English தமிழ்

Share the Article

தமிழகத்தில் உறுப்புமாற்று சிகிச்சையை முறைப்படுத்திய மருத்துவர்களில் முக்கியமானவர் டாக்டர் அமலோற்பாவநாதன் ஜோசப். இது தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரு திட்டம் முறை என்று கூறப்படுகிறது. இருப்பினும், தமிழகத்தில் உருப்பு தானத்துக்காக எடுக்கப் படும் பல இதயங்கள் வெளிநாட்டினருக்கு பொருத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இதுகுறித்து டாக்டர் அமலோற்பாவநாதனிடம் உரையாடினோம். அதிலிருந்து….

தமிழகத்தில் எடுக்கப்படும் 25% இதயஙகள் வெளிநாட்டினருக்கு பொருத்தப்படுகிறதா?
அப்படி இருக்கலாம். ஆனால் இதில் எந்த தவறும் இல்லை. தமிழகத்தில் சட்டத்துக்குப்புறம்பான உடல் உறுப்பு தான மோசடி நடப்பதாக எனக்குத்தெரியவில்லை.

டாக்டர் அமலோர்பாவனாதன் ஜோசஃப்

இதயமாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக உள்நாட்டவர் ஆயிரக்கணக்காணவர்கள் காத்திருக்கிறார்களல்லவா?
உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்காக மொத்தம் 5,000 பேர் காத்திருக்கிறார்கள் இந்தியா முழுவதும். இதில் இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக 150 பேர் மட்டுமே காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் 50 பேர் இருக்கலாம். எனவே மூளைச் சாவடைந்த ஒருவரின் இதயம், தமிழ்நாடு அல்லது இந்தியாவில் இருக்கும் ஒருவருக்குபொருந்தி அமையும் சூழ்நிலை இல்லாமல் இருல்க்கலாம். அதேவேளையில் வெளிநாட்டினருக்கு பொருத்துவதற்காக சூழ்னிலை அமையலாம், இது சாதாரணமானதும் கூட.

இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவை ஏன் குறைவாக உள்ளது?
இந்த மாற்று அறுவைச் சிகிச்சையின் வெற்றி சதவிகிதம் குறைவாக உள்ளது. அதனால் மருத்துவர்கள் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சையை பரிந்துரை செய்வதில்லை. அமெரிக்காவில் கூட இதில் பெரிய மாற்றம் இல்லை. இதயம் மாற்று சிகிச்சை சமீபமாக கொஞ்சம்அதிகரித்து வருகிறது. ஆனால், நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சையில் பெரிய வெற்றி இல்லை. ஆகையால் மருத்துவர்கள் மருந்து மூலமேகுணப்படுத்த முயல்கின்றனர், அதுவும் வயதானவர்களுக்கு நுரையீரல் உறுப்பு மாற்று பரிந்துரை செய்யப்படுவதில்லை.

பிரகு வெளிநாட்டினர் இங்கு யேன் இதயம் மாற்று அறுவை சிகிச்சைக்கு வருகின்றனர்?
ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேணும்ண்டும். இங்கு வருபவர்கள் அமெரிக்கர்களோ மேற்கத்தியர்களோ கிடையாது. உக்ரைன், பாலஸ்தீனம்பொன்ற நாடுகளில் உறுப்பு மாற்றுசிகிச்சைக்கான உள்கட்டமைப்பு வசதி இல்லாத காரணத்தால் இங்கு வருகிறார்கள். ஒருவேளை அவர்களுக்குஅமெரிக்கா செல்வது அதிக செலவீனமுடையதாக இருக்கலாம்.

மருத்துவமனைகள் ஒதுக்கீட்டில் தவரு ஏதும் செய்யவில்லையா?
பிழைகள் நடக்காத வழிமுறைகளே இல்லை. எங்கேனும் சில விதிமீறல்கள் நடந்திருக்கலாம். இருப்பினும் உறுப்பு மாற்று திட்டத்தில் பொதுவாக விதிமுறைப்படிதான் விநியோகம் நடைபெறுகிறது. இதயம் மற்றும் நுரையீரலுக்காக காத்திருப்பவர்களுக்கு கிடைத்துக்கொண்டுதான்உள்ளது. ஒருவேளை யாருக்காவது இந்த உறுப்புகள் கொடுக்கப்படாமல் மறுக்கப்பட்டிருந்தால் அது குறித்த புகார் செய்வதற்கான வழிமுறைகள்இருக்கின்றன. எனக்குத் தெரிந்தவரை, இதுவரை ஒரு புகார் கூட வரவில்லை. இதுகுறித்து வாட்ஸ் அப் குரூப்பில் பேசிக்கொண்டிருக்கும் மத்திய அரசுஅதிகாரிகள், இந்த விஷயம் குறித்து மாநில அரசிடம் தனியாக கேள்வி எழுப்பியிக்க வேண்டும். அதற்குப் பதிலாக இந்த விஷயம் பரபரப்புக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.

ஆரசாலும் பல்வேரு மருத்துவர்களால் உருவாக்கப்பட்ட ரெஜிச்ட்ரி தொண்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?
இந்த விஷயத்தில் தமிழ் நாட்டு திட்டம் குறித்த வரலாறு தெரிந்திருக்க வேண்டும். 2008ஆம் ஏற்பட்ட சுனாமி பேரழிவுக்குப்பிறகு பலர் கடற்புரத்தில் இருந்து மீனவர்கள் இடம் பெயர்ந்துவிட்டார்கள். மீனவர்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. ஆகையால் அவர்களில் பலர் தங்கள் உறுப்புகளை விற்கும் நிலையில் உள்ளனர். இது பொது மக்களின் பார்வைக்கு வந்தது. அதையடுத்து நிபுணர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இறந்தவர்களின் உடல்களில் இருந்து உறுப்புகளை பெறும் திட்டம் உருவாக்கப்பட்டால் பலர் பயனடைவார்கள் என்பதால் இத்திட்டத்தை உருவாக்கினோம். இத்திட்டத்தின் முதல் ஆலோசகராக நான் இருந்தேன். அதன்படி, நாங்கள் ஒவ்வொரு மருத்துவமனையையும் அழைத்து காத்திருப்போர் பட்டியல் குறித்து கேட்டறிந்தோம். எப்போதெல்லாம் ஒருமூளைச்சாவு ஏற்படுகிறதோ அல்லது உறுப்புகள் கிடைக்கிறதோ உடனே வெளிப்படையான சட்டதிட்டங்களின் அடிப்படையில் அவற்றைவழங்கினோம். அதுகுறித்து எந்த புகாரும் எழவில்லை. அதன்பிறகு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இந்த திட்டம் வெற்றிகரமாக நடப்பதைக்கண்டார். நாங்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் இருந்து பணத்தைபெற்று அதை அரசாங்க ட்ரெசரியில் டெபாசிட் செய்து பிறகு உரியவர்களுக்கு வழங்குகிறோம் என்பதை அறிந்த ஜெயலலிதா இதில் வரும் சிக்கல்கலை பார்த்து இந்த அமைப்பு அரசாங்கத்திலிருந்து விடுப்பட்டு சுயாதீனமாக செயல்பட வெண்டும் என்று கருதினார்.

அதனால் அவர் இந்த திட்டத்தை தன்னாட்சி பெற்ற சங்கமாக மாற்றச் சொன்னார்.அதன்படி இந்த திட்டம், ‘தமிழக உடல் உறுப்பு மாற்று ஆணையமாக’ உருவாக்கப்ப்பட்டது. இது ஒரு பொதுநலச் சங்கம். இதற்கென்று சங்க குழு இருக்கும்.அக்குழுவின் தலைவவராக முதலமைச்சர் இருப்பார். இதன் நிர்வாக கமிட்டி, தினசரி நடப்புகளை கவனிக்கும். அந்தக் கமிட்டியில் இரண்டு தொண்டு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. நான் இந்த அமைப்பின் செயலராக இருந்த போது ஒரு புகாரும்வந்தது இல்லை.


Share the Article