English தமிழ்

Share the Article

எஸ்.சி /எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாகக் கையாள்வது குறித்தும்  தேவந்திர குல வேளாளர்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேறுவது   அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்குமா என்றும்  விவாதங்கள் எழுந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், கச்சநத்தத்தில் நடைபெற்ற சாதிய படுகொலை அண்மையில் நடந்த படுகொலைகளில்மிகவும் மோசமான படுகொலையாகும். கடந்த மேமாதம் 28ஆம் தேதி, சாதிய ஆதிக்கவாதிகளால் நிகழ்த்தப்பட்ட இப்படுகொலையில்,  தேவேந்திர குல வேளாளர்களைஅகமுடையார் இனத்தை சேர்ந்தவர்கள் வன்மையாகத் தாக்கியதில் மூவர் மரணமடைந்தனர், ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

இறந்தவர்களில் சண்முகநாதன் என்கிற எம்.பி.ஏ பட்டாதாரியும் அடக்கம். இவருக்கு கச்சநத்தம் கிராமத்தில் சொந்தமாக நிலம் உண்டு. மேலும், சண்முகநாதனின் பெற்றோர் ஆசிரியர்கள். ‘’சண்முகநாதன் நன்கு படித்த ஒருவர். அவர்  எங்கள் அனைவருக்கும்பிடித்தமானவர். அகமுடையார்களில் சிலர் கஞ்சா கடத்துவதற்கு எதிராக குரல் கொடுத்தார்; தட்டிக் கேட்டார். அதற்கு பழிதீர்க்கும் விதமாக இப்படுகொலையை நிகழ்த்தியுள்ளனர்’’ என சண்முகநாதனின் உறவினர் சாந்தா தெரிவித்தார்.

‘’இது ஒரே நாளில் நடந்தது அல்ல, பல நாட்களாக அவர்கள் சேர்த்து வைத்த  வன்மத்தின் வெளிப்பாடு’’ என்கிறார் சாந்தா. ‘’கோயில் திருவிழா முடிந்து இரண்டாவது  நாள் தேவந்திரனும் பிரபாகரனும் டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தனர்.  சுமன்(முதன்மை  குற்றவாளி) அவர்களிடம் வந்து, ‘’கோயில் திருவிழாவில் ஏன் அகமுடையார்களுக்கு உரிய மரியாதை தரவில்லை என்று கேட்டார். சுமனுக்கு எதிரில் அமர்ந்து அவர்கள் டீ குடித்தது, அவருக்கு திமிராகத் தெரிந்துள்ளது’’ என்கிறார் சாந்தா.

கச்சநத்தம் கிராமத்தில், தேவேந்திர குல வேளாளர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். அதாவது அங்கு 45 தேவேந்திர குல வேளாளர் குடும்பங்களும், 5 அகமுடையார் குடும்பங்களும் வசித்து வருகின்றன. ஆனால் கச்சநத்தத்தை சுற்றியுள்ள கிராமங்களில்அகமுடையார்கள் ஆதிக்கம் அதிகம். தேவேந்திர குல வேளாளர்கள் கூறும்போது, ’’எங்களுக்கு சொந்தமாக நிலம் இருந்தாலும் நாங்கள் ஆதிக்க சாதியினர்நிலத்தில் போய் வேலை செய்ய வேண்டும். இது சாதிய ஆதிக்கத்தின் வெளிப்பாடு. எங்கள் சமூகத்தில் பலர்நன்கு படித்துள்ளனர், நன்றாக உள்ளனர். பொறாமையின். காரணமாகவே இந்த தாக்குதல் நடந்தது’’ என்கிறார் சாந்தா.

கச்சநத்தம் தேவேந்திர குல வேளாளர்கள் விஷயத்தில்,   பட்டியல் இனத்தில்  தேவேந்திர குல வேளாளர்கள் இருப்பதால்  தாக்குவது நடக்கிறது. அதனால்  அவர்கள் பட்டியல் சாதியை விட்டு வெளியேற வேண்டும் என்று டாக்டர்.கிருஷ்ணசாமி கூறும் கருத்தாக்கம்உண்மை நிலைக்கு மாறாக உள்ளது. அங்கு களத்தில் பணியாற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தேவேந்திர குல வேளாளர்கள் சமூகத்தில் முன்னேறி வரும்போது, அவர்கள் ஆதிக்க சாத்யினரால் கொடூரமாகத் தாக்கப்படுகின்றனர். இந்நிலையில் எப்படி  பாதுகாப்புக்காரணத்தை முன்னிறுத்தி சாதியை விட்டு வெளியேற முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

‘’எஸ்.சி/எஸ்.சி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், முதல் தகவல் அறிக்கை தயாராகியுள்ளது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு 15 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது. மேலும் தேவேந்திர குல வேளாளர் குடும்பங்களுக்கு பாதுகாப்புஅளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், இவ்விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்ட  காவல்துறையினர் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கச்சநத்தம் படுகொலை, எஸ்சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டதின் கீழ் வரும் என்பது தெள்ளத் தெளிவு’’ என்கிறார்  ஓய்வுபெற்ற  ஐஏஎஸ் அதிகாரியான  கிருஸ்துதாஸ். காந்தி.

‘’மே 28ஆம் தேதி நடந்த படுகொலை மிக சமீபத்தில் நடந்தது. ஆனால், அதற்கு முன்பு சட்டக் கல்லூற்றியில் படிக்கும் மாணவர் ஒருவரின் கை வெட்டப்பட்டது’’ என்கிறார் இந்த வன்கொடுமைகளுக்கு எதிராக நடந்த போராற்ட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள்சிபிஎம் எம்.எல்.ஏ பால பாரதி. கடந்த காலங்களில் நடந்த வன்முறைகளில் போலீஸ் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என கச்சநத்தம் மக்கள்  புகார் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் நடந்த வன்முறைகளில் போலீஸ் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என கச்சநத்தம் மக்கள்  புகார் தெரிவிக்கின்றனர்.

படுகொலை நடந்த கச்சநத்தம் பகுதிக்கு டாக்டர். கிருஷ்ணசாமி வரவில்லை, ஆனால் அவரது கட்சியின் நிர்வகிகள் வந்தனர். ‘’சாதிவெளியேற்றம் குறித்த கிருஷ்ணசாமியின் கருத்தியல் சாரம் தெளிவற்றது. ஆனால் அவர் இது குறித்து மக்களிடம் ஒரு உரையாடலைநிகழ்த்தியிருந்தால் அது மாறுபட்ட விஷயமாக இருந்திருக்கக் கூடும். ஆனால் அவர் அதை செய்யவில்லை’’ என்கிறார் கிருஸ்துதாஸ் காந்தி.

சாதி வெளியேற்றம் குறித்து தேவேந்திர குல வேளார்களிடையே பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. உட்பிரிவான பள்ளர் இனத்தை, தேவந்தேர குல வேளாளருடன் இணைப்பது போதுமானது. அது சுயமரியாதைக்கு வழிவகுக்கும். ஆனால் சாதியை விட்டுவெளியேறுவது எந்த வகையிலும் உதவாது என்கின்றனர் அம்மக்கள்.   டக்டர் கிருஷ்ணசாமி மக்களிடம் இருந்து உரையாடலைத் தொடங்க வேண்டும்.


Share the Article