவசரநிலை பிரகடன காலத்தை தவிர வேறெப்போதும் செய்ய இயலாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, உட்பிரிவு 14 அற்றும்15இன் கீழ் ஆறு மாதங்களுக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்த முடியும்.  சட்ட கமிஷன், சில மாநிலங்களில் சட்டமன்ற காலத்தை நீட்டிக்காமல் தேர்தல்நடத்த இயலும் என்று கூறுகிறது.

சட்டக் கமிஷனின் 117ஆவது அறிக்கையில் ஒரு மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்த அடுத்த 6 மாதங்களில் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தவேண்டி வரும் என்றால் அந்த சூழ்நிலையில் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும்  ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தலாம். ஆனால் சட்டமன்றதேர்தல் முடிவை ஆறுமாதம் கழித்து அதாவது அந்த சட்டமன்றத்தின் ஆட்சிகாலம் முடிந்த பின்புதான் அறிவிக்க வேண்டும் என கூறுகிறது. இதுஅனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நடத்த இயலும் என்று கூறுகிறது. இந்த வரிகள் மிகவும் தந்திரமானவை. காரணம், இந்த முடிவை மாநிலக் கட்சிகள் ஒருபோதும் ஒத்துக்கொள்ளாது. சில மாநிலங்களில் ஆட்சி காலத்தை நீட்டிக்க முடியாது. காரணம் அங்கு ஆட்சி காலத்தை குறைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கலாம்.

இங்கிலாந்தில் உள்ளது போல இந்தியாவிலும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு முழுமையாக 5 வருடம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற சட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். ‘ஃபிக்ஸ்டு டேர்ம் பார்லிமெண்ட் ஆக்ட் 2011’-இன் படி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் என்பது அவற்றின் ஆட்சி காலம் முழுமையாக முடிவதற்கு  முன்பு நடத்தப்பட வேண்டும் எனில் இரு சபைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பேர் அதை ஆதரிக்க வேண்டும் அல்லது அரசின் மீது  நம்பிக்கை இல்லாத் தீர்மானம் முன்மொழியப்பட்டிருக்க வேண்டும். அப்போது மாற்று அரசாங்கம் முடிவு செய்யப்படாதபட்சத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதை பரிந்துரைக்கலாம் என கூறுகிறது. இந்திய சட்ட கமிஷன் சில நியதிகளை 198A-இன் கீழ் பரிந்துரைக்கிறது.

ஒருமுறை நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த இரண்டு ஆண்டு காலத்துக்கு குறிப்பிட்ட அந்த சட்டமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியாது. ஒரு தனிப்பட்ட நபரின் மேல் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவரப்பட்ட வேண்டுமானால் அந்த தீர்மானம் மற்றும் ஒருவர் மீது நம்பிக்கையை தெரிவிக்க வேண்டும். இதே விதிமுறைகளை சட்டமன்றத்தின் சபாநாயகர்கள் சட்டசபை விதிமுறைகளில் உருவாக்கலாம்.

புதிய நடைமுறையின் கீழ், ஒரு சட்டசபையோ/நாடாளுமன்றமோ பிரதமர் அல்லது முதல்வரை தேர்வு செய்ய வேண்டும். ஏனனில் அரசு ஒரு குரிப்பிட்ட காலத்துக்கு தொடர வேண்டும். இது அத்தனை எளிதல்ல. கட்சி தாவல் தடை சட்டத்தை மாற்றி அமைத்து ஒருவர் கட்சி அமைப்புக்கு அப்பால் ஒருவரக்கு வாக்கு செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த குழுவின் பரிந்துரைப்படி, இடைக்கால தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசு 5 ஆண்டுகளுக்கு ஆள முடியாது. அந்த இடைக்கால அரசின் காலம் வரையே ஆள  முடியும்.

அரசியலமைப்பு சட்டத்தில் இது அமல்படுத்தப்பட்டாலும்  அனைத்து மாநிலங்களும் எந்த சட்டசிக்கலும் இன்றி இதை ஒத்துக்கொண்டால் மட்டுமே சாத்தியம் என இந்திய சட்ட கமிஷன் கூறுகிறது.

ஒருவேளை ஒரு அரசு கவிழ்ந்து விட்டால், அடுத்த தேர்தல் நடக்கும்வரை குடியரசு தலைவர் அரசை வழிநடத்தலாம். மாநிலமாக இருப்பின் ஆளுநர் வழிநடத்தலாம். ஆனால் இந்த யோசனையும் நிராகரிக்கப்படும். ஆளுநர்  மற்றும் குடியரசு தலைவர்  குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் பாகுபாட்டுடன் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தினால் இந்த யோசனையும் நிராகரிக்கப்படுகிறது.

சட்டகமிஷனின் முன்வரைவு குறிப்பிடுவது யாதெனில், முதல் கட்டமாக, நாடாளுமன்ற தேர்தல் 2019 நடக்கும் அதே நேரத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும்  மாநில அரசுகள் ஒரே நேரத்தில் தேர்த்லை நடத்தலாம். அது 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலின் போதுமற்ற மாநிலங்களில் ஒரே தேர்தல் கொண்டுவரப்படலாம் என பரிந்துரைக்கிறது. இதுகுறித்து ஒரு பேட்டியில் கூறிய  தலைமை தேர்தல் ஆணையர், ஓம்பிரகாஷ் ராவத், “ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை நடைமுறைப்படுத்தவும் தயாராகவும் நிறைய காலம் தேவைப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்திலும் மக்கள் பிரதிந்தித்துவ சட்டம் 1951 மற்றும் தொடர்புடைய மற்ற சட்டங்களில் உரிய மாற்றத்தைக் கொண்டு வந்த பிறகே இதை செயல்படுத்த முடியும். ஆனால் அச்சட்டங்களின்னும் உருவாக்கப்படவில்லை. காரணம் அனைத்து அரசியல்  கட்சிகளையும் ஒருங்கிணைத்துஆலோசனை செய்ய வேண்டும்’’ என்கிறார் ராவத். எதிர்காலத்தில்   ஒரே நேரத்தில் தேர்தல் என்பது அத்தனை தூரம் எளிதல்ல என்கிறார் ராவத், நடைமுறை சிக்கல்களை புரிந்துகொண்டபின். ராவத்தின் கருத்து தொடருமா அல்லது பாஜகவின் கருத்து தொடருமா என்பதை பொருத்திருந்துதான்பார்க்க வேண்டும்.

(தொடரும்)

Share the Article

Read in : தமிழ்

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival